3.4 கற்பியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > பொருளதிகாரம்
- கற்பு எனப்படுவது கரணமொடு புணர
- கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை
- கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே. 1
- கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
- புணர்ந்து உடன் போகிய காலையான. 2
- மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
- கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே. 3
- பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
- ஐயர் யாத்தனர் கரணம் என்ப. 4
- கரணத்தின் அமைந்து முடிந்த காலை
- நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும்
- எஞ்சா மகிழ்ச்சி இறந்து வரு பருவத்தும்
- அஞ்ச வந்த உரிமைக்கண்ணும்
- நல் நெறிப் படரும் தொல் நலப் பொருளினும்
- பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ
- குற்றம் சான்ற பொருள் எடுத்து உரைப்பினும்
- நாமக் காலத்து உண்டு எனத் தோழி
- ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்
- அல்லல் தீர ஆர்வமொடு அளைஇ
- சொல்லுறு பொருளின்கண்ணும் சொல் என
- ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது
- வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு என
- அடிசிலும் பூவும் தொடுதற்கண்ணும்
- அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்
- அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும்
- ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்துக்
- களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி
- அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும்
- அந்தரத்து எழுதிய எழுத்தின் மான
- வந்த குற்றம் வழி கெட ஒழுகலும்
- அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும்
- தான் அவட் பிழைத்த பருவத்தானும்
- நோன்மையும் பெருமையும் மெய் கொள அருளி
- பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி
- தன்னின் ஆகிய தகுதிக்கண்ணும்
- புதல்வற் பயந்த புனிறு தீர் பொழுதின்
- நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி
- ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும்
- செய் பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்ணும்
- பயம் கெழு துணை அணை புல்லி புல்லாது
- உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி
- அல்கல் முன்னிய நிறை அழி பொழுதின்
- மெல்லென் சீறடி புல்லிய இரவினும்
- உறல் அருங்குரைமையின் ஊடல் மிகுத்தோளைப்
- பிற பிற பெண்டிரின் பெயர்த்தற்கண்ணும்
- பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப்
- பரிவின் நீக்கிய பகுதிக்கண்ணும்
- நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும்
- சென்று கையிகந்து பெயர்த்து உள்ளிய வழியும்
- காமத்தின் வலியும் கைவிடின் அச்சமும்
- தான் அவட் பிழைத்த நிலையின்கண்ணும்
- உடன் சேறல் செய்கையொடு அன்னவை பிறவும்
- மடம் பட வந்த தோழிக்கண்ணும்
- வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்
- மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும்
- அவ் வழிப் பெருகிய சிறப்பின்கண்ணும்
- பேர் இசை ஊர்திப் பாகர் பாங்கினும்
- காமக் கிழத்தி மனையோள் என்று இவர்
- ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்
- சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி
- இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும்
- அருந் தொழில் முடித்த செம்மல் காலை
- விருந்தொடு நல்லவை வேண்டற்கண்ணும்
- மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும்
- கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக்கண்ணும்
- ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇ
- பண் அமை பகுதி முப்பதினொருமூன்றும்
- எண்ண அருஞ் சிறப்பின் கிழவோன் மேன. 5
- அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்
- ஏற்றற் கண்ணும் நிறுத்தற்கண்ணும்
- உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில்
- பெருமையின் திரியா அன்பின்கண்ணும்
- கிழவனை மகடூஉப் புலம்பு பெரிது ஆகலின்
- அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்
- இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும்
- கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி
- நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ
- நளியின் நீக்கிய இளி வரு நிலையும்
- புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு
- அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி
- இயன்ற நெஞ்சம் தலைப் பெயர்த்து அருக்கி
- எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்
- தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி
- எங்கையர்க்கு உரை என இரத்தற்கண்ணும்
- செல்லாக் காலை செல்க என விடுத்தலும்
- காமக் கிழத்தி தன் மகத் தழீஇ
- ஏமுறு விளையாட்டு இறுதிக்கண்ணும்
- சிறந்த செய்கை அவ் வழித் தோன்றி
- அறம் புரி உள்ளமொடு தன் வரவு அறியாமை
- புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தானும்
- தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால்
- அந்தம் இல் சிறப்பின் மகப் பழித்து நெருங்கலும்
- கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது
- நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ
- பகுதியின் நீங்கிய தகுதிக்கண்ணும்
- கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி
- அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி
- காதல் எங்கையர் காணின் நன்று என
- மாதர் சான்ற வகையின்கண்ணும்
- தாயர் கண்ணிய நல் அணிப் புதல்வனை
- மாயப் பரத்தை உள்ளிய வழியும்
- தன்வயின் சிறைப்பினும் அவன் வயின் பிரிப்பினும்
- இன்னாத் தொல் சூள் எடுத்தற்கண்ணும்
- காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய
- தீமையின் முடிக்கும் பொருளின்கண்ணும்
- கொடுமை ஒழுக்கத்துத் தோழிக்கு உரியவை
- வடு அறு சிறப்பின் கற்பின் திரியாமை
- காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்
- ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும்
- வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ
- கிழவோள் செப்பல் கிழவது என்ப. 6
- புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து
- இடைச் சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி
- அன்புறு தக்க கிளத்தல் தானே
- கிழவோன் செய் வினைக்கு அச்சம் ஆகும். 7
- தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும்
- ஆவயின் நிகழும் என்மனார் புலவர். 8
- பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த பின் வந்த
- தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்ணும்
- அற்றம் அழிவு உரைப்பினும் அற்றம் இல்லாக்
- கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும்
- சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பினும்
- அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை
- அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்
- பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி
- இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும்
- வணங்கு இயல் மொழியான் வணங்கற்கண்ணும்
- புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும்
- சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும்
- மாண் நலம் தா என வகுத்தற்கண்ணும்
- பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும்
- சூள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழியினும்
- பெரியோர் ஒழுக்கம் பெரிது எனக் கிளந்து
- பெறு தகை இல்லாப் பிழைப்பினும் அவ் வழி
- உறு தகை இல்லாப் புலவியுள் மூழ்கிய
- கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்ணும்
- உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின்
- உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று
- தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும்
- அருமைக் காலத்துப் பெருமை காட்டிய
- எளிமைக் காலத்து இரக்கத்தானும்
- பாணர் கூத்தர் விறலியர் என்று இவர்
- பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்
- நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர்
- காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும்
- பிரியும் காலை எதிர் நின்று சாற்றிய
- மரபு உடை எதிரும் உளப்பட பிறவும்
- வகை பட வந்த கிளவி எல்லாம்
- தோழிக்கு உரிய என்மனார் புலவர். 9
- புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்
- இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்ணும்
- பல் வேறு புதல்வர்க் கண்டு நனி உவப்பினும்
- மறையின் வந்த மனையோள் செய்வினை
- பொறை இன்று பெருகிய பருவரற்கண்ணும்
- காதல் சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின்
- தாய் போல் தழீஇக் கழறி அம் மனைவியைக்
- காய்வு இன்று அவன்வயின் பொருத்தற்கண்ணும்
- இன் நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து
- பின்னர் வந்த வாயிற்கண்ணும்
- மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர்
- மிகை எனக் குறித்த கொள்கைக்கண்ணும்
- எண்ணிய பண்ணை என்று இவற்றொடு பிறவும்
- கண்ணிய காமக்கிழத்தியர் மேன. 10
- கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
- மெல் இயல் பொறையும் நிறையும் வல்லிதின்
- விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
- பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
- முகம் புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல்
- அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய. 11
- கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழி கொள
- நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்
- செவிலிக்கு உரிய ஆகும் என்ப. 12
- சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய. 13
- இடித்து வரை நிறுத்தலும் அவரது ஆகும்
- கிழவனும் கிழத்தியும் அவர் வரை நிற்றலின். 14
- உணர்ப்பு வரை இறப்பினும் செய் குறி பிழைப்பினும்
- புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய. 15
- புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும்
- சொலத் தகு கிளவி தோழிக்கு உரிய. 16
- பரத்தைமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி
- மடத் தகு கிழமை உடைமையானும்
- அன்பிலை கொடியை என்றலும் உரியள். 17
- அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் கிழவி
- அகம் மலி ஊடல் அகற்சிக்கண்ணும்
- வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே. 18
- காமக் கடப்பினுள் பணிந்த கிளவி
- காணும் காலை கிழவோற்கு உரித்தே
- வழிபடு கிழமை அவட்கு இயலான. 19
- அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி
- பொருள் பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே. 20
- களவும் கற்பும் அலர் வரைவு இன்றே. 21
- அலரின் தோன்றும் காமத்து மிகுதி. 22
- கிழவோன் விளையாட்டு ஆங்கும் அற்றே. 23
- மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை
- தம் உள ஆதல் வாயில்கட்கு இல்லை. 24
- மனைவி முன்னர்க் கையறு கிளவி
- மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே. 25
- முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும்
- பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர். 26
- தொல்லவை உரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும்
- பல் ஆற்றானும் ஊடலின் தகைத்தலும்
- உறுதி காட்டலும் அறிவு மெய்ந் நிறுத்தலும்
- ஏதுவின் உரைத்தலும் துணிவு காட்டலும்
- அணி நிலை உரைத்தலும் கூத்தர் மேன. 27
- நிலம் பெயர்ந்து உரைத்தல் அவள் நிலை உரைத்தல்
- கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய. 28
- ஆற்றது பண்பும் கருமத்து விளைவும்
- ஏவல் முடிவும் வினாவும் செப்பும்
- ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்
- தோற்றம் சான்ற அன்னவை பிறவும்
- இளையோர்க்கு உரிய கிளவி என்ப. 29
- உழைக் குறுந் தொழிலும் காப்பும் உயர்ந்தோர்
- நடக்கை எல்லாம் அவர்கண் படுமே. 30
- பின் முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவைத்
- தொல் முறை மனைவி எதிர்ப்பாடு ஆயினும்
- இன் இழைப் புதல்வனை வாயில் கொண்டு புகினும்
- இறந்தது நினைஇக் கிழவோன் ஆங்கண்
- கலங்கலும் உரியன் என்மனார் புலவர். 31
- தாய் போல் கழறித் தழீஇக் கோடல்
- ஆய் மனைக் கிழத்திக்கும் உரித்து என மொழிப
- கவவொடு மயங்கிய காலையான. 32
- அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின்
- மகன் தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும்
- செல்வன் பணி மொழி இயல்பு ஆகலான. 33
- எண் அரும் பாசறை பெண்ணொடு புணரார். 34
- புறத்தோர் ஆங்கண் புணர்வது ஆகும். 35
- காம நிலை உரைத்தலும் தேர் நிலை உரைத்தலும்
- கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்
- ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும்
- செலவு உறு கிளவியும் செலவு அழுங்கு கிளவியும்
- அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய. 36
- எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்
- புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப. 37
- அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின்
- சிறைப்புறம் குறித்தன்று என்மனார் புலவர். 38
- தற் புகழ் கிளவி கிழவன் முன் கிளத்தல்
- எத் திறத்தானும் கிழத்திக்கு இல்லை
- முற்பட வகுத்த இரண்டு அலங்கடையே. 39
- கிழவி முன்னர்த் தற் புகழ் கிளவி
- கிழவோன் வினைவயின் உரிய என்ப. 40
- மொழி எதிர் மொழிதல் பாங்கற்கு உரித்தே. 41
- குறித்து எதிர் மொழிதல் அஃகித் தோன்றும். 42
- துன்புறு பொழுதினும் எல்லாம் கிழவன்
- வன்புறுத்தல்லது சேறல் இல்லை. 43
- செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே
- வன்புறை குறித்த தவிர்ச்சி ஆகும். 44
- கிழவி நிலையே வினையிடத்து உரையார்
- வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும் 45
- பூப்பின் புறப்பாடு ஈர் ஆறு நாளும்
- நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர்
- பரத்தையின் பிரிந்த காலையான. 46
- வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது. 47
- வேந்து உறு தொழிலே யாண்டினது அகமே. 48
- ஏனைப் பிரிவும் அவ் இயல் நிலையும். 49
- யாறும் குளனும் காவும் ஆடி
- பதி இகந்து நுகர்தலும் உரிய என்ப. 50
- காமம் சான்ற கடைக்கோட் காலை
- ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
- அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
- சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. 51
- தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
- பாணன் பாட்டி இளையர் விருந்தினர்
- கூத்தர் விறலியர் அறிவர் கண்டோ ர்
- யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப. 52
- வினை வயின் பிரிந்தோன் மீண்டு வரு காலை
- இடைச்சுர மருங்கின் தவிர்தல் இல்லை
- உள்ளம் போல உற்றுழி உதவும்
- புள் இயல் கலி மா உடைமையான. 53