உள்ளடக்கத்துக்குச் செல்

கோணங்காடு

விக்கிநூல்கள் இலிருந்து

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் தாலுகாவில் உள்ள கல்லுகூட்டம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அழகிய கிராமம் கோணங்காடு. நாகர்கோவில் - குளச்சல் பிரதான சாலையில் உடையார்விளை சந்திப்பில் இருந்து வடமேற்கே 01 கி.மீ தொலைவில் உள்ளது.இது குளச்சலில் இருந்து வெறும் 02 கி.மீ. தொலைவில் உள்ளது.

மையப் பகுதியில் கோணம்காடு புனித சவேரியார் தேவாலயம் உள்ளது. இங்கே எல்.கே.ஜி முதல் மேல்நிலைப் பள்ளி வரை ஒரு பள்ளி உள்ளது.இந்தப் பள்ளி மாணவர்கள் விளையாட்டு, கலை, கல்வி போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர். மேலும் தேவாலய வளாகத்தில் ஒரு தபால் அலுவலகம் அமைந்துள்ளது. பின்கோடு-629803.ஒரு ரேஷன் கடையும் இருக்கிறது.

மேலும் தேவாலய நிர்வாகத்தின் கீழ் ஒரு வங்கி மற்றும் சுகாதார மையம் உள்ளது. தென்னை மரங்களால் சூழப்பட்ட ஒரு குளம், சிறிய ஆறு உள்ளது. பல வகையான வாழை மரங்கள், மா மரங்கள், பலா மரம் ஆகியவை உள்ளன.

"https://ta.wikibooks.org/w/index.php?title=கோணங்காடு&oldid=18069" இலிருந்து மீள்விக்கப்பட்டது