குறுந்தொகை
Wikibooks தளத்திலிருந்து
இங்கு குறுந்தொகைப் பாடல்கள் உள்ளிடப்படும்...
1. கடவுள் வாழ்த்து
- தாமரை புரையும் காமர் சேவடிப்
- பவளத் தன்ன மேனித் திகழொளிக்
- குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
- நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேல்
- சேவலங் கொடியோன் காப்ப
- ஏமம் வைக லெய்தின்ற லுலகே.
-பாரதம் பாடிய பெருந்தேவனார்.
2. குறிஞ்சி - தோழி, காந்தள் கையுறையை மறுத்தது
- செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
- செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
- கழல்தொடிச் சேஎய் குன்றம்
- குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.
-திப்புத் தோளார்.
3. குறிஞ்சி - தலைவன் கூற்று
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிகண்
இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய்
தொட்டுப் பயிறல் முதலாயின அவள் மாட்டு நிகழ்த்திக் கூடி, தனது
அன்பு தோற்ற நலம் பாராட்டியது
- கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
- காமம் செப்பாது கண்டது மொழிமோ
- பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
- செறியெயிற் றரிவை கூந்தலின்
- நறியவும் உளவோ நீயறியும் பூவே.
-இறையனார்.

