உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:தமிழ்விரும்பி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிநூல்கள் இலிருந்து

கற்பனை அல்ல இது அதிகாலை தூக்கம் கலைத்துச் சென்றதொரு கனவு..

அகவை எய்திய அரும்பு

அழகாய் பனித்துளி படர்ந்த கரும்பு

கீரை பறிக்கும் தலைவி

அடைந்த கோழி முடுக்கும் கிழவி

அனைத்தும் ரசித்தே சிறுவன்..

கூடவே செல்லும் நாய்.. கருமன் !!

என்னே ஒரு காட்சி ...

இதே அழகோடு இன்னும் நீடித்திருந்தால் நான்றகத் தானிருக்கும் ...

காட்சியின் நீட்சியாய் கண்டேன் அக்கனவை

காத தூரத்திலே கரும் பச்சை உடுப்பினிலே சாரையாய் தெரிந்தது...

தெரிவது தெளிவாகும் முன் சிறுவன் சிதறியடித்து பின்னோட ...

களி உருண்டை அளவினிலே பந்து மழை பெய்தது

விழுந்த பந்து ஒவ்வொன்றும் உருண்டது நிலத்தில் புகைஉடனே..

அடுத்த காட்சி தோன்றும் முன்னே அழிந்தது அழகுத்தோட்டமொன்று..

அடிவயிறு கலங்க கண்விழித்தேன் சிறுவனின் கடைசி கதறல் காதுக்குள் - அம்மா ?!! .....

அம்மா .. அம்மா ..ஐயோ அது என் தாய் மொழி அன்றோ ?

அழிந்தவன் என் சக உதிரன் ... அந்த பந்து புதைந்த மண் என் முன்னோர் விதைந்த மண் ..

அய்யகோ !! இனியும் தூக்கமா ? இல்லை தூக்கம் வரத்தான் செய்யுமா ?

கற்பனை அல்ல இது.. கையால் ஆகா ஒரு சகோதிரனின் ஒப்பாரி - தமிழ்விரும்பி

Start a discussion with தமிழ்விரும்பி

Start a discussion