யாவாக்கிறிட்டு/முன்வடிவம்

விக்கிநூல்கள் இலிருந்து

யாவாக்கிறிட்டில் பொருட்களை உருவாக்கும் போது பொருள் கட்டுநருக்குள் (constructor) செயலிகளை வரையறை செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. முதலாவது ஒவ்வொரு பொருள் உருவாக்கப்படும் போது அச் செயலி உருவாக்கப்படுகிறது. இது நினைவு மேலாண்மைக்கு உகந்து அல்ல. கட்டுநருக்குள் உள்ளே உள்ள செயலிகளை இலகுவாக override செய்ய முடியாது. இது போன்ற சிகல்களைத் தீர்க்க யாவாக்கிறிட்டில் முன்மாதிரி (prototype) பயன்படுகிறது.

யாவாக்கிறிட்டில் ஒரு பொருள் உருவாக்கப்படும் பொழுது அதற்கு தானாக முன்வடிவம் அல்லது புரோட்ரோரைப் (prototype) என்ற ஒரு பண்பு (property) இருக்கும். தொடக்கத்தில் இந்த முன்வடிவம் ஒரு வெற்றுப் பொருள். இதற்கு உறுப்பினர்களை (பண்புகள், செயலிகள்) நாம் சேர்க்க முடியும். இவை அந்த பொருளின் எல்லா instances பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.

எடுத்துக்காட்டு[தொகு]

var நபர் = function (பெயர், வயது, தொழில்){
	this.பெயர் = பெயர்;
	this.வயது = வயது;
	this.தொழில் = தொழில்;
	this.பேசு = function (){
		alert ("எனது பெயர் " + this.பெயர்);
	}		
}

நபர்.prototype.படி = function(){
	alert (this.பெயர் + " படிக்கிறார்..");
}

var கண்ணன் = new நபர்('கண்ணன்', '25', 'மருத்துவர்');
கண்ணன்.படி();


வெளி இணைப்புகள்[தொகு]