"எண்முறை மின்னணுவியல்/எண்தளமுறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
620 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
எண்தளமுறைகள் பற்றிய படிப்பு எண்முறை மின்னணுவியலில் தகவல்களை எவ்வாறு எண்களால் விவரிக்கப்படுகிறது என்பதை அறிவதற்கான அடிப்படையான ஒரு தலைப்பாகும். இது தகவல் எண்களை எப்படி செயலாக்கம் செய்யப்படுகிறது என்பதை அறிவதற்கு முன்பு அவ்வெண்களை விவரித்தல் என்பது அவசியமாக கருதுவதினால் இப்பிரிவு எண்முறை மின்னணுவியலின் முதல் பாடப்பிரிவாக கருதுகின்றனர். இப்பிரிவில் மின்னணுவியலிற்கு தொடர்பில்லாத பாடமாக இருந்தாலும், பதின்ம (decimal) எண்முறையை முதலில் படிக்கத் துவங்குவோம். இது எண்முறைகளில் அடிப்படையான சில தத்துவங்களை பரைசாற்றுகின்றன. பிறகு நாம் இருமம் (binary), எண்மம் (octal) மற்றும் பதினறுமம் (hexadecimal) போன்ற பிற எண்முறை கணிதத்தை காணலாம்.
==ஒப்புமையும் எண்முறையும்==
எண்ணுரு மதிப்புகளின் வடிவாக்கத்தில் பெரும்பாலும் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. அவை ஒப்புமையும், எண்முறையும் ஆகும். ''ஒப்புமை'' என்பது இரண்டு உச்ச அளவுகளுக்குள் வடிவாக்கம் செய்யும் தொடர் எண்ணுருமதிப்புகளாகும். இதில் குறிப்பிடத்தக்க கோட்பாடு என்னவென்றால் இதன் எண்ணுரு மதிப்புகளின் மாறுபாடுகள் தொடர்ச்சியாக இருக்கக்கூடிய ஒரு வடிவாக்க வகை என்பதாகும். ''எண்முறை'' என்பது சில எண் அளவுகளில் ஏதேனும் ஒரு அளவில் வடிவாக்கல் ஆகும். அதாவது, இது வெவ்வேறு தனித்த மதிப்புகள் கொண்ட நிலைகளினால் வடிவாக்கம் செய்யும் வகையாகும். சுருங்கச் சொன்னால், ஒப்புமை வடிவாக்கம் தொடர் வெளியீடை தரும். எண்முறை வடிவாக்கம் தனித்த வெளியீடை உருவாக்கும். ஒப்புமைக் கட்டகங்கள் ஒப்புமை வடிவத்தில் உள்ள வெவ்வேறு இயல் மதிப்புகளை செயலாக்கம் செய்கிற கருவிகள் கொண்டவையாகும். எண்முறை கட்டகங்கள் எண்முறை வடிவத்தில் உள்ள வெவ்வேறு இயல் மதிப்புகளை செயலாக்கம் செய்கிற கருவிகள் கொண்டவையாகும்.
 
[[பகுப்பு:எண்முறை மின்னணுவியல்]]
1,223

தொகுப்புகள்

"https://ta.wikibooks.org/wiki/சிறப்பு:MobileDiff/13331" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி