எப்படிச் செய்வது/அப்பாச்சி வலை வழங்கியைப் பயன்படுத்துவது எப்படி?
அப்பாச்சி வலை வழங்கி அல்லது இணைய வழங்கி என்பது ஒரு கட்டற்ற வலை வழங்கி மென்பொருள் ஆகும். இன்று இணையத்தில் பெரும்பான்மையான வலைத்தளங்கள் இதனைப் பயன்படுத்தியே வழங்கப்படுகின்றன. இது யுனிக்சு, லினக்சு, விண்டோசு, அப்பிள், நாவல் நெற்வெயர் என்று பல்வேறு இயங்குதளங்களில் இயங்கக் கூடியது.
இணையக் கட்டமைப்பு
[தொகு]இணையம் என்பது பல்வேறு கணினி வலைப்பின்னல்களால் ஆன ஒரு பிணையம் ஆகும். இந்த வலைப்பின்னல்கள் அல்லது வலைப்பின்னல்களில் உள்ள கணினி முனைகள் இணைய நெறிமுறைகளால் (Internet protocol suite) தம்மோடு பல்வேறு நிலைகளில் தொடர்பாடுகின்றன. இவற்றுள் ஒரு முக்கியமான செயலிநிலை (application layer) நெறிமுறை மீயுரை பரிமாற்ற நெறிமுறை (Hypertext Transfer Protocol (http - எச்.ரி.ரி.பி) ஆகும். இதனைப் பயன்படுத்தியே இணையத்தில் நாம் வலைத்தளங்கள் உட்பட்ட மீஊடகங்களைப் (hypermedia) பரிமாறுகிறோம்.
எச்.ரி.ரி.பி வாடிக்கையாளர் வழங்கி மாதிரியைப் (Client-Server model) பயன்படுத்திச் செயற்படுகிறது. ஒரு வழங்கியில் உள்ள ஒரு வலைதளத்தை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வலை உலாவிகள் ஊடாகப் பலர் பார்ப்பது (வாடிக்கையாளர்கள்) என்பது இந்த வாடிக்கையாளர்-வழங்கி மாதிரிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும். http://ta.wikibooks.org என்ற வலைமுகவரியில் வரும் முதல் http என்ற பகுதி இந்த நெறிமுறையைப் பயன்படுத்துவதை சுட்டி நிற்கிறது. நீங்கள் உலாவியில் இந்த முகவரியை இடும்போது இணையம் ஊடாக இந்த வலைத்தளம் வழங்கப்படும் வழங்கிக்கு தொடர்பாடல் போகிறது. அங்கு எதாவது ஒரு வலைச் செயலி உங்களுக்கு அந்த வலைத்தளத்தை வழங்கும். அப்பாச்சி அத்தகைய ஒரு வலைச்செயலி ஆகும்.
அப்பாச்சி என்பது என்ன, அப்பாச்சி எப்படி இயங்குகிறது, அப்பாச்சியை நிறுவுவது எப்படி, அப்பாச்சியின் பல்வேறு நிரல்கூறுகள் எவை என்பது பற்றி அறிந்திருப்பது பிணைய நிர்வாகிகளுக்கு, நிரலாளர்களுக்கு உதவும். அந்த வகையில் நடைமுறையில் பயன்படும் நோக்கில் பின்வரும் தகவல்கள் அமைகின்றன. அப்பாச்சி பொதுவாக லினக்சு/யுனிக்சு இயங்குதளத்திலேயே நிறுவப்படும். அதுதற்கான விபரங்களே கீழே தரப்படுகின்றன.
குறிப்பு: இந்த எப்படிச் செய்வது 2012 நடுப்பகுதியில் முதலில் எழுதப்படுகிறது. அப்பாச்சி புதிய பதிப்புக்களை வெளியிட்டால் செய்முறைகள் மாறலாம். அதற்குத் தகுந்த மாதிரி நீங்கள் இந்தக் கையேட்டை இற்றை செய்து உதவுங்கள்.
நிறுவுதல்
[தொகு]அப்பாச்சியை லினக்சு (எ.கா டேபியன், உபுண்டு) வழங்கிகள் அல்லது கணினிகளில் நிறுவுவது மிக இலகுவானது.
sudo apt-get install apache2
அப்பாச்சி பொதுவாக /etc/apache2/ என்ற அடைவிலேயே இடப்பட்டு இருக்கும். அப்பாச்சி இயல்பிருப்பாக port 80 யைக் கேக்கத் தொடங்கும். port 80 பொதுவாக எச்.ரி.ரி.பி அல்லது உலகளாவிய வலையின் port ஆகும். அங்கு எதாவது வேண்டுகோள்கள் வந்தால் அதைக் கையாள முயலும்.
பரிசோதித்தல்
[தொகு]எதாவது ஒரு உலாவியைத் திறந்து பின்வரும் முகவரியை இடுங்கள். "It works!" என்ற தகவலை அதில் காணிபிக்கும்.
http://localhost/
தளங்களை அமைப்பைவடிவாக்குதல் (configuring websites)
[தொகு]பொதுவாக நாம் ஒன்றுக்கு மேற்பட்ட வலைத்தளங்களையே ஒரு வழங்கியைப் பயன்படுத்தி வழங்குவோம். அதனை ஏதுவாக்க /etc/apache2/conf.d/virtual.conf என்ற கோப்பை உருவாக்கி பின்வரும் வரியை இடவும்.
# பல மெய்நிகர் புரவல்கள் NameVirtualHost *
இதன் பின்பு நாம் /etc/apache2/sites-available/ என்ற அடைவில் நாம் புரவல் செய்யப் போகும் வலைத்தளத்துக்கான மெய்நிகர் புரவல் அமைவைகளை (virtual host configurations) செய்யலாம். அங்கு இருக்கும் default அமைவை ஒத்து நாம் செய்யலாம். பின்வருவது ஒர் எடுத்துக்காட்டு.
# # Example.com (/etc/apache2/sites-available/www.example.com) # <VirtualHost *:80> ServerAdmin webmaster@example.com ServerName www.example.com ServerAlias example.com # Indexes + Directory Root. DirectoryIndex index.html DocumentRoot /home/www/www.example.com/ # CGI Directory ScriptAlias /cgi-bin/ /home/www/www.example.com/cgi-bin/ <Location /cgi-bin> Options +ExecCGI </Location> # Logfiles ErrorLog /home/www/www.example.com/logs/error.log CustomLog /home/www/www.example.com/logs/access.log combined </VirtualHost>
இங்கு நாம் பின்வரும் அம்சங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்: ServerName, ServerAlias, DocumentRoot . ServerName என்பதுவே உங்கள் வலைத்தளத்தின் முகவரி. ServerAlias என்பது ஒரு மாற்று முகவரி. DocumentRoot என்பது உங்கள் வலைத்தின் கோப்புக்கள் இருக்கும் அடைவின் முகவரி. / உட்பட என்பதைக் கவனிக்க. தற்போது நீங்கள் sites-available அடைவின் கீழ் தகுந்த மாற்றங்களைச் செய்துவிட்டீர்கள் என்று உறுதிசெய்த பின் a2ensite என்ற கட்டளையைப் பயன்படுத்தி இந்த வலைத்தளத்தை ஏவுங்கள். a2dissite என்ற கட்டளை உங்கள் வலைத்தளத்தை வழங்குவதை செயலிழக்கச் செய்யும்.
$ a2ensite www.example.com
இறுதியாக நீங்கள் அப்பாச்சி வழங்கியை மீண்டும் தொடங்க வேண்டும். அப்பாச்சி வழங்கி தொடர்ச்சியாக தொழிற்பட்டுக் கொண்டு இருக்கும். எப்படி தொடங்குவது எப்படி நிப்பாட்டுவது, எப்படி மீண்டும் தொடங்குவது போன்றவற்றுக்கான அடிப்படைக் கட்டளைகளை பின்னர் பாக்கலாம்.
$ /etc/init.d/apache2 reload
மேலே கூறப்பட்டவை அடிப்படையான அமைவுகள் தான். மேலதிக அமைவுகள் பாதுகாப்பு, தேவைகள் முன்னிறுத்திச் சேர்க்கப்படலாம். தற்போது நீங்கள் உங்கள் கணினியில் அல்லது வழங்கியில் உள்ள உலாவியில் www.example.com என்று போனால் /home/www/www.example.com/ என்ற அடைவில் இருக்கும் வலைப்பக்கம் கான்பிக்கப்படும்.
மேற்கூறியதில் வெற்றி என்றால் உங்கள் வலைத்தளம் இணையம் ஊடாக உலகெல்லாம் பார்க்கப்படலாம் என்று அர்த்தமில்லை. உங்கள் கணினி/வழங்கியில் மட்டுமே உள்ளன என்பதே உறுதி. எப்படி எல்லோரும் இணையம் ஊடாகப் பார்க்கச் செய்வது? அடுத்த கட்டத்துக்க்ப் போகலாம்.
களப் பெயர் முறைமை வழங்கி (DNS - டி.என்.எசு) மூலம் களப்பெயரை வலை வழங்கிக்கு திசைவித்தல்
[தொகு]அப்பாச்சி வழங்கிக்கு ஒரு static ip வழங்குவது நிலையான சேவையை உறுதிப்படுத்தும். உங்களிடம் static ip வசதி இல்லாவிடின் no-ip.com அல்லது dyn.com/dns போன்ற ஒரு சேவையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
முதலில் நீங்கள் ஒரு களப்பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். களப்பெயர் பதிவு செய்த நிறுவனமே உங்களுக்கு டி.என்.எசு சேவை வழங்கலாம். அப்படி இல்லாவிடின் நீங்கள் டி.என்.எசு சேவை வேறு ஒரு நிறுவனத்திடம் பெற வேண்டும். களப்பெயர் செய்த நிறுவனத்திடம் டி.என்.எசு வழங்கிக்கான name server record சுட்ட வேண்டும். உங்களிடம் போதிய நுட்பம் அறிவு இருக்குமாயின் நீங்களே ஒரு டி.என்.எசு வழங்கியை நிறுவிக் கொள்ளலாம்.
static ip இருக்கும் பட்சத்தில் உங்கள் டி.என்.எசு வழங்கியில் ஒரு முகவரிப் பதிவு (A record) ஒன்றைச் சேர்ப்பது போதுமானதாக இருக்கும். ஒரு மாதிரி A record பின்வருமாறு அமையும். முறையே களப்பெயர், time to live, பதிவு வகை, static ip என அமையும்.
Host TTL Type Data www.example.com 100 A 111.111.111.111
மேலதிக modules
[தொகு]உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மேலதிக modules நீங்கள் நிறுவிக் கொள்ளலாம். எ.கா mod_rewrite, mod_userdir ஆகியவை.
வெளி இணைப்புகள்
[தொகு]- The_Apache_Web_Server (ஆங்கிலத்தில்)
- VirtualHost Examples - (ஆங்கிலத்தில்)
- How to Install Apache on Linux - (ஆங்கிலத்தில்)