விசுவல் பேசிக்/அறிமுகம்

விக்கிநூல்கள் இலிருந்து

பேஸிக்கின் வழிவந்த மொழியே விசுவல் பேசிக் ஆகும் இது மைக்ரோசாப்டின் மிகவும் வெற்றிகரமான ஒருங்கிணைக்கபட்ட விருத்திச் சூழல்களில் ஒன்றாகும் (IDE). இது டாஸ் இயங்குதளத்தில் உருவாக்கப்பட்ட பேசிக் இண்டபிறிட்டரைத்(Interpreter) தொடர்ந்து உருவாக்கப்பட்டதாகும். மைக்ரோசாப்ட் GWBASIC (Graphic With Basic) , QBASIC (Quick Basic) போன்ற பதிப்புக்களும் போர்லாண்ட் நிறுவனத்தின் ரேபோபேஸிக் பதிப்புக்களும் வெளிவந்தது.

வரலாறு[தொகு]

பேசிக் - BASIC (Beginners All-purpose Symbolic Instruction Code). பில்கேட்ஸ் பேஸிக் நிரலை மைக்ரோ கணினிகளுக்கு உருவாக்கியதே மைக்ரோசாப்ட் (மைக்ரோ கம்பூயுட்ர சாப்ட்வேர்) என்கின்ற உலகின் மிகப் பெரிய கணினி வணிக நிறுவனத்தின் வெற்றியைத் தீர்மானித்தது.

போட்டி[தொகு]

இதனது பிரதான போட்டியாளாராகப் போர்லாண்ட் நிறுவனத்தாரின் பஸ்கால்(அல்லது பாஸ்கல்) மொழியின் வழிவந்த போர்லாண்ட் டெல்பியே விளங்கியதெனினும் மைக்ரோசாப்டின் மென்பொருட்களைச் சந்தைப் படுத்தும் வல்லமையினால் விஷ்வல் பேஸிக்கே வர்தக ரீதியா மென்பொருட்களைத் தயாரிப்பதிலும் ஏனைய மென்பொருட்களை உருவாக்குவதில் மிகப் பிரதானமான மொழியாக விளங்கியது. ஆரம்பத்தில் பேஸிக் மொழியை உருவாக்கியபோது அந்நிரலைக் கம்பைல் பண்ணி டாஸ் (DOS) இயங்குதளத்தில் தனித்தியங்கும் கோப்பை உருவாக்கும் வசதியிருக்கவில்லை இதனை அவதானித்த போர்லாண்ட் நிறுவனம் இதற்குப் பொட்டியா ரேபோ பேஸிக் என்னும் நிரல்களைக் கம்பைல் பண்ணி தனித்தியங்கும் கொப்புக்களாகமாற்றும் வசதியுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட விருத்திச் சூழலை அளித்தனர். விண்டோஸ் பணிச்சூழலில் மைக்ரோசாப்ட் விஷ்வல் பேஸிக்கை வெளிவிட்டதும் பழைய பதிப்பான ரேபோ பேஸிக் தயாரிப்பைக் கைவிட்டு பஸ்கால் வழிவந்த டெல்பி என்ற விண்டோஸ் பணிச்சூழலுக்கேற்ற ஒருங்கிணைக்கப் விருத்திச் சூழலைத் தயாரித்தனர். விருத்தியாளர்களை போர்லாண்ட் தயாரிப்புக்களைப் பாவிக்கும் வண்ணம் போர்லாண்ட் டெல்பி இலவசப் பிரத்தியேகப் பதிப்பொன்றை வெளிவிட்டதை அடுத்து மைக்ரோசாப்ட்டும் மாணவர்களுக்காக அல்லது கற்பதற்கு என்றே விஷ்வல் பேஸிக் வேக்கிங்க் மாடல் எடிசன் பதிப்பொன்றை வெளியிட்டனர். இந்நூலில் வேக்கிங் மாடல் எடிசனைப் பின்பற்றியே உருவாக்கப் பட்டுள்ளது. இதில் விண்டோஸ் பணிச்சூழலில் தனித்தியங்கும் *.exe கோப்புக்களை மாற்றும் வசதியோ மைக்ரோசாப்ட் டெவலப்பர் நெட்வேக் CD இல் இருந்து உதவிகளைப் பெறமுடியாது. டெல்பியிற்கான போட்டியைத் தொடர்ந்தும் தொடர விரும்பாத மைக்ரோசாப்ட் இதன் பிரதான விருத்தியாளாரான அண்டரஸ் ஹிஜஸ்பேக்கை மைக்ரோசாப்டின் பிரதான .நெட் பணிச்சூழலை விருத்தி செய்யும் அதிகாரியாக போர்லாண்டில் இருந்து பெற்றுக் கொண்டனர்.

விசுவல் பேசிக் பணிச்சூழல்[தொகு]

விசுவல் பேசிக்கை வேக்கிங் மாடலை பதிவிறக்கம் செய்யபின்னர் install.exe ஐத் தெரிவு செய்து நிறுவிக் கொள்ளவும். இது மாணவர்களுக்கான பதிப்பென்பதால் இது கடவுச் சொல் எதனையும் கேட்காது.

நீங்கள் New ஐத் தெரிவு செய்து புதிய திட்டமொன்றை ஆரம்பிக்கலாம். விஷ்வல் பேஸிக் பதிப்புக்களைப் பொறுத்து இருக்கின்ற ஐகான்களின் எண்ணிக்கை மாறுபடும் அதன் செயற்பாடுகளும் வேறுபடும். இந்நூலில் Standard.exe ஐ உருவாக்குவது பற்றியே பார்ப்போம். விஷ்வல் பேஸிக் வேக்கிங் மாடல் எடிசனில் *.exe கோப்பை உருவாக்க முடியாதெனினும் இதையே தேர்ந்தெடுக்கவும். விஷ்வல் பேஸிக் வேக்கிங்க் மாடல் எடிசன் ஒருங்கிணைந்த விருத்திச் சூழல்


விஷ்வல் பேஸிக் ஒருங்கிணைந்த விருத்திச் சூழலானது

  • பிரயோகத்தை (Application) ஐ உருவாக்கவுதவும் ஓர் வெற்று போம் (Form)
  • புரஜெக்ட் விண்டோவில் நீங்கள் உருவாக்கிய கோப்புக்களைப் பார்வையிடலாம்.
  • புரப்பட்டீஸ் (Properties) விண்டோவில் நீங்கள் உருவாக்கிய பல்வேறுபட்ட கண்டோலகள் மற்றும் ஆப்ஜெக்டின் புரப்பட்டீஸ் போன்றவற்றைப் பார்கலாம்.

பதிவிறக்கம்[தொகு]

"https://ta.wikibooks.org/w/index.php?title=விசுவல்_பேசிக்/அறிமுகம்&oldid=6217" இலிருந்து மீள்விக்கப்பட்டது