3.7 உவமயியல்
Wikibooks தளத்திலிருந்து
தொல்காப்பியம் > பொருளதிகாரம்
- வினை பயன் மெய் உரு என்ற நான்கே
- வகை பெற வந்த உவமத் தோற்றம். 1
- விரவியும் வரூஉம் மரபின என்ப. 2
- உயர்ந்ததன் மேற்றே உள்ளும் காலை. 3
- சிறப்பே நலனே காதல் வலியொடு
- அந் நால் பண்பும் நிலைக்களம் என்ப. 4
- கிழக்கிடு பொருளொடு ஐந்தும் ஆகும். 5
- முதலும் சினையும் என்று ஆயிரு பொருட்கும்
- நுதலிய மரபின் உரியவை உரிய. 6
- சுட்டிக் கூறா உவமம் ஆயின்
- பொருள் எதிர் புணர்த்துப் புணர்த்தன கொளலே. 7
- உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும். 8
- பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
- மருள் அறு சிறப்பின் அஃது உவமம் ஆகும். 9
- பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக்
- குறிப்பின் வரூஉம் நெறிப்பாடு உடைய. 10
- அவைதாம்,
- அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப
- என்ன மான என்றவை எனாஅ
- ஒன்ற ஒடுங்க ஒட்ட ஆங்க
- என்ற வியப்ப என்றவை எனாஅ
- எள்ள விழைய விறப்ப நிகர்ப்ப
- கள்ள கடுப்ப ஆங்கவை எனாஅ
- காய்ப்ப மதிப்ப தகைய மருள
- மாற்ற மறுப்ப ஆங்கவை எனாஅ
- புல்ல பொருவ பொற்ப போல
- வெல்ல வீழ ஆங்கவை எனாஅ
- நாட நளிய நடுங்க நந்த
- ஓட புரைய என்றவை எனாஅ
- ஆறு ஆறு அவையும் அன்ன பிறவும்
- கூறும் காலைப் பல் குறிப்பினவே. 11
- அன்ன ஆங்க மான விறப்ப
- என்ன உறழ தகைய நோக்கொடு
- கண்ணிய எட்டும் வினைப்பால் உவமம். 12
- அன்ன என் கிளவி பிறவொடும் சிவணும். 13
- எள்ள விழைய புல்ல பொருவ
- கள்ள மதிப்ப வெல்ல வீழ
- என்று ஆங்கு எட்டே பயனிலை உவமம். 14
- கடுப்ப ஏய்ப்ப மருள புரைய
- ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்ப என்று
- அப் பால் எட்டே மெய்ப்பால் உவமம். 15
- போல மறுப்ப ஒப்ப காய்த்த
- நேர வியப்ப நளிய நந்த என்று
- ஒத்து வரு கிளவி உருவின் உவமம். 16
- தம்தம் மரபின் தோன்றுமன் பொருளே. 17
- நால் இரண்டு ஆகும் பாலுமார் உண்டே. 18
- பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன்
- வழி மருங்கு அறியத் தோன்றும் என்ப. 19
- உவமப் பொருளின் உற்றது உணரும்
- தெளி மருங்கு உளவே திறத்து இயலான. 20
- உவமப் பொருளை உணரும் காலை
- மரீஇய மரபின் வழக்கொடு வருமே. 21
- இரட்டைக்கிளவி இரட்டை வழித்தே. 22
- பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி
- முன்னை மரபின் கூறும் காலை
- துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே. 23
- உவமப் போலி ஐந்து என மொழிப. 24
- தவல் அருஞ் சிறப்பின் அத் தன்மை நாடின்
- வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும்
- பிறப்பினும் வரூஉம் திறத்த என்ப. 25
- கிழவி சொல்லின் அவள் அறி கிளவி. 26
- தோழிக்கு ஆயின் நிலம் பெயர்ந்து உரையாது. 27
- கிழவோற்கு ஆயின் உரனொடு கிளக்கும். 28
- ஏனோர்க்கு எல்லாம் இடம் வரைவு இன்றே. 29
- இனிது உறு கிளவியும் துனி உறு கிளவியும்
- உவம மருங்கின் தோன்றும் என்ப. 30
- கிழவோட்கு உவமம் ஈர் இடத்து உரித்தே. 31
- கிழவோற்கு ஆயின் இடம் வரைவு இன்றே. 32
- தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக்
- கூறுதற்கு உரியர் கொள் வழியான. 33
- வேறுபட வந்த உவமத் தோற்றம்
- கூறிய மருங்கின் கொள் வழிக் கொளாஅல். 34
- ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே. 35
- உவமத் தன்மையும் உரித்து என மொழிப
- பயனிலை புரிந்த வழக்கத்தான. 36
- தடுமாறு உவமம் கடி வரை இன்றே. 37
- அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே
- நிரல் நிறுத்து அமைத்தல் நிரல் நிறை சுண்ணம்
- வரன் முறை வந்த மூன்று அலங்கடையே. 38