திருக்கோத்தும்பி/உரை 73-76

விக்கிநூல்கள் இலிருந்து

கள்வன் கடியன் கலதியிவன் என்னாதே

வள்ளல் வரவர வந்தொழிந்தான் என்மனத்தே

உள்ளத் துறுதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந்

தௌ¢ளும் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.


பதப்பொருள் :

கோத்தும்பீ - அரச வண்டே! இவன் - இவன், கள்வன் - கரவு உடையவன், கடியன் - கொடுமையானவன், கலதி - கீழ்மகன், என்னாது - என்று எண்ணி ஒதுக்காமல், வள்ளல் - வரையாது வழங்கும் இறைவன், வரவர - நாளுக்குநாள், என் மனத்தே - என் மனத்தின்கண்ணே, வந்தொழிந்தான் - வந்து தங்கிவிட்டான், உள்ளத்து உறு - மனத்திற்பொருந்திய, துயர் - துயரம், ஒன்றொழியாவண்ணம் - ஒன்றுவிடாத படி, எல்லாம் - எல்லாவற்றையும், தௌ¢ளும் - களைந்து எறியும், கழலுக்கே - திருவடியினிடத்தே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

விளக்கம் :

கலதி - மூதேவி. அது, தாமத குணத்தை உடைமையைக் குறித்தது. தீமை கருதாது வாரி வழங்குகின்றானாதலின், இறைவனை ‘வள்ளல்’ என்றார். இறைவன் மனத்தை இடமாகக்கொண்டு தங்கினமையால் மனத்தைப்பற்றிய துயரம் எல்லாம் விலகும் என்பார், ‘துயரொன்றொழியா வண்ணமெல்லாம் தௌ¢ளும்’ என்றார்.

இதனால், இறைவன் திருவடியைப் பெற்றார்க்கு மனக்கவலை தீரும் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருக்கோத்தும்பி/உரை_73-76&oldid=2368" இலிருந்து மீள்விக்கப்பட்டது