பிடித்த பத்து/உரை 13-15

விக்கிநூல்கள் இலிருந்து

அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே

பெருந்திறல் அருந்தவர்க் கரசே

பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த

போகமே யோகத்தின் பொலிவே

தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த

செல்வமே சிவபெரு மானே

இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவ தினி¢யே.

பதப்பொருள் :

அருள் உடைச் சுடரே - அளியையுடைய சுடரே, அளிந்தது ஓர் கனியே - பக்குவப்பட்ட ஒப்பற்ற கனியே, பெருந்திறல் - பேராற்றலையுடைய, அருந்தவர்க்கு - அருமையான தவத்தினையுடையோர்க்கு, அரசே - அரசனே, பொருள் உடைக் கலையே - மெய்ப்பொருளை விளக்கும் நூலானவனே, புகழ்ச்சியைக் கடந்த போகமே - நூல்கள் புகழும் புகழ்ச்சிக்கு அடங்காத இன்பமே, யோகத்தின் பொலிவே - யோகக் காட்சியில் விளங்குகின்றவனே, தெருள் இடத்து - தௌ¤வாகிய இடத்தையுடைய, அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே - அடியார்களது சித்தத்தில் தங்கிய செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, இருள் இடத்து - இருள் நிறைந்த இவ்வுலகில், உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்; இனி எங்கு எழுந்தருளுவது நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?

விளக்கம் :

செங்காய் முழுச்சுவை தாராது ஆதலின், இறைவனை 'அளிந்ததோர் கனியே' என்றார். அவனது புகழைச் சொற்களால் அளவிட்டுச் சொல்ல முடியாதாதலின், 'புகழ்ச்சியைக் கடந்த போகமே' என்றும், ஆனால் அனுபவத்தில் விளங்குபவன் ஆதலின், 'யோகத்தின் பொலிவே' என்றும் கூறினார். அக்காட்சி சித்தம் தௌ¤ந்த போது இவ்வுலகிலேயே உண்டாமாதலின், 'இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என்றார்.

இதனால், இறைவன் அடியார் மனம் கோயிலாகக் கொண்டு அருளுவான் என்பது கூறப்பட்டது.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பிடித்த_பத்து/உரை_13-15&oldid=2383" இலிருந்து மீள்விக்கப்பட்டது