தொல்காப்பியம்
ஆசிரியர்: தொல்காப்பியர்
மூலப்பதிப்பு: மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்
விக்கி கட்டுரை: தொல்காப்பியம்
பொருளடக்கம் |
[தொகு] சிறப்புப்பாயிரம்
- வட வேங்கடம் தென் குமரி
- ஆயிடைத்
- தமிழ் கூறும் நல் உலகத்து
- வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
- எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5
- செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
- முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
- புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
- நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
- அறம் கரை நாவின் நான்மறை முற்றிய 10
- அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
- மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
- மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
- தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
- பல் புகழ் நிறுத்த படிமையோனே. 15
[தொகு] முதல் பாகம் - எழுத்ததிகாரம்
- நூல் மரபு
- மொழி மரபு
- பிறப்பியல்
- புணரியல்
- தொகை மரபு
- உருபியல்
- உயிர் மயங்கியல்
- புள்ளி மயங்கியல்
- குற்றியலுகரப் புணரியல்
தமிழெழுத்து நான்கு வகைப்படும்:
உயிரெழுத்து (அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ) = 12 மெய்யெழுத்து (க்,ச்,ட்,த்,ப்,ற்,ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) = 18 உயிர் மெய்யெழுத்து (க்+அ=க, தொடங்கி ள்+ஔ=ளௌ வரை 12x18) = 216 ஆய்த எழுத்து (ஃ) = 1, முறையே மொத்தம் 247. தொல்காப்பிய மரபின்படி, சார்பிற்றேற்றம் - 3, அளபெடை - 7, மொத்தம் = 256 அ, இ, உ, எ, ஒ - 1 மாத்திரை குற்றெழுத்து ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ - 2 மாத்திரை நெட்டெழுத்து 3 மாத்திரை அளவி ஒலி இல்லை. நீட்டம் தேவை என்றால் நீட்டி ஒலிக்கலாம் என்வது மரபு. மாத்திரை என்பது கண் இமைக்கும் நேரம் ஆகும். உயிர் மெய்யோடு சேரும் போது, இயல்பு திரியாது. மெய்யின் அளபு அரை மாத்திரை ஆகும். புள்ளியுடன், அகரம் சேர்ந்து ஒலித்த்ல், ஏனைய உயிருடன் சேர்ந்து ஒலித்தல் முறையாகும். வல்லெழுத்து என்ப க ச ட த ப ற. மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன. இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள. இவ்வகை எழுத்துக்கள் மெய்ம்மயக்கும். ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் வரும். க ச ப என்னும் மூன்று எழுத்தும் முன்னர் வரும். ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும். ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் வந்தால் தம்தம் இசைகள் ஒலிக்கும். ண னஃகான் முன்னர் க ச ஞ ப ம ய வ ஏழும் வரும். ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் யஃகான் நிற்றல் மெய் வரும். மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும். ய ர ழ என்னும் புள்ளி முன்னர் முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும். மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும் தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே. அ இ உ அம் மூன்றும் சுட்டு. ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. --Amk in 2000 15:50, 26 மார்ச் 2010 (UTC)ஆ.முத்துக்குமார்.
[தொகு] இரண்டாம் பாகம் - சொல்லதிகாரம்
- கிளிவியாக்கம்
- வேற்றுமையியல்
- வேற்றுமை மயங்கியல்
- விளிமரபு
- பெயரியல்
- வினையியல்
- இடையியல்
- உரியியல்
- எச்சவியல்
[தொகு] மூன்றாம் பாகம் - பொருளதிகாரம்
- அகத்திணையியல்
- புறத்திணையியல்
- களவியல்
- கற்பியல்
- பொருளியல்
- மெய்ப்பாட்டியல்
- உவமயியல்
- செய்யுளியல்
- மரபியல்