பூனைக்குடும்ப விலங்குகள்/புலி

கொடுங்கரடி பெரிதாக இருப்பினும் மெதுவானது ஆனால் புலிகள் வேகமும் விரைவான இயக்கமும் கொண்டிருப்பதால் ,புலிகளுக்கு “சிறந்த வேட்டைவிலங்கு” என்ற பட்டம் கொடுக்கக்ப்படுகின்றது.புலியே இன்று வாழும் பூனைபேரின விலங்குகளிலேயே பருமனில் பெரிதும் , பலம் கூடியதுமான விலங்கு .புலிகள் எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்கும் விளையாட்டுவீரனை போன்றவை.அவை மரங்களில் ஏறக்கூடியவை(ஆயினும் அவை அதில் சிறந்தவை இல்லை ).நீந்தக்கூடியவை.அதிக தூரங்களுக்கு பாயக்கூடியவை. ஒரு வலிமையான மனிதனை போன்று ஐந்து மடங்கு வலிமையுடன் இழுக்க கூடியவை.புலி,சிங்கம்,சிறுத்தை மற்றும் ஜாகுவார் நான்கும் பாந்தெரா பேரினத்தை சேர்ந்தவை.இவை மட்டுமே கர்ச்சிக்கும் ஆற்றல் கொண்ட பூனைபேரின விலங்குகள்.புலியின் கர்ச்சிப்பு ஒரு முழு பலத்துடன் கர்ச்சிக்கும் சிங்கத்தின் கர்ச்சிப்பை போல இருக்காது.அது கோபத்துடன் கத்திய வார்த்தைகள் போல பெரும்பாலும் இருக்கும்.
புலிகள் எங்கே வாழும்?
[தொகு]
கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் புல்வெளிகள் மற்றும் காடுகளில் புலிகள் வாழ்கின்றன.பின்வரும் நாடுகளில் புலிகள் வாழ்கின்றன: பங்களாதேஷ்,பூட்டான்,சீனா,நேபாளம்,கம்போடியா,லாவோஸ்,மலேசியா,மியன்மார்,தாய்லாந்து,வியட்நாம்,இந்தோனேசியா(சுமாத்ரா) மற்றும் ரஷ்யாவின் கிழக்கு பகுதி.வங்காள புலி பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் தேசிய விலங்காகும்.புலிகள் இந்தியாவின் மேற்கு வங்காளத்திலும் வாழ்கின்றன.
புலிகள் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?
[தொகு]
மற்ற பெரிய பூனைப்பேரின விலங்குகளைப்போல புலிகளும் பார்ப்பதற்கு வீடுகளில் வளர்க்கும் சிறிய வீட்டுப்பூனைகளை போலவே இருக்கும். ஆனால் உருவத்தில் மிகப்பெரியதாகவும் அதிக வலிமையுடனும் இருக்கும்.
பெரும்பாலான புலிகள் செம்மஞ்சள் அல்லது சிவந்த செம்மஞ்சள் நிறத்தில் காணப்படும்.மிகவும் தடித்த ஒழுங்கற்ற கரிய கோடுகளை கொண்டிருக்கும்.வெள்ளை நிற பகுதிகள் நெஞ்சு,கழுத்து,வயிற்று பகுதி மற்றும் உள்ளங்கால்கள் என்பவற்றில் காணப்படும்.புலிகளின் கோடுகள் அவற்றின் உருமறைப்பு உத்திக்கு உதவியாக உள்ளது. அந்த கோடுகள் காடுகளில் உள்ள மரங்கள் மற்றும் புதர்கள் இடையே புலிகளை மறைந்து இருக்க உதவுகின்றது.இந்த கோடுகள் புலிக்கு புலி வேறுபட்டு காணப்படும்.
சாதரணமான ஒரு புலி அதன் மூக்கிலிருந்து வால் நுனி வரை அண்ணளவாக 6 அடி முதல் 9 அடி வரையான நீளத்தை கொண்டிருக்கும்.ஒரு பெரிய புலி 10 அடி(3 மீட்டர் )வரை நீளம் கொண்டிருக்கும்.புலிகளின் வால் அண்ணளவாக 36 அங்குலம்(91 சென்டிமீட்டர் அல்லது 3 அடி) நீளமாக இருக்கும். புலிகள் அண்ணளவாக 350 பவுண்ட் முதல் 550 பவுண்ட் வரையான எடையை கொண்டிருக்கும்(160 முதல்250 கிலோகிராம்).
புலிகளுக்கு மிகவும் வலிமையான பற்களும் தாடைகளும் உள்ளது.அவற்றின் உள்ளங்கால்கள் மென்மையாகவும் நிரம்பியும் பெரிய வளைந்த நகங்களால் முடியும் காணப்படும்.மேலும் புலிகளுக்கு கட்டையான தடித்த மற்றும் மென்மையான உரோமமும், தடித்த நீளமான முக முடிகளும் காணப்படும்.
வெள்ளைப்புலிகள் குறிப்பிட்ட ஒரு மரபியல் குறைபாட்டினால் தோல்,கண்கள் மற்றும் உரோமத்தில் நிறமிகள் இல்லாமையால் உருவாகின்றது.இந்த புலிகள் வெள்ளை நிறத்துடன் கறுப்பு அல்லது சாம்பல் அல்லது கரும் நீல நிறக்கோடுகளுடன் காணப்படும்.சில வேளைகளில் கோடுகள் இல்லாமலும் இருக்கும். இவற்றுக்கு இருப்பது அல்பினிசம் எனப்படும் வெண்மை தோல் நோயல்ல.