விக்கிநூல்கள்:Username policy
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொட்டையூர் கிராமத்தை சேர்ந்த கே மணிவண்ணன் என்கிற ஜீவன் மயில் தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியராகவும் கதை ஆசிரியராகவும் இசையமைப்பாளராகவும் நாட்டுப்புற பாடகராகவும் இருந்து வருகிறார். சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக திரை அனுபவம் பெற்றவராகவும் இருக்கிறார். இவர் 1998 ஆம் ஆண்டு "கண்ணோடு காண்பதெல்லாம்" என்ற திரைப்படத்தில் தேனிசை தென்றல் தேவா இசையில் அர்ஜுன் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில்"தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே என்ற பாடல் மூலம் புகழ்பெற்றவர். பிறகு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதி இருக்கிறார். 2016 ஆம் ஆண்டு ஜீவா நயன்தாரா நடிப்பில் ஸ்ரீகாந்த்தேவா இசையில் ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த "திருநாள்" திரைப்படத்தில் "பழைய சோறு பச்சை மிளகாய்" என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் சிம்பொனி ரெக்கார்டிங் தயாரிப்பில் நடிகர் கருணாஸ் இசையமைத்த வெட்டிவேரு வாசம் என்ற தனியார் நாட்டுப்புற பாடல்கள் ஆல்பத்தில் ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு மூக்குத்தியாம் என்ற பாடலையும் எழுதி இருக்கிறார் ஜீவன் மயில். மேலும் "என் நெஞ்சை தொட்டாயே" "நீ எனக்காக மட்டும்" "ஆதி தப்பு" "இனிய உளவாக" "இளவட்ட பசங்க" "சேலம் ஏழு" "புலிக்கொடி தேவன்" போன்ற சிறுமுலீட்டு படங்களுக்கு இசையமைப்பும் செய்து வருகிறார். மேலும் பல்வேறு தனியார் பாடல்களுக்கும் விளம்பரங்களுக்கும் பாடல் இயற்றி இசையமைத்தும் வருகிறார்.