1.6 உருபியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > எழுத்ததிகாரம்
- அ ஆ உ ஊ ஏ ஔ என்னும்
- அப் பால் ஆறன் நிலைமொழி முன்னர்
- வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை. 1
- பல்லவை நுதலிய அகர இறு பெயர்
- வற்றொடு சிவணல் எச்சம் இன்றே. 2
- யா என் வினாவும் ஆயியல் திரியாது. 3
- சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி
- ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடுமே. 4
- சுட்டு முதல் ஆகிய ஐ என் இறுதி
- வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே. 5
- யா என் வினாவின் ஐ என் இறுதியும்
- ஆயியல் திரியாது என்மனார் புலவர்
- ஆவயின் வகரம் ஐயொடும் கெடுமே. 6
- நீ என் ஒரு பெயர் நெடு முதல் குறுகும்
- ஆவயின் னகரம் ஒற்று ஆகும்மே. 7
- ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை. 8
- அ ஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு
- அத்தொடும் சிவணும் ஏழன் உருபே. 9
- ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை. 10
- சுட்டு முதல் வகரம் ஐயும் மெய்யும்
- கெட்ட இறுதி இயல் திரிபு இன்றே. 11
- ஏனை வகரம் இன்னொடு சிவணும். 12
- மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை. 13
- இன் இடை வரூஉம் மொழியுமார் உளவே. 14
- நூம் என் இறுதி இயற்கை ஆகும். 15
- தாம் நாம் என்னும் மகர இறுதியும்
- யாம் என் இறுதியும் அதன் ஓரன்ன
- ஆ எ ஆகும் யாம் என் இறுதி
- ஆவயின் யகர மெய் கெடுதல் வேண்டும்
- ஏனை இரண்டும் நெடு முதல் குறுகும். 16
- எல்லாம் என்னும் இறுதி முன்னர்
- வற்று என் சாரியை முற்றத் தோன்றும்
- உம்மை நிலையும் இறுதியான. 17
- உயர்திணை ஆயின் நம் இடை வருமே. 18
- எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும்
- எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும்
- ஒற்றும் உகரமும் கெடும் என மொழிப
- நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி
- உம்மை நிலையும் இறுதியான
- தம் இடை வரூஉம் படர்க்கை மேன
- நும் இடை வரூஉம் முன்னிலை மொழிக்கே. 19
- தான் யான் என்னும் ஆயீர் இறுதியும்
- மேல் முப் பெயரொடும் வேறுபாடு இலவே. 20
- அழனே புழனே ஆயிரு மொழிக்கும்
- அத்தும் இன்னும் உறழத் தோன்றல்
- ஒத்தது என்ப உணருமோரே. 21
- அன் என் சாரியை ஏழன் இறுதி
- முன்னர்த் தோன்றும் இயற்கைத்து என்ப. 22
- குற்றியலுகரத்து இறுதி முன்னர்
- முற்றத் தோன்றும் இன் என் சாரியை. 23
- நெட்டெழுத்து இம்பர் ஒற்று மிகத் தோன்றும்
- அப் பால் மொழிகள் அல் வழியான. 24
- அவைதாம்,
- இயற்கைய ஆகும் செயற்கைய என்ப. 25
- எண்ணின் இறுதி அன்னொடு சிவணும். 26
- ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம்
- எல்லா எண்ணும் சொல்லும் காலை
- ஆன் இடை வரினும் மானம் இல்லை
- அஃது என் கிளவி ஆவயின் கெடுமே
- உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே. 27
- யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய
- ஆய்த இறுதியும் அன்னொடு சிவணும்
- ஆய்தம் கெடுதல் ஆவயினான. 28
- ஏழன் உருபிற்குத் திசைப் பெயர் முன்னர்
- சாரியைக் கிளவி இயற்கையும் ஆகும்
- ஆவயின் இறுதி மெய்யொடும் கெடுமே. 29
- புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும்
- சொல்லிய அல்ல ஏனைய எல்லாம்
- தேரும் காலை உருபொடு சிவணி
- சாரியை நிலையும் கடப்பாடு இலவே. 30