10 கலிங்கத்துப் பரணி அவதாரம்

Wikibooks தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

கலிங்கத்துப் பரணி>

திருமாலே தோன்றினான்

232 அன்றிலங்கை பொருதழித்த வவனேயப் பாரதப்போர் முடித்துப் பின்னை

வென்றிலங்கு கதிராழி விசயதரன் எனவுதித்தான் விளம்பக் கேண்மின். 1

233 தேவரெலாங் குறையிரப்பத் தேவகிதன் திருவயிற்றில் வசுதே வற்கு

மூவுலகுந் தொழநெடுமால் முன்னொருநாள் அவதாரஞ் செய்த பின்னை. 2

கண்ணனே குலோத்துங்கனானான்

234 இருள்முழுது மகற்றும்விது குலத்தோன் தேவி இகல்விளங்கு தபனகுலத் திராச ராசன்

அருள்திருவின் திருவயிற்றில் வந்து தோன்றி ஆலிலையில் அவதரித்தா னவனே மீள. 3


துந்துமி முழங்கிற்று

235 வந்தருளி யவதாரஞ் செய்தலுமே மண்ணுலகும் மறைகள் நான்கும்

அந்தரநீங் கினவென்ன வந்தரதுந் துமிமுழங்கி யெழுந்த தாங்கே. 4

மலர்க்கையால் எடுத்தாள்

236 அலர்மழைபோல் மழைபொழிய வதுகண்டு கங்கைகொண்ட சோழன் தேவி

குலமகள்தன் குலமகனைக் கோகனத மலர்க்கையா னெடுத்துக் கொண்டே. 5


பாட்டியார் கருத்து

237 அவனிபர்க்குப் புரந்தரனா மடையாளம் அவயவத்தி னடைவே நோக்கி

இவனெமக்கு மகனாகி யிரவிகுலம் பாரிக்கத் தகுவ னென்றே. 6


இருகுலத்து அரசரும் மகிழ்ந்தனர்

238 திங்களினி ளங்குழவி செம்மலிவ னென்றுஞ் செய்யபரி திக்குழவி யையனிவ னென்றுந்

தங்களின் மகிழ்ந்திரு குலத்தரசர் தாமுந்

தனித்தனி யுவப்பதொர் தவப்பயனு மொத்தே. 7


நடை கற்றான்

239 சினப்புலி வளர்ப்பதொர் சிறுப்புலியு மொத்தே

திசைக்களி றணைப்பதொர் தனிக்களிறு மொத்தே

அனைத்தறமு மொக்கவடி வைக்கவடி வைத்தே

அறத்தொடு மறத்துறை நடக்கநடை கற்றே. 8


ஐம்படைத் தாலி அணிந்தனன்

240 பண்டுவசு தேவன்மக னாகிநில மாதின்

படர்களையு மாயனிவ னென்றுதெளி வெய்தத்

தண்டுதனு வாள்பணில நேமியெனு நாமத்

தன்படைக ளானதிரு வைம்படை தரித்தே. 9


மழலை மொழிந்தான்

241 தாயர்தரு பால்முலை சுரக்கவரு நாளே

தானுமுல கத்தவர்த மக்கருள்சு ரந்தே

தூயமனு வுஞ்சுருதி யும்பொருள்வி ளங்கிச்

சொற்கள்தெரி யத்தனது சொற்கள்தெரி வித்தே. 10


பூணூல் அணிந்தான்

242 திருமார்பின் மலர்மடந்தை திருக்கழுத்தின் மங்கலநா ணென்ன முந்நூற்

பெருமார்பின் வந்தொளிரப் பிறப்பிரண்டா வதுபிறந்து சிறந்த பின்னர். 11


மறை கற்றான்

243 போதங்கொள் மாணுருவாய்ப் புவியிரந்த அஞ்ஞான்று புகன்று சென்ற

வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டு கற்றே. 12


வீர வாள் ஏந்தினான்

244 நிறைவாழ்வைப் பெறல்நமக்கும் அணித்தென்று நிலப்பாவை களிப்ப விந்தத்

துறைவாளைப் புயத்திருத்தி யுடைவாளைத் திருவரையி னொளிர வைத்தே. 13


யானையேற்றம் கற்றான்

245 ஈரிரும ருப்புடைய வாரணமு கைத்தே இந்திரனெ திர்ந்தவரை வென்றுவரு மேயான்

ஓரிரும ருப்புடைய வாரணமு கைத்தே ஒன்னலரை வெல்வனென வன்னதுப யின்றே. 14


குதிரையேற்றம் பயின்றான்

246 இற்றைவரை யுஞ்செலவ ருக்கனொரு நாள்போல் ஏழ்பரியு கைத்திருள கற்றிவரு மேயான்

ஒற்றைவய மானடவி யித்தரைவ ளாகத் துற்றவிருள் தீர்ப்பனென மற்றதுப யின்றே. 15


படைக்கலம் பயின்றான்

247 சக்கரமு தற்படையொ ரைந்துமுதல் நாளே தன்னுடைய வானவத னாலவைந மக்குத்

திக்குவிச யத்தின்வரு மென்றவைப யிற்றிச் செங்கைமலர் நொந்திலசு மந்திலத னக்கே. 16


பல்கலை தேர்ந்தான்

248 உரைசெய்பல கல்விகளி னுரிமைபல சொல்லுவதெ னுவமையுரை செய்யி னுலகத்

தரசருள ரல்லரென அவைபுகழ மல்குகலை யவையவைகள் வல்ல பிறகே. 17


இளவரசன் ஆனான் 249 இசையுடனெ டுத்தகொடி யபயனவ னிக்கிவனை யிளவரசில் வைத்த பிறகே

திசையரச ருக்குரிய திருவினைமு கப்பதொரு திருவுளம டுத்த ருளியே. 18


போர்மேல் சென்றான்

250 வளர்வதொர்ப தத்தினிடை மதகரிமு கத்தினிடை

வளையுகிர்ம டுத்து விளையா

டிளவரியெ னப்பகைஞ ரெதிர்முனைக

ளைக்கிழிய எறிபடைபி டித்த ருளியே. 19


வடவரசரை வென்றான்

251 குடதிசை புகக்கடவு குரகதர

தத்திரவி குறுகலு மெறிக்கு மிருள்போல்

வடதிசை முகத்தரசர் வருகத

முகத்தனது குரகத முகைத் தருளியே. 20


வயிராகரத்தை எறித்தான்


252 புரமெரி மடுத்தபொழு ததுவிது வெனத்திகிரி புகையெரி குவிப்ப வயிரா

கரமெரி மடுத்தரசர் கரமெதிர் குவிப்பதொரு கடவரை தனைக் கடவியே. 21


களம் கொண்டான்

253 குளமுதிர மெத்தியதொர் குரைகடல்

கடுப்பவெதிர் குறுகலர்கள் விட்ட குதிரைத்

தளமுதிர வெட்டியொரு செருமுதிர

ஒட்டினர்கள் தலைமலை குவித் தருளியே. 22

சக்கரக்கோட்டம் அழித்தான்


254 மனுக்கோட்ட மழித்தபிரான் வளவர்பிரான் திருப்புருவத்

தனுக்கோட்ட நமன்கோட்டம் பட்டதுசக் கரக்கோட்டம். 23


சீதனம் பெற்றான்

255 சரிக ளந்தொறுந் தங்கள் சயமகள் தன்னை மன்னப யன்கைப் பிடித்தலும்

பரிக ளுங்களி றுந்தன ராசியும் பாரி போகங் கொடுத்தனர் பார்த்திபர். 24


கைவேல் சிவந்தது

256 பொருத ராதிபர் கண்கள் சிவந்தில போரி லோடிய கால்கள் சிவந்தன

விருத ராசப யங்கரன் செங்கையில் வேல்சி வந்தது கீர்த்தி வெளுத்ததே. 25

வீரராசேந்திரன் இறந்தான்

257 மாவுகைத் தொருதனி யபய னிப்படி வடதிசை மேற்செல மன்னர் மன்னவன்

தேவருக் கரசனாய் விசும்பின் மேற்செலத் தென்றிசைக் குப்புகுந் தன்மை செப்புவாம். 26


சோழ நாட்டில் நிகழ்ந்தவை

258 மறையவர் வேள்வி குன்றி மனுநெறி யனைத்து மாறித்

துறைகளோ ராறு மாறிச் சுருதியு முழக்கம் ஓய்ந்தே. 27

259 சாதிக ளொன்றொ டொன்று தலைதடு மாறி யாரும்

ஓதிய நெறியின் நில்லா தொழுக்கமும் மறந்த போயே. 28

260 ஒருவரை யொருவர் கைம்மிக் கும்பர்தங் கோயில் சோம்பி

அரிவையர் கற்பின் மாறி யரண்களு மழிய வாங்கே. 29


சோழநாடு அடைந்தான்

261 கலியிருள் பரந்த காலைக் கலியிருள் கரக்கத் தோன்றும்

ஒலிகட லருக்க னென்ன உலகுய்ய வந்து தோன்றி. 30


நீதியை நிலைநிறுத்தினான்

262 காப்பெலா முடைய தானே படைப்பதுங் கடனாக் கொண்டு

கோப்பெலாங் குலைந்தோர் தம்மைக் குறியிலே நிறுத்தி வைத்தே. 31


திரு முழுக்கு

263 விரிபுனல் வேலை நான்கும் வேதங்க ணான்கு மார்ப்பத்

திரிபுவ னங்கள் வாழ்த்தத் திருவபி டேகஞ் செய்தே. 32


முடி புனைதல்

264 அறைகழ லரச ரப்பொழு தடிமிசை யறுகெ டுத்திட

மறையவர் முடியெ டுத்தனர் மனுநெறி தலையெ டுக்கவே. 33


அறம் முளைத்தன

265 நிரைமணி பலகு யிற்றிய நெடுமுடி மிசைவி திப்படி

சொரிபுன லிடைமு ளைத்தன துறைகளி னறம னைத்துமே. 34


புலிக்கொடி எடுத்தான்

266 பொதுவற வுலகு கைக்கொடு புலிவளர் கொடியெ டுத்தலும்

அதுமுதற் கொடியெ டுத்தன அமரர்கள் முழவெ டுக்கவே. 35


நிலவு எறித்தது இருள் ஒளித்தது

267 குவிகைகொ டரசர் சுற்றிய குரைகழ லபயன் முத்தணி

கவிகையி னிலவெ றித்தது கலியெனு மிருளொ ளித்ததே. 36


குடை நிழலின் செயல்

268 அரனுறை யும்படி மலைகள் அடைய விளங்கின வனையோன்

ஒருதனி வெண்குடை யுலகில் ஒளிகொள் நலந்தரு நிழலில். 37


புகழ் மேம்பாடு

269 அரிதுயி லும்படி கடல்கள் அடைய விளங்கின கவினின்

ஒருகரு வெங்கலி கழுவி உலவு பெரும்புகழ் நிழலில். 38

270 நிழலில டைந்தன திசைகள் நெறியில டைந்தன மறைகள்

கழலில டைந்தனர் உதியர் கடலில டைந்தனர் செழியர். 39

271 கருணையொ டுந்தன துபய கரமுத வும்பொருள் மழையின்

அரணிய மந்திர அனல்கள் அவையுத வும்பெரு மழையே. 40

272 பரிசில் சுமந்தன கவிகள் பகடு சுமந்தன திறைகள்

அரசு சுமந்தன இறைகள் அவனி சுமந்தன புயமும். 41

273 விரித்த வாளுகிர் விழித் தழற்புலியை மீது வைக்கவிம யத்தினைத்

திரித்த கோலில்வளை வுண்டு நீதிபுரி செய்ய கோலில்வளை வில்லையே. 42

274 கதங்க ளிற்பொரு திறைஞ்சிடா வரசர் கால்க ளிற்றளையும் நூல்களின்

பதங்க ளிற்றளையு மன்றி வேறொரு பதங்க ளிற்றளைக ளில்லையே. 43

275 மென்க லாபமட வார்கள் சீறடி மிசைச்சி லம்பொலிவி ளைப்பதோர்

இன்க லாம்விளைவ தன்றி யெங்குமொர் இகல்க லாம்விளைவ தில்லையே. 44


பொழுது போக்கு

276 வருசெருவொன் றின்மையினால் மற்போருஞ் சொற்புலவோர் வாதப் போரும்

இருசிறைவா ரணப்போரு மிகன்மதவா ரணப்போரு மினைய கண்டே. 45

277 கலையினொடுங் கலைவாணர் கவியினொடும் இசையினொடுங் காதன் மாதர்

முலையினொடு மனுநீதி முறையினொடு மறையினொடும் பொழுது போக்கி. 46


பரிவேட்டையாட நினைத்தான்

278 காலாற்றண் டலையுழக்குங் காவிரியின் கரைமருங்கு வேட்டை யாடிப்

பாலாற்றங் கரைமருங்கு பரிவேட்டை ஆடுதற்குப் பயண மென்றே. 47


படை திரண்டது

279 முரசறைகென் றருளுதலு முழுதுலகும் ஒருநகருட் புகுந்த தொப்பத்

திரைசெய்கட லொலியடங்கத் திசைநான்கிற் படைநான்குந் திரண்ட வாங்கே. 48


வேட்டைக்குப் புறப்பட்டான்

280 அழகின்மே லழகுபெற வணியனைத்தும் அணிந்தருளிக் கணித நூலிற்

பழகினார் தெரிந்துரைத்த பழுதறுநாட் பழுதற்ற பொழுதத் தாங்கே. 49


தானம் அளித்தான்

281 அனக தானதரு மங்கண்மறை மன்னர் பெறவே

அபய தானமப யம்புகுது மன்னர் பெறவே

கனக தானமுறை நின்றுகவி வாணர் பெறவே

கரட தானமத வாரணமு மன்று பெறவே. 50


யானைமேல் ஏறினான்

282 மற்ற வெங்கட களிற்றினுத யக்கி ரியின்மேல்

மதிக வித்திட வுதித்திடு மருக்க னெனவே

கொற்ற வெண்குடை கவிப்பமிசை கொண்டு கவரிக்

குலம திப்புடை கவித்தநில வொத்து வரவே. 51


பல்லியம் முழங்கின

283 ஒருவ லம்புரி தழங்கொலி முழங்கி யெழவே

உடன் முழங்குபணி லம்பல முழங்கி யெழவே

பருவம் வந்துபல கொண்டல்கண் முழங்கி யெழவே

பலவி தங்களொடு பல்லிய முழங்கி எழவே. 52


வேறு பல ஒலிகள் எழுந்தன

284 மன்னர் சீர்சய மிகுத்திடை விடாத வொலியும்

மறைவ லாளர்மறை நாள்வயின் வழாத வொலியும்

இன்ன மாகடல் முழங்கியெழு கின்ற வொலியென்

றிம்ப ரும்பரறி யாதபரி செங்கு மிகவே. 53


ஏழிசைவல்லபியும் உடனிருந்தாள்

285 வாழி சோழகுல சேகரன் வகுத்த இசையின்

மதுர வாரியென லாகுமிசை மாத ரிதெனா

ஏழு பாருலகொ டேழிசை வளர்க்க உரியாள்

யானை மீதுபிரி யாதுட னிருந்து வரவே. 54


தியாகவல்லியும் சென்றாள்

286 பொன்னின் மாலைமலர் மாலைபணி மாறி யுடனே

புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ்பிடி வரச்

சென்னி யாணையுடன் ஆணையை நடத்து முரிமைத்

தியாக வல்லிநிறை செல்வியுடன் மல்கி வரவே. 55


மகளிரும் மன்னரும் சூழ வருதல்

287 பிடியின் மேல்வரு பிடிக்குல மநேக மெனவே

பெய்வ ளைக்கைமட மாதர்பிடிமீதின் வரவே

முடியின் மேன்முடி நிரைத்துவரு கின்ற தெனவே

முறைசெய் மன்னவர்கள் பொற்குடை கவித்து வரவே. 56


அரசரோடு வீரர் சூழ்ந்து வரல்

288 யானை மீதுவரும் யானையு மநேக மெனவே

அடுக ளிற்றின்மிசை கொண்டர சநேகம் வரவே

சேனை மீதுமொரு சேனைவரு கின்ற தெனவே

தெளிப டைக்கலன் நிலாவொளி படைத்து வரவே. 57


முரசொலியும் கொடிநிரலும்

289 முகிலின் மேன்முகின் முழங்கிவரு கின்ற தெனவே

மூரி யானைகளின் மேன்முரச திர்ந்து வரவே

துகிலின் மேல்வரு துகிற்குலமு மொக்கு மெனவே

தோகை நீள்கொடிகள் மேன்முகில் தொடங்கி வரவே. 58


புழுதி எழுந்தது

290 தேரின் மீதுவரு தேர்களு மநேக மெனவே

செம்பொன் மேகலை நிதம்பநிரை தேரின் வரவே

பாரின் மீதுமொரு பாருளது போலு மெனவே

படல தூளியு மெழுந்திடையின் மூடி வரவே. 59


படை செல்லும் காட்சி

291 யானை மேலிளம் பிடியின் மேனிரைத்

திடைய றாதுபோ மெறிக டற்கிணை

சேனை மாகடற் கபய னிம்முறைச்

சேது பந்தனஞ் செய்த தொக்கவே. 60


பல்லக்கும் முத்துக் குடையும்

292 நீல மாமணிச் சிவிகை வெள்ளமும் நித்தி லக்குலக் கவிகை வெள்ளமுங்

காலி னான்வரும் யமுனை வெள்ளமுங் கங்கை வெள்ளமுங் காண்மி னென்னவே. 61


புலிக்கொடிச் சிறப்பு

293 கெண்டை மாசுண முவணம் வாரணங் கேழ லாளிமா மேழி கோழிவிற்

கொண்ட வாயிரங் கொடிநு டங்கவே குமுறு வெம்புலிக் கொடிகு லாவவே. 62


மகளிர் கூட்டம்

294 தொடைகள் கந்தரம் புடைகொள் கொங்கைகண்

சோதி வாண்முகங் கோதை யோதிமென்

நடைகண் மென்சொலென் றடைய வொப்பிலா

நகை மணிக்கொடித் தொகைப ரக்கவே. 63


மகளிர் தோற்றம்

295 எங்குமுள மென்கதலி யெங்குமுள

தண்கமுக மெங்குமுள பொங்கு மிளநீர்

எங்குமுள பைங்குமிழ்க ளெங்குமுள

செங்குமுத மெங்குமுள செங்க யல்களே. 64

296 ஆறலைத ரங்கமுள வன்னநடை தாமுமுள

வாலைகமழ் பாகு முளவாய்

வேறுமொரு பொன்னிவள நாடுசய

துங்கன்முன்வி தித்ததுவு மொக்கு மெனவே. 65


மலைக் காட்சி

297 வேழம்நிரை வென்றுமலை யெங்குமிடை

கின்றவயில் வென்றியப யன்ற னருளால்

வாழவப யம்புகுது சேரனொடு

கூடமலை நாடடைய வந்த தெனவே. 66

298 அக்கிரிகு லங்கள்விடு மங்குலியின்

நுண்திவலை யச்செழிய ரஞ்சி விடுமத்

திக்கிலுள நித்திலமு கந்துகொடு

வீசியொரு தென்றல்வரு கின்ற தெனவே. 67


தில்லைக் கூத்தனை வணங்கினான்

299 தென்றிசையி னின்றுவட திக்கின்முகம்

வைத்தருளி முக்கணுடை வெள்ளி மலையோன்

மன்றினட மாடியருள் கொண்டுவிடை

கொண்டதிகை மாநகருள் விட்ட ருளியே. 68


காஞ்சியை அடைந்தான் 300 விட்டவதி கைப்பதியி னின்றுபய

ணம்பயணம் விட்டுவிளை யாடி யபயன்

வட்டமதி யொத்தகுடை மன்னர்தொழ

நண்ணினன்வ ளங்கெழுவு கச்சி நகரே. 69


கலிங்கப்பேய் ஓடிவந்தது

301 என்னுமித னன்மொழியெ டுத்திறைவி சொல்லுவதன் முன்னமிகல் கண்ட தொருபேய்

தன்னுடைய கால்தனது பிற்பட மனத்துவகை தள்ளிவர வோடி வரவே. 70


கலிங்கப் பேயின் மொழிகள்

302 கலிங்கர் குருதி குருதி கலிங்க மடைய வடைய

மெலிந்த வுடல்கள் தடிமின் மெலிந்த வுடல்கள் தடிமின். 71

303 உணங்கள் வயிறு குளிர உவந்து பருக பருக

கணங்க ளெழுக வெழுக கணங்க ளெழுக வெழுக. 72

304 என்செயப் பாவி காளிங் கிருப்பதங் கிருப்ப முன்னே

வன்சிறைக் கழுகும் பாறும் வயிறுகள் பீறிப் போன. 73

305 வயிறுக ளென்னிற் போதா வாய்களோ போதா பண்டை

எயிறுக ளென்னிற் போதா என்னினு மீண்டப் போதும். 74

306 சிரமலை விழுங்கச் செந்நீர்த் திரைகடல் பருக லாகப்

பிரமனை வேண்டிப் பின்னும் பெரும்பசி பெறவும் வேண்டும். 75


பேய்களின் பேரின்பம்

307 என்ற வோசை தஞ்செ விக் கிசைத்த லுந்த சைப்பிணந்

தின்ற போற்ப ருத்து மெய் சிரித்து மேல்வி ழுந்துமே. 76

308 ஓகை சொன்ன பேயின் வாயை ஓடி முத்த முண்ணுமே

சாகை சொன்ன பேய் களைத் தகர்க்க பற்க ளென்னுமே. 77

309 பிள்ளை வீழ வீழ வும்பெ ருந் துணங்கை கொட்டுமே

வள்ளை பாடி யாடி யோடி வாவெனாவ ழைக்குமே. 78

310 எனாவு ரைத்த தேவி வாழி வாழி யென்று வாழ்த்தியே

கனாவு ரைத்த பேயி னைக்க ழுத்தி னிற்கொ டாடுமே. 79


காளி போர்நிலை கேட்டல்

311 ஆடிவரு பேய்களின லந்தலைத விர்த்தடுப றந்தலைய றிந்த தனினின்

றோடிவரு பேயையிக லுள்ளபடி சொல்கெனவு ரைத்தனளு ரைத்த ருளவே. 80

தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்