உள்ளடக்கத்துக்குச் செல்

கடைசி பெஞ்ச்சிலுள்ள அரக்கர்களின் பேரரசர் பாகம் 1 - முன்கதை

விக்கிநூல்கள் இலிருந்து

அதிகாலை இரண்டு மணி. அனைவரும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தனர்.

விண்ணில் இருந்து ஒரு சிறிய ஒளி வேகமாக சென்றுகொண்டிருந்தது.

இவ்வுலகில் வசிப்பவர்கள் அனைவரும் பார்த்தவுடனே சொல்லிவிடுவார்கள், அது என்னவென்று . அது விண்கல்லும் அல்ல, பறவையும் அல்ல, பறக்கும் இயந்திரமும் அல்ல. அது பறந்து செல்லும் ஒரு மந்திரவாதியின் பின்னல் தெரியும் மந்திர சக்தியின் வெளிச்சம்.

கார்கூந்தல் உடைய ஒரு பெண், விலையுயர்ந்த ஆடை மேல்சட்டை அணிந்து கொண்டு, காற்றை கிழிக்கும் வேகத்தில் சென்றுகொண்டிருந்தாள். அவள் கன்னத்தில் வழியும் வியர்வை அவள் பின்னல் ஒரு மூடுபனி போல படர்ந்தது. அவள் முகத்தில் உள்ள பதட்டம் அவளின் கவலை இரவின் குளிர் காற்றினால் மட்டும் அல்ல என்பதை தெளிவுபடுத்தியது.

அவளது மேல்சட்டையில் ஒரு வெள்ளிச் சின்னம் பளிச்சிட்டது. அந்த சின்னம் ஒரு பாம்பு ஒரு சிலுவையை சுற்றிக்கொண்டு வாயில் ஒரு ஆப்பிள் பழத்தை கடித்துக்கொண்டிருப்பது போல் உள்ளது. அந்த சின்னத்தை இவ்வுலகில் தீயசக்தி கொண்ட மந்திரவாதிகளே அணிவார்கள்.

அவள் மேல்சட்டைக்குள் இருந்து ஒரு சிறிய கை வெளியே வந்து அந்த சின்னத்தைப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தது. ஆம், அந்த பெண் ஒரு குழந்தையை வைத்திருந்தாள்.

குழந்தையை பத்திரமாக ஒரு கையில் பிடித்துக்கொண்டு பின்னல் திரும்பிப் பார்த்தாள். மந்திர சக்தியை குறைவாக பயன்படுத்திப் பறக்க முடியாது. அப்படி பறக்கும் போது எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதுவரை யாரும் அவளை பின்தொடர்ந்து வருவது போல் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவள் செல்லும் வேகத்திற்கு கண்டிப்பாக தொலைவில் வருபவரும் கூட அவளை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

“இந்த குழந்தை எங்கே இருக்கிறதென்று அவர்களுக்கு தெரிவிக்காமல் இருந்தால் போதும்”, அவள் முனங்கினாள்.

அவள் மந்திர சக்தியை மறைப்பதற்கு, அவள் செல்ல வேண்டிய இடத்திற்கு முன்பாகவே தரையிறங்கி பின் ஒளி மந்திரம் கூட உபயோகிக்காமல் இருட்டில் நடந்து சென்றாள். பறக்கும் பொது, காட்டின் எல்லையில் ஒரு சிறிய ஊர் இருப்பதை அவள் பார்த்திருந்தாள். அந்த இடம் எது என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அந்த ஊரின் கட்டமைப்பும் நுழைவாயிலில் செதுக்கப்படிருந்த சின்னத்தையும் பார்த்த அவள், தனக்கு தேவையான வசதி இந்த ஊரில் இருக்கும் என்பதை உணர்ந்தாள்.

அந்த ஊர் மிக அமைதியாக இருந்தது. சில நூறு மனிதர்களே இருந்தாலும், அங்கே ஒரு பெரிய தேவாலயம் இருந்தது. அந்த குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்யவேண்டியது அவசியம். அவளுக்கு ஏற்றது போல் அந்த தேவாலயம் கோ ரோ கடவுளுக்காக கட்டப்பட்டது. அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அன்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அந்த குழந்தையை விட்டு செல்ல ஏற்ற இடம்.

அந்த குழந்தை கடைசியாக விட்டு செல்கிறோம் என்று என்னும் பொழுது அவளுக்கு ஒரு நிம்மதி பிறந்தது. அவள் அந்த குழந்தையை, மக்களின் வரும்கால நம்பிக்கையாக விளங்கும் அந்த குழந்தையை, ஒரு நல்ல இடத்தில விட்டு செல்கிறோம் என்று மகிழ்ந்தாள்.

“நீ பாதுகாப்பாகவும் உன்னுடைய விதியை வெல்ல தேவையான சக்தியையும் பெற கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.”

அந்த குழந்தையின் காதில் மந்திரங்களை முனுமுனுத்துவிட்டு, தன் மேல்சட்டையை கழற்றி அந்த குழந்தையை அதில் சுற்றி வாசல் படிகளில் மெதுவாக வைத்தாள்.

“நீ தான் எங்களுடைய எதிர்கால நம்பிக்கை சின்னம்.”

அவள் அந்த வாசலில் இருந்து சிறிது தூரம் ஓடிய பின் திரும்பி அந்த குழந்தையை பார்த்தாள். அவள் கண்கள் குழந்தையை விட்டு செல்லும் தாயைப்போல வருந்தியது. இருப்பினும்...

“!”

அவள் தோல்வியை எண்ணிய பிறகு அவள் முகபாவம் உடனே மாறியது. அவள் முன்னால் தெரியும் வழியை பார்த்து நடக்க ஆரம்பித்தால். அவளின் தோல்வி அந்த குழந்தையின் கண்களில் இருட்டிலும் பளிச்சென தெரிந்தது.

அந்த குழந்தை அழவில்லை; அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தது. அதன் முகத்தில் உள்ள உணர்ச்சி ஒரு குழந்தையைப்போல் இல்லை. பருவம் வந்த வாலிபன் காதல் தோல்வியில் சோர்வடைந்த முகத்தை போல் இருந்தது.

“- என்னால் ஒன்றும் செய்ய முடியாது. என் மீது தான் தவறு உள்ளது....” – இதைத்தான் அந்த குழந்தையின் கண்கள் வருத்ததுடன் கூறின.

“உன்னுடைய விதி நாங்கள் நினைப்பதைப் போல் இருக்கக்கூடாது..... இல்லை, அப்படி இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் விருப்பப்படுகிறோம்...”

அந்த பெண் முனுமுனுத்துக்கொண்டே அந்த காட்டில் சென்று மறைந்தாள்.

அந்த குழந்தை வானைதில் உள்ள நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டு, தன்னை ஏன் விட்டு சென்றார்கள் என புரியாமல் விழித்துக்கொண்டிருந்தது.

பத்து வருடங்கள் கடந்து விட்டது.