பயனர்:பாஸ்(எ)பாஸ்கரன்

விக்கிநூல்கள் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
         மறைந்து போன தமிழக விளையட்டுகள்
  இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் பாரம்பரியமான விளையட்டுகள் மறைந்துபோய் விட்டது. உடல் உழைத்து ஓடி ஆடிய காலமெல்லாம் மறைந்து போய் விட்டது. கணினி முன் அமர்ந்துகொண்டும் தொலைப்பேசியை கையில் எடுதுக்கொண்டும் மட்டுமே நம் குழந்தைகள் விளையாடி வருகின்றன்ர். நாம் விளையடிய விளையாட்டுக்களை எல்லாம் நம் தலைமுறைக்கும் கற்றுக்கொடுக்கவேண்டும். கண்கள் கெட்டு கண்ணாடி போடுவதையும் , உடல் பருத்து சர்கரைநோய் உள்ளிட்ட பல நோய்கள் வராமல் நம் தலைமுறைகளை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
    பாரம்பரிய விளையாட்டுகள் என்னென்ன என்பதயே நம்மில் பலர் மறந்துபோய் விட்டோம்.விளையாட்டுகளை வகைப்படுதுகிறேன் பாண்டியட்டம்,கிச்சுத்தாம்பழம்,குலைகுலையாய் முந்திரிக்கா,கோட்டான் கோட்டான்,காக்காகுஞ்சு,தாயக்கட்டம்,முதாட்டம்,அட்டைப்பெட்டியாட்டம்,திருடன் போலிஸ்,ஊஞ்சலாட்டம்,இன்னும் பல விளையட்டுகள் உண்டு.இவையெல்லாம் பாடல்கலோடு பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் விளையாடுபவைகள்,
     இவற்றால் என்னபயன் என்ன தெரியுமா? உடலுக்கு உழைப்பு,நாட்டுப்புறபாடல்கலை வளர்த்தல்,பாட்டுப்பாடும் திறனைவளர்த்தல்,போன்ற பல்வேறு திறனைகளை நம் குழந்தைகள்பெறுவார்கள் மேலும் ஒவ்வொரு விளையட்டுக்கும் ஓர் பாடல் உண்டு.
     1.கோட்டான் கோட்டான் பாடல்
       கோட்டான் கோட்டான்
       கோட்டுக்குள்ள எத்தனை பேரு
        பத்துப்பேரு கொட்டக்கொட்ட
         யாரைக்கொட்ட??????
     2.குலைகுலையாய் முந்திரிக்க்காய்
       குலை குலையாய் முந்திரிக்காய்
       குழைந்து போச்சு கத்திரிக்காய்
       ஊசியக்காணோம் ஊதிஊதி எடுத்துக்க
       பாசியக்காணோம் பார்த்துப்பார்த்து எடுத்துக்க
       பச்சரிசியை திண்பேன் பல்லெல்லாம் உடைப்பேன்,,,,,,
  இது போன்ற பல்வேறு விளையாட்டுக்களை நம் தலைமுறைக்கும் கற்றுக்கொடுப்போம் தமிழை வளர்ப்போம்
"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்:பாஸ்(எ)பாஸ்கரன்&oldid=15344" இருந்து மீள்விக்கப்பட்டது