ஹொங்கொங் வாழ்க்கையில், பெற்றது அதிகம்! இழந்தது அதிகம்! ஆய்வு

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஹொங்கொங் வாழ்க்கையில், பெற்றது அதிகம்! இழந்தது அதிகம்! ஆய்வு

ஹொங்கொங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் ஒழுங்குப்படுத்திய நீயா நானா நிகழ்வு, 2011 சனவரி, 08ம் திகதி ஹொங்கொங், சிம் சா சுயி, விஞ்ஞான அருங்காட்சிய அரங்கில் நடைப்பெற்றது. இதில் வைக்கப்பட்ட தலைப்பு வெளிநாட்டு வாழ்க்கையில் பெற்றது அதிகம்! இழந்தது அதிகம்! என்பதாகும். இந்த விவாதத்தில் "பெற்றது அதிகம்!" தலைப்பில் திவ்யதர்சினியும் "இழந்தது அதிகம்! தலைப்பில் சிவகார்த்திகேயனும் தலைமைவகித்தனர். இந்த விவதாத களத்தை மையப்படுத்தி, ஹொங்கொங் வாழ் தமிழரின் வாழ்வியலை ஆய்வு செய்வதே இந்த ஆய்வின் நோக்கம்.விவாதத்தில் கலந்துக்கொண்ட இரண்டு தரப்பினரின் உரையாடல்களும், நீயா நானா நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத்தின் பதில்களும் கீழே அட்டவணை வடிவில் தொகுக்கப்ப்பட்டுள்ளன. அதன் பின்னர் இந்த கலந்துரையாடலையும், கோபிநாத்தின் பதில்களையும் ஆய்வு நோக்கில், ஹொங்கொங் வாழ் தமிழரின் வாழ்வியல் ஆய்வு கீழே இடம்பெறும்.

பெற்றது அதிகம்! இழந்தது அதிகம்!
இந்தியாவில் பெண்களுக்கு கௌரவ குறைவு நடக்கிறது இங்கே அது நடப்பதில்லை. பெற்றுக்கொண்டது குறைவு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டும் தான் பெற்றுக்கொள்கிறார்கள். இழப்பு அதிகம்
உறவினரை இழந்துள்ளேன். ஆனால் சிறந்த நண்பர்களை பெற்றுள்ளேன். Effect without any expectation ஒரு சிக்னலைத் தாண்டிப் போயிவிட்டு, ட்ரபிக் போலிஸ் பிடித்தால், “எங்கள் மாமா கவுன்சிலர்” என்று கூறிவிட்டு போகமுடியுமா? (களவு செய்யமுடியாது)
கருத்தரித்தால் வீட்டில் வந்து அம்மா வந்திருக்க முடியாது இந்தியாவில். ஏனெனில் அது “மாமியார் வீடு என்பர்” ஆனால் இங்கே என் அம்மா என்னுடன் வந்து இருந்தார் (இந்திய குடும்பச் சிக்கல்கள் இல்லை) பெண்கள் இருக்கிறார்கள் ஆனால், மூக்கு முழியுமாக என்று சொல்ல முடியாது. எல்லா பெண்களும் ஒரே மாதிரி தெரிகிறார்கள். (ஒரே ஒருவர் தான் உட்பத்தி செய்கிறாரா?) சயிட்டடித்தல் என்ஜோய்மெண்ட் இல்லை