தற்போது நேரம் 17:06 திகதி செவ்வாய், சனவரி 7, 2025 - தேக்கத்தை நீக்கு
செப்டம்பர் 27: உலக சுற்றுலா நாள்
1905 - அல்பேர்ட் ஐன்ஸ்டைன் முதற் தடவையாக E=mc² (படம்) என்ற சமன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
1996 - ஆப்கானிஸ்தானில் முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கைப்பற்றி முன்னாள் அதிபர் முகமது நஜிபுல்லாவை காபூல் நகரத்தில் மக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டுக் கொன்றனர்.
1998 - கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளினால் ஓயாத அலைகள் இரண்டு நடவடிக்கை மூலம் வெற்றி கொள்ளப்பட்டது.
செப்டம்பர் 28: தாய்வான் - ஆசிரியர் நாள்
1795 - யாழ்ப்பாணத்தை ஜெனரல் ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படைகள் டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.
1889 - "நிறை மற்றும் அளைவைகளுக்கான பொது மாநாட்டில்" மீட்டரின் நீளமானது பனிக்கட்டியின் உருகுநிலையில் 10 விழுக்காடு இரிடியம் கலந்த பிளாட்டினம் கலவையின் கோள் ஒன்றின் இரண்டு கோடுகளிற்கிடையேயான நீளத்துக்கு சமனாக அறிவிக்கப்பட்டது.
1928 - ஸ்கொட்லாந்து அறிவியலாளர் அலெக்சாண்டர் பிளெமிங் (படம்) பெனிசிலினைக் கண்டுபிடித்தார்.
செப்டம்பர் 29: 'ரோஸ் ஹஸானா' யூத புத்தாண்டு
1941 - உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர்.
1993 - மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
2003 - சூறாவளி ஜுவான் கனடாவின் ஹாலிபாக்ஸ் (படம்) துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.
செப்டம்பர் 30: பொட்சுவானா - விடுதலை நாள்(1966); சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்.
1840 - நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
1949 - சோவியத் ஒன்றியத்தின் தரைவழித் தடையை அடுத்து மேற்கு ஜெர்மனிக்கு 2.3 மில்லியன் தொன் உணவுப் பொருட்கள் வான்வெளி மூலமாக அனுப்பப்பட்டது.
1965 - இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து சுமார் ஒரு மில்லியன் கம்யூனிஸ்டுகளைக் கொன்று குவித்தார்.
2003 - தமிழ் விக்கிப்பீடியா (படம்) ஆரம்பிக்கப்பட்டது.
2005 - முகம்மது நபிகளை அவமதிக்கும் வகையில் டனிஷ் செய்திதாளில் படங்கள் வெளியிடப்பட்டன.