பயனர்:Thirunavukkarasukovil
தோற்றம்
துணிவுடன் செயலாற்று! அற்ப இன்பத்தை புறக்கணிப்பவன் பெரும் இன்பத்தைக் காண முடியும்.
- கருமிகள் தர்மத்தைப் புறக்கணிப்பதால் கடவுளின் உலகை அடைய முடிவதுஇல்லை.
- மனதில் துாய்மை இருக்குமானால், உன்னை நிழல் போல இன்பம் தொடர்ந்திருக்கும்.
- கவலையால் மனதை நைந்து போகச் செய்யாதே. எப்போதும் தளராத உறுதியும், துணிச்சலும் கொண்டிரு.
- இளமை முதல் முதுமை வரை ஒழுக்கம் நிலைத்திருப்பது இனிமையானது.
- புத்தர்
மற்றவர் மீது குற்றம் சுமத்தாதீர்கள். உங்கள் மனதிற்குள் இருக்கும் முரண்பாடுகளைக் களைய முற்படுங்கள்.
- வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் தியானத்திற்கான வாய்ப்பாக கருதுங்கள்.
- உலகத்தை வெல்வதைக் காட்டிலும், மனிதன் தன்னை வெல்வதே மிகச் சிறந்த வெற்றி.
- செயலில் நேர்மையும், தூய்மையும் மிளரட்டும்.
- ஒவ்வொரு கணப் பொழுதும் இனிமையானது. அதை அனுபவித்து மகிழக் கற்றுக் கொள்ளுங்கள்.
- குடும்பத்திற்காக மட்டுமின்றி நம்மை ஆளாக்கிய சமுதாயத்திற்கும் பயனுள்ளவராக வாழுங்கள்.
-புத்தர்
மனப்புயலை அடக்கிவிடு
- தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.
- சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும் வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த யோகியாகிறான்.
- எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப் படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.
- ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை அடக்க வேண்டும்.
- வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது. அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக் கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை.
- சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும், விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல் இருப்பான்