கடைசி பெஞ்ச்சிலுள்ள அரக்கர்களின் அரசன்

விக்கிநூல்கள் இலிருந்து


"கடைசி பெஞ்ச்சில் அரக்கர்களின் பேரரசர்" என்பது ஒரு ஜப்பானிய நாவல் தொகுப்பு. இதை இயற்றியவர் மிசுகி சௌடாரோ மற்றும் விளக்கப்படம் வரைந்தது இடோ சோயிச்சி. இது மொத்தம் 13 தொகுப்புகளை அடக்கியது. ஜப்பானின் ஹெச் ஜெ புன்கோ லேபில் இந்த புத்தகத்தை பிரசுரம் செய்தது. இந்த கதை மங்கா மற்றும் அனிமேஷன் தொடராகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

கதைச் சுருக்கம்[தொகு]

"வருங்கால பணி ........ அரக்கர்களின் அரசன்."

சாய் அகுடோ, சமூகத்திற்கு உதவுவதற்கும் நாட்டின் சக்திவாய்ந்த மந்திரவாதி ஆவதற்கும், கான்ஸ்டன்ட் மாயாஜால கல்விக்கழகத்தில் சேர்ந்தான். ஆனால், முதல் நாளே ஒரு கொடூரமான முன்கணிப்பு அவனுக்கு வழங்கப்பட்டது. அதன் காரணமாக அவனுடன் படிக்கும் ஒரு பெண் அவனை வெறுக்கிறாள்; மற்றொரு மர்மமான பெண் அவனை அரவணைக்கிறாள்; நாட்டின் உயர் அதிகாரிகள் அவனை கண்காணிப்பதற்காக ஒரு செயற்கை மனிதனை அனுப்புகிறார்கள்; அவனது பள்ளி வாழ்வே ஒரு மிகப்பெரிய குழப்பத்திற்கு உள்ளாகிறது.......