ஜில் ஜில் ஜிகர்தண்டா

விக்கிநூல்கள் இலிருந்து

ஜில் ஜில் ஜிகர்தண்டா என்பது ஒரு குளிர்பானமாகும். பரவலாக தமிழகத்தில் கிடைத்தாலும் மதுரைப்பகுதியே இந்த குளிர்பானத்திற்கு புகழ்பெற்றதாகும்.

தேவையானப் பொருட்கள்[தொகு]

  1. கடற்பாசி - 5 கிராம்
  2. பால் - 5 கிண்ணம்
  3. சர்க்கரை - 1 கிண்ணம்
  4. நன்னாரி சர்பத் - 1 கரண்டி
  5. பனிக்கூழ்(icecream) - 1 கிண்ணம்
  6. சவ்வரிசி - 1 சிறு கிண்ணம்

செய்முறை[தொகு]

  1. பாலை நன்கு காய்ச்சி, வேண்டியளவு சர்க்கரை சேர்த்து ஆறவிட்டு, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ச்சியாக்கவும்.
  2. ஜவ்வரிசியை பாலில் வேகவைத்து பிறகு ஆறவிடவும்.
  3. நீரில் ஊறவிட்டு பலமடங்கு பெருக்கிக் கொள்ளவும். கடற்பாசியை கழுவி சுத்தம் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கூழ்ம நிலைக்குக் கொண்டுவரவும்.
  4. ஒரு கண்ணாடிக் குவலையில் மேற்கூறியபடி தயாரித்த சவ்வரிசி, பால் இட்டு அதன் மீது நன்னாரி சர்பத் விட்டு நன்கு கலக்கி பனிக்கூழை இட்டால் ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்.


குறிப்பு: கடற்பாசிக்கு பதிலாக பாதாம் பிசினை பயன்படுத்தலாம்; நன்னாரி சர்பத்திற்கு பதிலாக ரோஸ் சிரப்பும் பயன்படுத்தலாம்; இதனுடன் சிறிது பால்கோவாவையும் சேர்த்து சுவையைக்கூட்டலாம்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=ஜில்_ஜில்_ஜிகர்தண்டா&oldid=10330" இலிருந்து மீள்விக்கப்பட்டது