உள்ளடக்கத்துக்குச் செல்

செடிகள் கொடிகள் மரங்கள்/செடிகள்/எள்

விக்கிநூல்கள் இலிருந்து

ealth Benefits Of Sesame Seeds For Female: எள் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் சூடான தன்மை உடலுக்கு வெப்பமூட்டும் தன்மையைக் கொண்டுள்ளது. இது குளிர்காலத்திற்கு ஏற்ற உணவாக அமைகிறது. குளிர்காலத்தில் பெண்கள் எள் விதைகளைச் சாப்பிடுவது பல வகையானநன்மைகளைத் தருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை நீக்க உதவுகிறது.

பெண்களின் எலும்புகளை வலுவடைவதுடன், உடல் வலியைக் குறைக்கிறது. இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், புரதம், வைட்டமின் ஏ, சி மற்றும் சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவேய்தனை உட்கொள்வதன் மூலம் பெண்களின் தசைகள் வலுவடைவதோடு செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளும் நீங்குகிறது. இதில் பெண்களுக்கு எள் விதைகள் தரும் நன்மைகள் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். எள்ளு விதைகள் மிக சிறியதாக இருக்கும். ஆனால் அதில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்களின் அளவு மிக பெரியது. எள்ளு மூன்று நிறங்களில் உள்ளது ஆனால் எல்லா எள்ளு விதைகளுக்கும் ஒரே அளவில் தான் ஊட்டச்சத்துக்கள் இருக்கும். எள்ளின் மொத்த சக்தியையும் பெற வேண்டும் என்றால் அதை ஒரு நாளின் முதல் உணவாக உண்ண வேண்டும். எள்ளு வைத்து செய்யும் சமையல் குறிப்புகள் சிலவற்றை இங்கு காணலாம். அத்திபழம், எள்ளு விதைகள் மற்றும் ஓட்ஸ் ஓட்ஸ் என்பது பல விதமான காலை உணவுகளில் மிக சிறந்த உணவாகஇருக்கிறது. இது வயிற்றுக்கு லேசான உணவாகவும் நாவிற்கு சுவையான விருந்தாகவும் இருக்கும்.

இதுவும் உதவலாம்:சர்க்கரை நோய்க்கு சியா விதைகள் நல்லதா?

தேவையான பொருட்கள் ஓட்ஸ் - 1/2 கப் தண்ணீர் -1 கப் எள்ளு விதைகள் - 1 ஸ்பூன் அத்தி - 2 பொடியாக அரிந்த காய்ந்த அத்தி ஏலப்பொடி - 1 ஸ்பூன் தேவைக்கேற்ப உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் செய்முறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு அனைத்து பொருட்களையும் அதில் சேர்க்கவும். 3-5 நிமிடங்கள் அடுப்பில் கொதிக்க வைத்து, பின் அடுப்பை அணைத்து விடவும் இதன் மேல் விருப்பமான உலர் பழங்கள் மற்றும் நட்ஸ சேர்த்து அலங்கரிக்கலாம். எள்ளுடன் சேர்ந்த காய்கறி ஆம்லெட் பிரட் மற்றும் காய்கறிகள் கலந்த ஆம்லெட் செய்து சாப்பிட பிடிக்கும் என்றால் இந்த குறிப்பை செய்து பார்க்கலாம்.

sesame seeds uses in tamil

தேவையானவை வெங்காயம் - 1/2 அரிந்தது குடைமிளகாய் -1/2 அரிந்தது தக்காளி - 1/2 அரிந்தது பொடியாக அரிந்த காய்கறிகள் கலவை முட்டைகள் - 2-3 எள்ளு விதைகள் - 1-2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு காரம் - தேவையான அளவு செய்முறை காய்கறிகளை அரிந்து தனியாக வைக்கவும் ஒரு பெரிய பாத்திரத்தில், முட்டையை உடைத்து அதில் உப்பு மற்றும் காரம் சேர்க்கவும். இப்போது இதில் அரிந்த காய்களை சேர்த்து கலக்கவும். ஒரு சூடான கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் இந்த முட்டை கலவையை ஊற்றவும். இந்த முட்டை கலவை மீது எள்ளு விதைகள் தூவி, வேக விடவும். நன்கு வெந்ததும் இதை டோஸ்ட் செய்த பிரட் மேல் வைத்து சாப்பிடலாம். சப்பாத்தியுடன் எள்ளு விதைகள் தேவையானவை கோதுமை மாவு - தேவையான அளவு எள்ளு விதைகள் - 1 ஸ்பூன் உப்பு தேவைக்கு தண்ணீர் தேவைக்கு வெண்ணெய் (தேவைப்பட்டால்) செய்முறை ஒரு பெரிய பாத்திரத்தில், கோதுமை மாவு, எள்ளு மற்றும் தண்ணீர் சேர்க்கவும். இவற்றை பிசைந்து மென்மையான உருண்டைகளாக உருட்டி சில நிமிடங்கள் தனியாக வைக்கவும். சப்பாத்தி கட்டையால் இதை தேய்க்கவும். ஒரு சூடான தோசை கல்லில் தேய்த்த சப்பாத்திக்களை போட்டு கொஞ்சம் நெய் அல்லது வெண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். உங்கள் உணவில் எள்ளு விதைகள் சேர்க்க பல வழிகள் உள்ளன. நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு சாலட் செய்யும் போது, வறுத்து பொடித்த எள்ளு சேர்த்தால் கூடுதலான சுவை கிடைக்கும் எள்ளு விதைகள் கொண்டு சிற்றுண்டியாக எள்ளு மிட்டாய் மற்றும் எள்ளு லட்டு செய்து சாப்பிடலாம் இதுவும் உதவலாம்:நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் சிறந்த உணவுகள்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க! இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளைத் தேடுகிறீர்களா? அதை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். அதற்கு இந்த பதிவு உங்களுக்கு கைக்கொடுக்கும். ஆம், நீரிழிவு நோய் என்பது மக்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான மற்றும் சவாலான உடல்நல பிரச்சனைகளில் ஒன்றாகும். உலக மக்கள் தொகையில் சுமார் 11% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆம், அதை நிர்வகிப்பது சவாலானது. எனினும், சாத்தியமற்றதல்ல. ஆயுர்வேதம் ஒரு பழங்கால மருத்துவ அறிவியல் ஆகும், இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் தீர்வுகளை பரிந்துரைக்கிறது. இந்த பதிவில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது பற்றிய பயனுள்ள தகவல்களை பற்றி பார்க்கலாம்.

இதுக்குறித்து விரிவாக அறிந்து ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவோம். இந்த தகவலை ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்சா பவ்சர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

நிபுணரின் கருத்து அவர் ” ஆயுர்வேதம் எளிய சமையலறை மூலிகைகளின் உதவியுடன் நீரிழிவு நோயை தடுக்கும் மற்றும் கட்டுக்குள் வைக்கும்” என்கிறார். ஆயுர்வேதம் பற்றிய மிக அழகான விஷயம் என்னவென்றால் நோயைத் தடுப்பது / சிகிச்சையளிப்பது மட்டுமில்லை அதன் சிக்கல்களை தடுக்கவும் இது உதவுகிறது. உதாரணமாக , நீரிழிவு நோயாளிகள் (5+ வருடங்கள்) நீரிழிவு எதிர்ப்பு மாத்திரைகளை உட்கொண்டாலும், எதிர்காலத்தில் அதிக கொழுப்பு / இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த ஆயுர்வேதத்தை தேர்வு செய்தால், அது நிச்சயமாக சர்க்கரை அளவை சமநிலைக்கு கொண்டு வரும். அதே நேரத்தில் அதன் சிக்கல்களை தடுக்கவும் உதவும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் பட்டை இலவங்கப் பட்டை இன்சுலின் எதிர்ப்பை குறைக்கிறது. உணவுக்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகிறது. உடலில் இருக்கும் கூடுதல் கொழுப்பை கரைக்கவும், கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கவும் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

செயல்முறை 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டையில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் மற்றும் 1/2 டீஸ்பூன் வெந்தயப் பொடியை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். ஒரு சிறிய துண்டு இலவங்கப்பட்டையை மூலிகை டீயில் சேர்த்தும் குடிக்கலாம். நீரழிவுக்கு நோய்க்கு ஏற்ற கருப்பு மிளகு இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. கூடவே சர்க்கரை கூர்மைகளையும் தடுக்கிறது.கருப்பு மிளகில் இருக்கும் பைபரின் என்கிற வேதிப்பொருள் ரத்தத்தின் சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது..

செயல்முறை •இடித்த கருப்பு மிளகுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை வெறும் வயிற்றில் அல்லது இரவு உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு உண்ண வேண்டும்.

நீரிழிவு நோய்க்கு உதவும் வெந்தயம் இதில் இருக்கும் கசப்பு சுவை மற்றும் சூட்டை குறைக்கும் சக்தி காரணமாக நீரிழிவு, உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ராலுக்கு ஏற்ற சிறந்த ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றாக வெந்தயம் உள்ளது. இது ரத்த சர்க்கரையை குறைக்கிறது, குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் இருக்கும் மொத்த கொழுப்பு, எல்டிஎல் மற்றும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கிறது.

செயல்முறை 1 டீஸ்பூன் (5 கிராம்) வெந்தய பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் அல்லது உறங்க செல்லும் போது குடிக்க வேண்டும். 1/2 டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் பருக வேண்டும். இந்த பதிவும் உதவலாம்:கேன்சர் முதல் பல நோய்களுக்கு மருந்தாகும் மல்பெரி பழம் நீங்களும் இந்த ஆயுர்வேத உணவுகளை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே.


குப்பைமேனி இலைகள் இருந்தால் எந்த நோயையும் குணப்படுத்தலாம்; மருத்துவ பயன்கள் அதிகம் பாட்டி வைத்தியத்தில் குப்பைமேனி இலைகளுக்கு முக்கிய இடம் உண்டு. சளி பிடித்தால், காய்ச்சல் அடித்தால் அந்த காலத்தில் குப்பைமேனி இலைகளை அரைத்து சிறிய சங்கில் வாயில் ஊற்றுவார்கள். குப்பைமேனி இலைகள் ஒரு நாளிலேயே உடம்பில் மாயாஜாலம் நிகழ்த்தக்கூடியவை. நம்முடைய முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக மருத்துவ பயன்களுக்கு பயன்படுத்திய தாவரங்களில் குப்பைமேனியும் ஒன்று. குப்பைமேனி செடியை அரிமஞ்சரி என்றும் அழைக்கின்றனர். இதன் பெயர் காரணமாகவோ என்னவோ குறைந்த அளவிலேயே குப்பைமேனி இலைகள் இக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் ஆசிய கண்டத்தின் ஒரு சில பகுதிகளில் காணப்படும் இந்த மூலிகை தாவரம் அதன் மருத்துவ பண்புகளுக்காக பெயர் பெற்றது. சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் பல ஆண்டுகளாக குப்பை மேனி இலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வீட்டில் பாட்டியிடம் குப்பைமேனி பற்றி கேட்டுபாருங்கள். வரிசையாக அதன் மருத்துவ பயன்களை அடுக்குவார்கள்.

குப்பைமேனி இலைகளின் மருத்துவ பயன்கள் காய்ச்சலுக்கு குப்பைமேனி குப்பைமேனி இலைகளில் உடல் வெப்பத்தை தணிக்கும் பண்புகள் இருக்கின்றன. காய்ச்சல் அடித்தால் பாட்டியிடம் செல்லுங்கள். அவர்கள் முதற் காரியமாக குப்பைமேனி இலைகளை அரைத்து சிறிய சங்கில் வாயில் ஊற்றுவார்கள். இதை குடித்த சில மணி நேரங்களில் காய்ச்சல் குறையும். தலைவலி, உடல் வலி ஆகியவற்றுக்கும் குப்பைமேனி இலைகள் தீர்வு அளிக்கின்றன. சிலர் குப்பைமேனி இலைகளை டீயில் போட்டு குடிப்பதுண்டு.

சுவாசக் கோளாறுக்கு குப்பைமேனி காய்ச்சல் வந்தால் கூட மாத்திரை போட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடலாம். சளி பிடித்து கொண்டால் தும்மல் வரும், சாப்பிடுவதற்கும் சிரமமாக இருக்கும், சாப்பிடும் உணவின் சுவை தெரியாது. சளியை நீக்குவதற்கு குப்பைமேனி இலைகளை வெறும் வாயில் போட்டு மெல்லுங்கள். ஆவி பிடிக்கும் போது குப்பைமேனி இலைகளை பயன்படுத்தவும். சுவாசக் குழாயில் ஏற்பட்ட ஒரு விதமான நெரிசலில் இருந்து விடுபடலாம். ஆஸ்துமாவை குணப்படுத்துவதற்கும் குப்பைமேனி இலைகள் உதவுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த குப்பைமேனி இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளை கொண்டது. தொடர்ந்து குப்பைமேனி இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல்வேறு விதமான தொற்றுகள், நோய்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவோம்.

காயத்திற்கு குப்பைமேனி மருந்து குப்பைமேனி இலைகள் மிகச் சிறந்த வலி நிவாரணியாகும். உடலில் எங்காவது காயம் அல்லது வீக்கம் ஏற்பட்டு இருந்தால் அந்த இடத்தில் குப்பைமேனி இலை அரைத்து தேய்க்கவும், எண்ணெயில் குப்பைமேனி இலைகளை சூடுபடுத்தி ஆறவிட்டு ஒரு மணி நேரம் கழித்து காயம் உள்ள இடத்தில் தடவவும்.

மேலும் படிங்கவாய் கசப்புக்கான காரணங்களும், விரைவில் தீர்க்க உதவும் சிகிச்சை முறைகளும்

சரும பிரச்னைக்கு குப்பைமேனி இலைகள் குப்பைமேனி இலைகள் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இதன் காரணமாக தோலழற்சி, சொரியாசிஸ், பரு போன்ற தோல் நோய்களை குணப்படுத்த முடியும்.

இதே போல மலச்சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக குப்பைமேனி இலைகள் கொண்டு டீ போட்டு குடிக்கவும். செரிமானப் பிரச்னைகளை தீர்க்கவும் குப்பைமேனி இலைகள் உதவும். உடலில் இரத்த சர்க்கரை அதிகமாக இருந்தால் கட்டாயம் குப்பைமேனி இலைகள் சாப்பிடவும்.

பீர்க்கங்காய் நன்மைகள் : இரத்த சோகை, பார்வை திறன், கல்லீரல் பிரச்னைகளுக்கு சரியான மருந்து பீர்க்கங்காயில் நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற அத்தியாவசிய சத்துகள் ஏராளமாக நிறைந்துள்ளன. பீர்க்கங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம். கோடைகாலத்தில் உணவில் சேர்த்துக் கொள்ளவும், உடல் சூட்டை குறைக்கவும் பீர்க்கங்காய் ஒரு சிறந்த கோடை காய்கறியாகும். அதிக நீர்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகளைக் கொண்ட பீர்க்கங்காய் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் பி6, பொட்டாசியம், சோடியம், தாமிரம் மற்றும் செலினியம் ஆகியவற்றின் களஞ்சியமாகும். உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்க உதவும் என்பதால் இது கல்லீரல் செயல்பாட்டிற்கும் உகதந்தாக கருதப்படுகிறது. பீர்க்கங்காய் சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும்.