எம்ஐடி அப் இன்வெண்டர்
App Inventor2 இன் உதவியால் ஆண்ட்ராய்டு சூழலில் கூகுளின் வரைபடவசதியை கொண்டுவரலாம்
புதிய நகரங்களுக்கு நம்முடைய மகிழ்வுந்தில் சென்று அதனை நிறுத்தம் செய்திடும் இடத்தில் நிறுத்திவிட்டு, அந்நகரின் வேறு ஒரு இடத்தில் உள்ள நம்முடைய அலுவலக பணி/சொந்த பணியை முடித்தபின்னர் நம்முடைய மகிழ்வுந்து எங்கு நிறுத்தினோம் என தேடிக்கண்டுபிடித்திட இந்த பயன்பாட்டின் உதவியால் நம்முடைய சாதனத்தின் ஆண்ட்ராய்டு சூழலில் கூகுளின் வரைபடவசதியை கொண்டுவரலாம் இதற்காக Activity starter, Label, Button, Horizontal arrangement, TinyDB, Location sensor ஆகிய உறுப்புகள் தேவையாகும். இவையனைத்தும் நம்முடைய சாதனத்தின் ஆண்ட்ராய்டு பகுதியில் உள்ளன. இவைகளை பிடித்து இழுத்துவந்து ஒரு இடத்தில் விட்டிடுக. இவைகளில் ஒருசில நம்முடைய கண்ணிற்கு புலப்படும் ஒருசில புலப்படாதவை (nonvisible என்பதன் கீழ் இருக்கும்). பின்னர் பொத்தான்களை(Button) கிடைமட்டமாக Horizontal arrangement என்பதன்கீழ் சரிசெய்து அமைத்து கொள்க அதன்பின்னர் Label, Button ஆகியவற்றிற்கான பண்பியல்புகளை சரிசெய்து அமைத்து கொள்க. இதில் Activity starter ஆனது ஏற்கனவே நம்முடைய சாதனத்தில் நிறுவுகை செய்யபட்டு தயார்நிலையில் இருக்கும். இது மற்ற பயன்பாடுகளை தூண்டிவிட்டு அதனை செயல்பட செய்வதற்கு பயன்படுகின்றது.
மேலும், இந்த Activity starter இல் Action எனும் பண்பியல்பின் மதிப்பாக android,intent.action.VIEW என்பதையும், ActivityClass எனும் பண்பியல்பின் மதிப்பாக com.google.android.maps.MapsActivity என்பதையும், ActivityPAckageஎனும் பண்பியல்பின் மதிப்பாக com.google.android.apps.mapsஎன்பதையும் அமைத்துகொள்க. இதன்பின்னர் Block Editorஎன்பதில் நம்முடைய பயன்பாடானது தற்போதைய இடஅமைவை பெறவேண்டும் , அதற்காக Location_Save_Button எனும் தற்போதைய இட அமைவை சேமித்திடவேண்டும். மேலும் Location_Save_Button ஏற்கனவே சேமித்துள்ள இடஅமைவை மேலெழுத செய்யதிவேண்டும் Show_Directions_Buttonஎனும் பொத்தான் நாம் நிறுத்திய இடத்திற்கும் தற்போதைய இடத்திற்குமான பாதையை கூகுள் வரைபடத்தின் துனையுடன் வழிகாட்டிவேண்டும் ஆகிய செயலிற்கான அமைவை கட்டமைவு செய்திடவேண்டும் அதன்பின்னர் beginner இலிருந்து Block Editor மாறிடுக அங்கு முதல் Block ஆனது இடஅமைவை குறிப்பிடுவதாகும் இதில் மாறுதலானால் உடன் மாறிய இடஅமைவை குறிப்பிட பயன்படுகின்றது இந்த இடஅமைவை Label இன் வாயிலாக திரையில் காண்பிக்கின்றது பின்னர் நாம் Save எனும் பொத்தானை அழுத்தி இந்த இடஅமைவையும் முகவரியையும் சேமித்திடபயனபடுகின்றது மீண்டும் இந்த Save எனும் பொத்தானை அழுத்தினால் தற்போதைய இடஅமைவையும் முகவரியையும் நிகழ்நிலை படுத்தி சேமித்திடபயன்படுகின்றது அதற்கடுத்ததாக Show_Direction எனும் பொத்தானை அழுத்தினால் முந்தைய இடத்திற்கும் தற்போதைய இடத்திற்கும் இடையே சென்றுசேருவதற்கான வழியைகூகுள் வரைபடத்தின்துனையுடன் காண்பிக்கின்றது இதன்பின்னர் இந்த பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து buildஎனும் பொத்தானை அழுத்தி நம்முடைய சாதனத்தில் நிறுவுகை செய்து பிழைஏதும் இருந்தால் சரிசெய்து பரிசோதித்து பயன்படுத்தி பார்த்திடுக