இங்சுகேப்பு/நிரப்பு மற்றும் ஸ்ட்ரோக்
நிரப்பு மற்றும் ஸ்ட்ரோக்
[தொகு]
குறுக்குவிசை : Ctrl+⇧ Shift+F
அனைத்து பொருள்களுக்கு (வடிவங்கள், பாதைகள் மற்றும் உரை) நிரப்பு மற்றும் ஸ்ட்ரோக் பாணிகளைச் சேர்ப்பதற்குப் பயன்படுகிறது. ஸ்ட்ரோக் என்பது பொருளின் வெளியே அமைந்திருக்கும் கோடு ஆகும், நிரப்பு என்பது பொருளின் உள்ளே இருக்கும் பகுதியாகும்.
நிரப்பு மற்றும் ஸ்ட்ரோக் சாளரத்தை அமைக்க, மேலே உள்ள பட்டிப் பட்டையில் (menu bar) ‣பொருள் ‣‣நிரப்பு மற்றும் ஸ்ட்ரோக்... என்பதைச் கொடுக்கவும் அல்லது Ctrl+⇧ Shift+F என்பதை பயன்படுத்தவும்.
சாளரத்தின் அமைப்பு
[தொகு]சாளரத்தின் மேல் பகுதியில் மூன்று தத்தல்கள் உள்ளன :
- நிரப்பு (Fill)
- ஸ்ட்ரோக் பெயிண்ட் (Stroke paint)
- ஸ்ட்ரோக் பாணி (Stroke style)
சாளரத்தின் கீழ் பகுதியில் மூன்று அளவுருக்கள் உள்ளன, இவை நிரப்பு மற்றும் ஸ்ட்ரோக்கை ஒன்றாக பாதிக்கக்கூடியவை:
- கலவை முறைமை (Blend mode)
- மங்கல் (Blur)
- ஒளிபுகா நிலை (Opacity)
பொதுவான அமைப்புகள்
[தொகு]முதலில் இந்த மூன்று அளவுருக்கள் பற்றிப் பார்க்கலாம்.
கலவை முறைமை
[தொகு]
கலவை முறைமை என்பது கீழ் அடுக்குகளில் வண்ணங்கள் எவ்வாறு கலக்கிறது என்பதை மாற்ற பொருளில் நீங்கள் சேர்க்கக்கூடிய ஒரு விளைவு ஆகும். கலப்பு கலவை முறைமைகளை மாற்றுவதன் மூலம் உங்கள் படத்தின் தோற்றத்தை மாற்றலாம். உதாரணத்திற்குப் படத்தில் காணலாம், ஆரஞ்சு நிற நீள் சதுரக்கம் அடியில் ஒரு படத்தை வைத்து சதுரத்தை Normal முறைமையில் வைத்தால் அடியில் உள்ள படம் தெரியாது, ஆனால் வேறு சில முறைமைகளை பயன்படுத்தும் பொழுது அடியுள்ள படத்தின் நிறமும் சதுரத்தின் நிறமும் ஒன்றோடு ஒன்று கலக்கிறது.
மங்கல்
[தொகு]
இயல்பாக, இங்சுகேப்பில் உள்ள பாதைகள், பொருள்கள் கூர்மையானவை, இந்த அம்சத்தைப் பயன்படுத்தும் போது அவை மங்கலானதாக தெளிவற்றதாக மாறும். நிரப்பு மற்றும் ஸ்ட்ரோக் சாளரத்தில், 0% இருந்தால் அவை கூர்மையாக இருக்கும் ஆதலால் 10% முதல் 100% வரை மதிப்பு நாம் தேர்ந்தெடுக்கலாம்.
மங்கலான தனிமத்தின் தோற்றம் மங்கலின் அளவை மட்டும் சார்ந்து இருப்பதில்லை, அதன் பொருளின் அளவையும் வடிவத்தையும் சார்ந்துள்ளது.
நிரப்பு மற்றும் ஸ்ட்ரோக் சாளரத்தை தவிர கூடுதலாக, ட்வீக் கருவி மூலமும் பொருட்களின் கூர்மையைக் கட்டுப்படுத்தலாம், இந்தக் கருவியின் கருவிக் கட்டுப்பாடுகளில் உள்ள
இதை பயன்படுத்தி ஒரு அல்லது பல பொருட்களின் கூர்மையாக்கிட கணினிச் சுட்டியை வைத்து இடது பொத்தான் அழுத்திக்கொண்டு தேய்ப்பதன் மூலம் தொடர்ந்து ஒரே நேரத்தில் குறைக்க அல்லது அதிகரிக்க அனுமதிக்கிறது. இந்த கருவி, பெரும்பாலும் முடிக்கப்பட்ட படத்தில் உள்ள விடயங்களை அழகு கூட்டப் (last touch up) பயன்படுகிறது.
ஒளிபுகா நிலை
[தொகு]ஒளிபுகாநிலை என்பது ஒளிவின்மையின் அளவு அல்லது ஒரு பொருளைக் கடந்து செல்லும் ஒளியின் அளவைக் குறிக்கிறது.
இயல்பாக, பயன்படுத்தும் உள்ள பொருள்கள் 100% ஒளிபுகாநிலையுடன் ஒளிபுகாத நிலையில் இருக்கும். இந்த மதிப்பை விரும்பியபடி மாற்றலாம். இது குறைந்தபட்ச 0% மதிப்பாக அமைக்கப்பட்டால், பொருள் முழு வெளிப்படையானதாக மாறும், அதாவது கண்களுக்கு புலப்படாது.
நிரப்பு
[தொகு]நிரப்பல் வகைகள்
[தொகு]- 1.
பெயிண்ட் இல்லை அல்லது வெற்று (no paint) - பொருட்களில் நிரப்பல் இல்லா அமைந்திருக்கும்.
- 2. ஃப்ளாட் வண்ணம் (flat color)
- நிரப்புதலில் சீரான வண்ணம்.
- 3.
கோடு கிரேடியண்ட் அல்லது நேரியல் கிரேடியண்ட் (linear gradient) - ஒரு பக்கத்திலிருந்து மற்றொன்று பக்கத்துக்கு வண்ண சாய்வு அமைந்திருக்கும், இது எந்த கோணமும் சாத்தியமாகும்.
- 4.
ஆர கிரேடியண்ட் (radial gradient) - நீள்வட்ட அல்லது வட்ட வண்ண சாய்வு, இதன் ஒரு வண்ணம் மையத்திலும் மற்றொன்று விளிம்பிலும் அமைந்திருக்கும்.
- 5.
கிரேடியண்ட் மெஷ் (gradient mesh) - சிக்கலான வண்ண சாய்வுகளை உருவாக்கப் பயன்படுத்தக்கூடியது.
- 6.
பாணி (pattern) - 7.
மாதிரி (custom swatch) - 8.
அமைக்கப்படாத பெயிண்ட் (paint unset)
நிரப்பு வண்ணங்கள்
[தொகு]"ஃப்ளாட் வண்ணம்" என்ற நிரப்பல் வகையை நீங்கள் பயன்படுத்தினால், உங்களுக்கு ஆறு வகை வண்ணக் கட்டுப்பாட்டு முறைகள் இதில் கிடைக்கும். இவை ஒன்றொன்றும் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
HSL
[தொகு]
HSL என்பது சாயல் (Hue), செறிவு (Saturation), வெளிச்சத்தன்மை (Lightness) என்பதன் சுருக்கமாகும். இதில் நான்கு தடப்பட்டிகள் 0 முதல் 100 வரையிலான மதிப்புகளுடன் உள்ளன, இது எந்த நிறத்தையும் எந்த ஒளிபுகா நிலையுடன் நிற்த்தை உருவாக்க அனுமதிக்கிறது.
இந்த HSL முறையைப் பயன்படுத்த நிற நுட்பங்களில் எந்த ஒரு முந்தைய அறிவும் தேவையில்லை என்பதால் தொடக்கநிலையாளர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
- முதல் பட்டி
- முதல் பட்டி சாயலுக்கானது இது இன்சுகேப்புத் தமிழ் மொழிபெயர்ப்பில் "ஹு" என்று அறியப்படுகிறது. இது சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா போன்ற நிறங்களையும் அதன் துணை நிறங்களையும் கொண்டுள்ளது.
- இரண்டாம் பட்டி
- இரண்டாம் பட்டி செறிவுக்கானது இது இன்சுகேப்புத் தமிழ் மொழிபெயர்ப்பில் "சேச்சுரேஷன்" என்று அறியப்படுகிறது. இது முதல் பட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ள நிறத்தின் திண்மை (intensity) நிலைகளைக் கொண்டுள்ளது.
- மூன்றாம் பட்டி
- மூன்றாம் பட்டி வெளிச்சத்தன்மைக்கானது இது இன்சுகேப்புத் தமிழ் மொழிபெயர்ப்பில் "வெளிச்சத்தன்மை" என்றே அறியப்படுகிறது. இது முதல் பட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ள நிறத்தின் வெளிச்சத்தன்மை நிலைகளைக் கொண்டுள்ளது. 0 என்பது இருள்மிகு நிலையையும், 100 வெளிமைமிகு நிலையையும் கொண்டுள்ளது.
ஸ்ட்ரோக் பாணியில் பின்வருவன அடங்கும்:
- cm, in, pt, pc, mm, px, % ஆகிய அளவிட்டு வடிவங்களில் அகல அளவுகளை உள்ளிடலாம்.
- மிட்டெர் (miter), வட்டம் (round), சாய்தளம் (bevel) கோடு மூலைகளை அமைக்கலாம்.