1.8 புள்ளி மயங்கியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > எழுத்ததிகாரம்
- ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்
- அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்
- வல்லெழுத்து இயையின் அவ் எழுத்து மிகுமே
- உகரம் வருதல் ஆவயினான. 1
- ஞ ந ம வ இயையினும் உகரம் நிலையும். 2
- நகர இறுதியும் அதன் ஓரற்றே. 3
- வேற்றுமைக்கு உக் கெட அகரம் நிலையும். 4
- வெரிந் என் இறுதி முழுதும் கெடுவழி
- வரும் இடன் உடைத்தே மெல்லெழுத்து இயற்கை.5
- ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. 6
- ணகார இறுதி வல்லெழுத்து இயையின்
- டகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே. 7
- ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை. 8
- ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே. 9
- விண் என வரூஉம் காயப் பெயர்வயின்
- உண்மையும் உரித்தே அத்து என் சாரியை
- செய்யுள் மருங்கின் தொழில் வரு காலை. 10
- தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. 11
- கிளைப்பெயர் எல்லாம் கொளத் திரிபு இலவே. 12
- வேற்றுமை அல்வழி எண் என் உணவுப் பெயர்
- வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்தே. 13
- முரண் என் தொழிற்பெயர் முதல் இயல் நிலையும். 14
- மகர இறுதி வேற்றுமை ஆயின்
- துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே. 15
- அகர ஆகாரம் வரூஉம் காலை
- ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்தே. 16
- மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே
- செல் வழி அறிதல் வழக்கத்தான. 17
- இல்லம் மரப்பெயர் விசைமர இயற்றே. 18
- அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும். 19
- அகம் என் கிளவிக்குக் கை முன் வரினே
- முதல்நிலை ஒழிய முன்னவை கெடுதலும்
- வரை நிலை இன்றே ஆசிரியர்க்க
- மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான. 20
- இலம் என் கிளவிக்குப் படு வரு காலை
- நிலையலும் உரித்தே செய்யுளான. 21
- அத்தொடு சிவணும் ஆயிரத்து இறுதி
- ஒத்த எண்ணு முன் வரு காலை. 22
- அடையொடு தோன்றினும் அதன் ஓரற்றே. 23
- அளவும் நிறையும் வேற்றுமை இயல. 24
- படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும்
- தொடக்கம் குறுகும் பெயர்நிலைக் கிளவியும்
- வேற்றுமை ஆயின் உருபு இயல் நிலையும்
- மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான. 25
- அல்லது கிளப்பின் இயற்கை ஆகும். 26
- அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்
- எல்லாம் எனும் பெயர் உருபு இயல் நிலையும்
- வேற்றுமை அல் வழிச் சாரியை நிலையாது. 27
- மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. 28
- உயர்திணை ஆயின் உருபு இயல் நிலையும். 29
- நும் என் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகுமே. 30
- அல்லதன் மருங்கின் சொல்லும் காலை
- உக் கெட நின்ற மெய்வயின் ஈ வர
- இ இடை நிலைஇ ஈறு கெட ரகரம்
- நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே
- அப் பால் மொழிவயின் இயற்கை ஆகும். 31
- தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. 32
- ஈமும் கம்மும் உரும் என் கிளவியும்
- ஆ முப் பெயரும் அவற்று ஓரன்ன. 33
- வேற்றுமை ஆயின் ஏனை இரண்டும்
- தோற்றம் வேண்டும் அக்கு என் சாரியை- 34
- வகாரம் மிசையும் மகாரம் குறுகும். 35
- நாட்பெயர்க் கிளவி மேல் கிளந்தன்ன
- அத்தும் ஆன்மிசை வரை நிலை இன்றே
- ஒற்று மெய் கெடுதல் என்மனார் புலவர். 36
- னகார இறுதி வல்லெழுத்து இயையின்
- றகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே. 37
- மன்னும் சின்னும் ஆனும் ஈனும்
- பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும்
- அன்ன இயல என்மனார் புலவர். 38
- சுட்டு முதல் வயினும் எகரம் முதல் வயினும்
- அப் பண்பு நிலையும் இயற்கைய என்ப. 39
- குயின் என் கிளவி இயற்கை ஆகும். 40
- எகின் மரம் ஆயின் ஆண்மர இயற்றே. 41
- ஏனை எகினே அகரம் வருமே
- வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும். 42
- கிளைப்பெயர் எல்லாம் கிளைப்பெயர் இயல. 43
- மீன் என் கிளவி வல்லெழுத்து உறழ்வே. 44
- தேன் என் கிளவி வல்லெழுத்து இயையின்
- மேல் நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும்
- ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்தே
- வல்லெழுத்து மிகு வழி இறுதி இல்லை. 45
- மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. 46
- மெல்லெழுத்து இயையின் இறுதியொடு உறழும். 47
- இறாஅல் தோற்றம் இயற்கை ஆகும். 48
- ஒற்று மிகு தகரமொடு நிற்றலும் உரித்தே. 49
- மின்னும் பின்னும் பன்னும் கன்னும்
- அந் நாற் சொல்லும் தொழிற்பெயர் இயல. 50
- வேற்றுமை ஆயின் ஏனை எகினொடு
- தோற்றம் ஒக்கும் கன் என் கிளவி. 51
- இயற்பெயர் முன்னர்த் தந்தை முறை வரின்
- முதற்கண் மெய் கெட அகரம் நிலையும்
- மெய் ஒழித்து அன் கெடும் அவ் இயற்பெயரே. 52
- ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு
- பெயர் ஒற்று அகரம் துவரக் கெடுமே. 53
- சிறப்பொடு வரு வழி இயற்கை ஆகும். 54
- அப் பெயர் மெய் ஒழித்து அன் கெடு வழியே
- நிற்றலும் உரித்தே அம் என் சாரியை
- மக்கள் முறை தொகூஉம் மருங்கினான. 55
- தானும் பேனும் கோனும் என்னும்
- ஆ முறை இயற்பெயர் திரிபு இடன் இலவே. 56
- தான் யான் எனும் பெயர் உருபு இயல் நிலையும். 57
- வேற்றுமை அல் வழிக் குறுகலும் திரிதலும்
- தோற்றம் இல்லை என்மனார் புலவர். 58
- அழன் என் இறுதி கெட வல்லெழுத்து மிகுமே. 59
- முன் என் கிளவி முன்னர்த் தோன்றும்
- இல் என் கிளவிமிசை றகரம் ஒற்றல்
- தொல் இயல் மருங்கின் மரீஇய மரபே. 60
- பொன் என் கிளவி ஈறு கெட முறையின்
- முன்னர்த் தோன்றும் லகார மகாரம்
- செய்யுள் மருங்கின் தொடர் இயலான. 61
- யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின்
- வல்லெழுத்து இயையின் அவ் எழுத்து மிகுமே. 62
- தாய் என் கிளவி இயற்கை ஆகும். 63
- மகன் வினை கிளப்பின் முதல் நிலை இயற்றே. 64
- மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே. 65
- அல்வழி எல்லாம் இயல்பு என மொழிப. 66
- ரகார இறுதி யகார இயற்றே. 67
- ஆரும் வெதிரும் சாரும் பீரும்
- மெல்லெழுத்து மிகுதல் மெய் பெறத் தோன்றும். 68
- சார் என் கிளவி காழ்வயின் வலிக்கும். 69
- பீர் என் கிளவி அம்மொடும் சிவணும். 70
- லகார இறுதி னகார இயற்றே. 71
- மெல்லெழுத்து இயையின் னகாரம் ஆகும். 72
- அல்வழி எல்லாம் உறழ் என மொழிப. 73
- தகரம் வரு வழி ஆய்தம் நிலையலும்
- புகர் இன்று என்மனார் புலமையோரே. 74
- நெடியதன் இறுதி இயல்புமார் உளவே. 75
- நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்
- அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல. 76
- இல் என் கிளவி இன்மை செப்பின்
- வல்லெழுத்து மிகுதலும் ஐ இடை வருதலும்
- இயற்கை ஆதலும் ஆகாரம் வருதலும்
- கொளத் தகு மரபின் ஆகு இடன் உடைத்தே. 77
- வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்றே. 78
- நாயும் பலகையும் வரூஉம் காலை
- ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே
- உகரம் கெடு வழி அகரம் நிலையும்.- 79
- பூல் வேல் என்றா ஆல் என் கிளவியொடு
- ஆ முப் பெயர்க்கும் அம் இடை வருமே. 80
- தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. 81
- வெயில் என் கிளவி மழை இயல் நிலையும். 82
- சுட்டு முதல் ஆகிய வகர இறுதி
- முற்படக் கிளந்த உருபு இயல் நிலையும். 83
- வேற்றுமை அல்வழி ஆய்தம் ஆகும். 84
- மெல்லெழுத்து இயையின் அவ் எழுத்து ஆகும். 85
- ஏனவை புணரின் இயல்பு என மொழிப. 86
- ஏனை வகரம் தொழிற்பெயர் இயற்றே. 87
- ழகார இறுதி ரகார இயற்றே. 88
- தாழ் என் கிளவி கோலொடு புணரின்
- அக்கு இடை வருதல் உரித்தும் ஆகும். 89
- தமிழ் என் கிளவியும் அதன் ஓரற்றே. 90
- குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின்
- பீர் என் கிளவியொடு ஓர் இயற்று ஆகும். 91
- பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வே. 92
- ஏழ் என் கிளவி உருபு இயல் நிலையும். 93
- அளவும் நிறையும் எண்ணும் வரு வழி
- நெடு முதல் குறுகலும் உகரம் வருதலும்
- கடி நிலை இன்றே ஆசிரியர்க்க. 94
- பத்து என் கிளவி ஒற்று இடை கெடு வழி
- நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி. 95
- ஆயிரம் வரு வழி உகரம் கெடுமே.- 96
- நூறு ஊர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக்
- கூறிய நெடு முதல் குறுக்கம் இன்றே. 97
- ஐ அம் பல் என வரூஉம் இறுதி
- அல் பெயர் எண்ணும் ஆயியல் நிலையும். 98
- உயிர் முன் வரினும் ஆயியல் திரியாது. 99
- கீழ் என் கிளவி உறழத் தோன்றும். 100
- ளகார இறுதி ணகார இயற்றே.-- 101
- மெல்லெழுத்து இயையின் ணகாரம் ஆகும். 102
- அல்வழி எல்லாம் உறழ் என மொழிப.- 103
- ஆய்தம் நிலையலும் வரை நிலை இன்றே
- தகரம் வரூஉம் காலையான. 104
- நெடியதன் இறுதி இயல்பு ஆகுநவும்
- வேற்றுமை அல் வழி வேற்றுமை நிலையலும்
- போற்றல் வேண்டும் மொழியுமார் உளவே. 105
- தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. 106
- இருள் என் கிளவி வெயில் இயல் நிலையும். 107
- புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் இயல.- 108
- மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி
- தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்தே. 109
- உணரக் கூறிய புணர் இயல் மருங்கின்
- கண்டு செயற்கு உரியவை கண்ணினர் கொளலே. 110