விக்கிநூல்கள்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிநூல்கள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 266: வரிசை 266:
#Support --[[பயனர்:Rsmn|Rsmn]] 01:40, 29 அக்டோபர் 2011 (UTC)
#Support --[[பயனர்:Rsmn|Rsmn]] 01:40, 29 அக்டோபர் 2011 (UTC)
# ஆதரவு -- --parvathisri 17:48, 30 அக்டோபர் 2011 (UTC)
# ஆதரவு -- --parvathisri 17:48, 30 அக்டோபர் 2011 (UTC)

:வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. இது தொடர்பாப் [https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=32340 பதியப்பட்ட வழு]--[[பயனர்:Sodabottle|Sodabottle]] 13:52, 10 நவம்பர் 2011 (UTC)


== வேளாண்மை, சிறு தொழில்கள், சுற்றுச்சூழல் நூல்கள் தொகுப்பு பற்றி ==
== வேளாண்மை, சிறு தொழில்கள், சுற்றுச்சூழல் நூல்கள் தொகுப்பு பற்றி ==

13:52, 10 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

காப்பகம்

ஆலமரத்தடிக்கு வருக!இங்கு விக்கிநூல்கள் குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் போன்றவை இடம் பெறுகின்றன. தாங்களும் இப்பக்கத்தில் உங்கள் கருத்துக்களைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

விக்கிப்பீடியா | சமுதாய வலைவாசல் | உதவி | மணல்தொட்டி | தலைப்பைச்சேர்


புதிய நூல் அடுக்குகள் உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

மொழிகள் அடுக்கின் கீழ்

  • அரபி
  • பிரெஞ்சு
  • ஹிந்தி
  • சமஸ்கிருதம்
  • உருது
  • ஜெர்மன்
  • மலையாளம்
  • தெலுங்கு
  • கன்னடம்

உருவாக்கப் பட்டு உள்ளது.


கணிதம் அடுக்கின் கீழ்

  • எண் கணிதம்

உருவாக்கப் பட்டு உள்ளது.--Pitchaimuthu2050 15:54, 16 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி பிச்சைமுத்து. ஆலமரத்தடியில் எப்பொழுதும் பக்கத்தின் கடைசியில் புது உரையாடலை தொடங்குவது தான் விக்கிநூலகர்கள் வழக்கம்.--இராஜ்குமார் 16:01, 16 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இனிமேல் அவ்வாறே செய்கிறேன். விக்கி நூல்களின் உப பகுப்பை உருவாக்குவதில் தற்போது ஈடுபட்டு உள்ளேன். அவற்றில் ஏதும் வழுக்கள், மற்றும் உப பிரிவில் குறைகள் ஏதும் இருப்பின் நிவர்த்தி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.--Pitchaimuthu2050 07:53, 17 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]



கணிதம் அடுக்கின் கீழ் இன்று (௧௭-செப்-௨௦௧௧) சில பகுப்புகளைச் செய்து உள்ளேன், அவற்றை சரி பார்க்கவும்,
  • பாடம்:கணங்களும் சார்புகளும்
  • பாடம்:மெய்எண்களின் தொடர்வரிசைகளும் தொடர்களும்
  • பாடம்:இயற்கணிதம்
  • பாடம்:அணிகள்
  • பாடம்:வடிவியல்
  • பாடம்:முக்கோணவியல்
  • பாடம்:அளவியல்
  • பாடம்:புள்ளியல்
  • பாடம்:நிகழ்தகவு

இன்னும் சில மணி நீரங்களில் இற்றைப் படுத்துதல் முடியும் என எண்ணுகிறேன் --Pitchaimuthu2050 07:53, 17 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

பாடம்:கணினி இணையவியல், பாடம்:கணினி நிரலாக்க மொழிகள் தொகுக்கப்பட்டு உள்ளது.

இணையம் மற்றும் இணையம் சார்ந்த தொழில்நுட்ப நூல்களை (ASP,ASP.NET,HTML) பாடம்:கணினி இணையவியல் பக்கத்தின் கீழ் தொகுக்கலாம். c,c++,C#, PHP போன்ற நூல்களை இங்கு பாடம்:கணினி நிரலாக்க மொழிகள் தொக்கலாம்.

பாடம்:கணினி மென்பொருள் கீழ் கொண்டுவரப்பட வேண்டிய நூல்கள்

தற்போது சி ஷார்ப், யுனிக்ஸ் கையேடு போன்ற நூல்கள் "பாடம்:கணினி மென்பொருள்" கீழ் தொகுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இவைகள் "பாடம்:கணினி நிரலாக்க மொழிகள்" கீழ் தொக்குகப்பட வேண்டும். பாடம்:கணினி மென்பொருள் இந்தப் பகுதியின் கீழ் மென்பொருள் உருவாக்க தொழில் நுட்பங்கள் தொகுக்கப்பட வேண்டும்.

முதற்பக்க சீரமைப்பு

என்னால் இதனை நன்றாக தெரிந்து கொள்ள முடிகிறது. விக்கிநூல்களின் ஆங்கில பதிப்பு முதற்பக்கம் எந்தவித ஆற்பரிப்பும் இல்லாமல் மிக எளிமையாக அமைந்து உள்ளது. ஆனால் தமிழ் விக்கிநூல்களின் பதிப்பில் முதற் பக்கம் மின்னும் வகையில் செய்யப் பட்டு உள்ளது. ஆனால் விக்கிநூல்கள் தமிழ் பதிப்பில் எந்த ஒரு நூல்களும் முழுமையாகக் கூட செய்யப் பட வில்லை. நான் விக்கி சமுதாயத்திடம் கேட்பது ஒன்றுதான். முதற்பக்க மினுமினுப்பா அல்லது விக்கி நூல்கள் தளத்தின் தரமா? ஆகவே முதற்பக்கம் எப்படி மின்னுகிறது என்பதை விட விக்கி நூலகள் தளத்தினுள் செல்ல சிறந்த தொடுப்புகளை அங்கு வைக்காலம் என எண்ணுகிறேன். ஆகவே நான் சொல்ல விளைவது விக்கி அன்பர்கள் முதற்பக்க வடிவமைப்பு மிக எளிமையாக இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். ஆனால் உள்ளே உள்ள புத்தகங்களுக்கு உரிய தொடுப்புகள் அங்கு இருக்க வேண்டும்.--Pitchaimuthu2050 13:02, 10 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

தமிழ் நண்பர்கள் நூல்களை ஆரம்பிக்கலாம்

ஏதாவது நூல்களை ஆரம்பிக்கலாம். ஒரு வேளை அதிக கட்டுரைகளை உருவாக்க முடியாத நபர்கள், ஒரு குறிபிட்ட நூலில் எந்த வகையான தலைப்புக்கள் இருக்கலாம் என்பதையாவது எழுதினால். பின்னொரு பொழுதில் வருங்கால விக்கி அன்பர்கள் அவர்களுக்கு பிடித்தமான தலைப்பு அங்கு இருக்குமேயானால் அதனை அவர்கள் தொகுத்து முழுமையடையச் செய்ய முடியும் என நம்புகிறேன். எனவே ஒரு விக்கி அன்பர் ஒரு நூலை எடுத்துக் கொண்டால் அந்த நூல் முழுவதுமே எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரால் ஒரு குறிபிட்ட நூலில் உள்ள தலைப்புகளையாவது பட்டியலிட முடியும் என்றால் அதுவே போதுமானது என எண்ணுகிறேன்.--Pitchaimuthu2050 13:02, 10 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஆலமரத்தடி தொகுக்கப்பட்டது

என்னால் கட்டுரைகள் அதிகமாக எழுத முடியாது, முடியுமானதச் செய்வேன், நன்றி --Shameermbm 05:47, 30 மே 2011 (UTC)[பதிலளி]


இக்கால தமிழர்கள் எதை விரும்பி படிக்கிறார்களோ, எதைப் பற்றி அவர்கள் முதலில் அறிந்துகொள்ள விரும்புகிறார்களோ அதைப் பற்றி முதலில் விக்கி நூலில் புத்தகமாக எழுத நினைகிறேன். எவ்வகையான புத்தகங்கள் எழுதலாம் என்று அறிவுரை கூறவும். --Inbamkumar86 06:34, 5 ஆகஸ்ட் 2010 (UTC)

தட்டச்சுக் கருவி

புதிய தட்டச்சுக் கருவி விக்கி நூலகளில் சேர்க்கப்பட்டுள்ளது. பக்கத்தின் மேல், உங்கள் பயனர் பெயரின் இடப்புறம் தெரிவு உள்ளது. அதைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்க வேண்டுகிறேன்.வழு ஏதேனும் இருப்பின் விக்கிப்பீடியா ஆலமரத்தடியில் இதற்கென ஒரு பகுதி ஒதுக்கியுள்ளேன் அங்கு பதியலாம்.--Sodabottle 18:58, 12 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

த*உழவன்

சோ.பா!

நான் விக்கி மூலத்தில் பயன்படுத்தி பார்த்தேன். எனது அனுபவங்கள் வருமாறு;-

  1. தமிழ்99ஐ தேர்தெடுக்கும் போது, நான் தெரிவு செய்த தட்டச்சு முறை கண்ணுக்குப் புலப்பட்டால் நன்றாக இருக்கும். தட்டச்சு செய்தே, விசைப்பலகையினை அறிய முடிகிறது.
  2. ctrl + m பயன்படுத்தும் போது, உடனே ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் மாறுவதில்லை.
  3. தட்டச்சு குறிப்பு தெரியும் இடத்தில், சிகப்பான பெருக்கல் குறியிருந்தும், தமிழ்99 தட்டச்சு வேலைசெய்கிறது.
  4. ஒரே ஒரு விசையை அழுத்துவதன் மூலம், தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாறினால் நன்றாக இருக்கும்.
  5. hotcat-இல் பயன்படுத்தி பார்க்கவில்லை.
  6. அனைத்து இடங்களிலும் எந்த முறிவும் இல்லாமல் வேலை செய்கிறது. தற்போதைய வசதியை விட இது மிகவும் பலன் அளிக்கவல்லது.தங்களது ஈடுபாட்டிற்கு மிக்க நன்றி கூற கடமைப்படுகிறேன். வணக்கம்.--தகவலுழவன் 19:50, 22 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

பங்களிப்புக்கு நன்றிகள்

ஆம் தற்போதுதான் விக்கிநூல்களுக்கு புத்துயிர் கிடைத்துள்ளது. விக்கிஜூனியர் அறிவிப்புக்களை மற்றுவதற்கு வார்ப்புரு:சிறுவர்கள்/அறிவிப்புக்கள் எனும் இணைப்பில் திருத்தலாம்.--சமீர் 12:07, 22 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

சமீர் தங்களுக்குத் தெரிந்த விக்கிபீடியா நண்பர்களை நூல்களைத் தொகுக்க அழைக்கலாமே. தங்களின் வார்ப்புரு:சிறுவர்கள்/அறிவிப்புக்கள்'வை முன்னமே இருக்கும் நெறிமுறைகள்'வில் சேர்த்து உள்ளோம். இதன் மூலம் அறிவிப்புக்கள் மாறும் பொழுது நெறிமுறைகளில் இருக்கும் அறிவிப்புகள் பகுதியும் மாற்றம் பெரும். அதனை ஒரு பார்வை இடவும். இந்த நெறிமுறைகள் அனைத்து சிறுவர் நூல்களிலும் இட்டுக் கொண்டு இருக்கிறோம்.--Pitchaimuthu2050 14:54, 22 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
அதை நான் கவனிக்கவில்லை, மிகவும் நன்றாக உள்ளது!, விக்கிபீடியாவில் புனியமீன் ஆசிரியரை அழைக்கலாமே! அவரினால் நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன, முன்பு நான் அவரை விநூ அழைத்திருந்தேன் அவர் நல்ல பின்னூட்டலை தந்தார், நீங்களும் அவரை அழைக்கலாமே! --சமீர் 02:55, 23 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
அவரை விக்கிபீடியா பக்கத்தில் அழைத்து உள்ளேன். தங்களின் தகவலுக்கு நன்றிகள்.--Pitchaimuthu2050 06:23, 24 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]


விக்கி ஊடகப் போட்டி கருத்து வேண்டல்

விக்கி ஊடகப் போட்டி கருத்து வேண்டலில் பங்கேற்க வேண்டுகிறேன்--Sodabottle 18:27, 29 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

சிறந்த யோசனை, விக்கிநூல்களுக்கும் சில விசேடமான ஊடகக்கோப்புக்கள் தேவைப்படுகின்றன, இப் போட்டி மூலம் அவற்றை பெற்றுக் கொள்ளலாம். பிச்சுவும் அவரின் நூல்களுக்குத்தேவையான ஊடகங்களைக் கேட்டிருந்தார். ஆங்கில விக்கியில் கிடைக்காத தமிழர் பாரம்பரியம், உணவு வகை என்பவற்றைக் கேட்கலாம்.--சமீர் 04:27, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

பாட நூல்கள்

வணக்கம். பாட நூல்கள்களில் இடம் பெற வேண்டியவை குறித்த குறிப்புகள் தந்தால் நான் முயற்சி செய்கிறேன். பாட நூல்கள் எனும்பொழுது குழந்தைகளின் வயதுக்கும் வகுப்புக்கும் ஏற்றவாறு இருத்தல் அவசியம் என எண்ணுகிறேன். எனவே ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டம் தயாரித்து அந்தந்த தலைப்புகளில் இடம் பெற வேண்டிய கருத்துகளை கூறி விட்டால் யார் வேண்டுமாயினும் நூல்கள் தொகுக்க எளிதாக இருக்கும் என நினைக்கிறேன். இதற்கான் என்னுடைய ஒத்துழைப்பை நல்க நான் தயாராக உள்ளேன்.--parvathisri 11:49, 1 அக்டோபர் 2011 (UTC)

தற்போதைக்கு பிச்சைமுத்து விக்கிசிறுவர் நூல்களின் வார்ப்புரு:சிறுவர்_நூல்கள்_நெறிமுறைகள் தயாரித்துள்ளார். மேலும் இதனையும் பார்க்க விக்கிநூல்கள்:சிறுவர்_நூல்கள். தாங்களின் இது தொடர்பான கருத்துக்கள் வேண்டப்படுகின்றன.
சிறுவர் நூல்கள் நெறிமுறைகள்

இந்த நூல் சிறுவர் நூல்கள் பகுப்பில் வைக்கப்பட்டு உள்ளது. இது சிறுவர்களுக்கு ஏற்ற நூல்; இந்த நூலைத் தொகுக்கும் போது சிறுவர்களின் அறிவுக்கும் அவர்களின் சிந்தனைக்கு எட்டுவனவாக இருக்குமா என்பதை கவனத்தில் கொண்டு எழுத்தர்கள் எழுத வேண்டும் வேண்டும். சிறுவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும், அவர்களுக்கு எவ்வாறு கூறினால் புரியும் என்பதைப் பற்றியும் எழுத்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தில் உருவாக்கப்படும் நூல்களுக்கு பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றலாம்:

  • எளிய, இனிய தமிழ் நடை.
  • கண்ணைக் கவரும் படங்கள் வழியான விளக்கங்கள்.
  • பெற்றோர்களுக்கான உதவிக் குறிப்புகள்.
  • சிறுவர்களின் புரிந்துணர்வுத் திறனை வளர்க்கும் விதமான பயிற்சிகள், கேள்விகள்.
  • கதைகள், விளையாட்டுக்கள், பாடல்கள் வழி பயிற்சி.

இத்திட்டத்துக்காக கட்டற்ற முறையில் படிமங்களைத் தர, படங்களை வரைந்து தர பங்களிப்புகள் மிகவும் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்புக்கள்

  • இவ்வடிவமைப்பு உங்களுக்கு பிடிக்கவில்லையா? [[பேச்சு:விக்கிநூல்கள்:சிறுவர்_நூல்கள்|உரையாடுக!]]
  • அல்லது பிழைகளை சரி செய்ய உதவுவீர்!
  • புதிய நூலினைத் தொகுக்க ஆர்வமா! தயக்கம் வேண்டாம்! இப்போதே ஆரம்பியுங்கள்!.
  • சந்தேகங்களை ஆலமரத்தடியில் கேளுங்கள்.
  • விக்கிப்பீடியாவில் உபயோகிக்கும் தட்டச்சு வேண்டுமா? தயவு செய்து இங்கே செல்லுங்கள்.


--சமீர் 03:05, 2 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

பாட நூல்களுக்கானத் திட்டம்

வணக்கம்.

சிறுவர் பாட நூல்கள்களுக்குக் கீழ்கண்ட பாடப்பொருள்கள் இருக்கலாம் என நினைக்கிறேன்.இவை நூல்களைத் தொகுக்க உதவியாக இருக்குமா? இவற்றில் மாற்றம் இருந்தால் செய்து விடுங்கள்--parvathisri 14:01, 2 அக்டோபர் 2011 (UTC)
வகுப்பு தமிழ் கணிதம் அறிவியல் சமூகவியல் வானியல்
மழலையர் எழுத்து

(படங்களுடன்),உயிர், மெய் முதலியவரிசை, புலவர்கள்,பாடல்கள் ,கதைகள்

எண்கள், எண்களின்

பெயர்கள்,வடிவங்கள், கனவடிவங்கள்,

தாவரங்கள்,காய்கள்,

பழங்கள்,நிறம், பூக்கள், பறவைகள், வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் உயிரினங்கள்(நீர், நிலம்)பூச்சியினங்கள், மீன்கள்,ஊர்வன, முதலியவை

தன் குடும்பம்,

குடும்ப உறுப்பினர்கள், தொழில்,தொழிலார்கள், போக்குவரத்து சாதனம் (தரை, இருப்புப்பாதை நீர்,ஆகாயம்),சுத்தம்,

வானம், நிலவு,

சூரியன்,பருவகாலங்கள்

முதல் வகுப்பு உயிர்

எழுத்துச்சொற்கள் மெய்யெழுத்துச் சொற்கள் (கவரிசை முதல் ன வரிசை வரை) ஒருமை பன்மை, அறுசுவைகள், நீதிப் பாடல்கள், விடுகதை, பாடல்கள்,கதைகள்

எண்களின் பெயர்கள்,

ஏறுவரிசை,இறங்குவரிசை, வாய்பாடு,கூட்டல் கழித்தல், சிறிய எண்விளையாட்டுகள்

பறவை, விலங்குகளின்

வாழிடங்கள்,தாவர பாகம், தாவர வகைகள்(செடி மரம்,கொடி)கால்நடைகள் இறகுகள், இலைகள்

நல்தூய்மை பழக்க

வழக்கங்கள்,பொது இடங்கள்,காலை, மாலை,இரவு, பகல் குறித்த செய்திகள், ஒலிகள்,மழை, வெயில்,பனி, புயல்,காற்று,தாவரம் விலங்குகளினால் நாம் பெறும் பயன்கள்

சூரியன், கோள்கள்,

நட்சத்திரம்,வானவூர்தி, கண்டம், கடல், நாடு

இரண்டாம் வகுப்பு சிறு சிறு தொடர்கள்

சொற்களஞ்சியம் பொருளறிதல்,பாடுதல் எதிர்ச் சொல் அறிதல் கதைகள் கூறுதல், தானே படித்தல், பேசுதல் எழுத்துக்களை இணைத்து சொல் உருவாக்குதல், ஒலி வேறுபாடு அறிதல், சிறு சிறு புதிர்கள், விடுகதைகள், கலந்துரையாடுதல் அகரவரிசை அறிதல், வினா விடை பட அகராதி.

எடுத்துக்காட்டு தவரங்களின் தன்மை,

வாழ்வு,தாவர பாகங்கள்-வேலைகள் பறவைகளின் உடல அமைப்பு,ஒலிகள், உணவுமற்றும் வாழ்வுமுறை விலங்கு அமைப்பு வாழ்ககை முறை

நமது உடல், உணவு

நீர்நிலைகள்,சாலை விதிகள்,மாசு,எளிய முதலுதவி,விளையாட்டு நம் பொருள்களை வகைப் படுத்துதல்,இயற்கை வளங்கள்,காடுகள்,கொடிகள், பொது இடங்கள் வரிசை முறை, மதங்கள், கண்டங்கள்,நாடுகள், தலை நகரம் நானயங்கள்.

சூரியன்,நிலவு,

கோள்கள்,வானவில் திசைகள் முதலியன. கணினி.ராக்கெட், வானியல் குறிதத செய்திகள்

பாடத்திட்டம் அருமை, இவற்றையே தொகுக்கலாம். மேலும் மாற்றங்கள் தேவை எனில் அப்பொழுது செய்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். மழலையர் தொகுப்பை ஆரம்பிப்பதன் மூலம் நமது இலக்கை அடைய முடியும் என்பதில் ஐயம் இல்லை. இதனால் நாம் சில படிப்பினைகளை உருவாக்க இயலும் என எண்ணுகிறேன். முதலில் எழுத்தை ஆரம்பிக்கலாம், என எண்ணுகிறேன். எழுத்து என்னும் பாடமே முதலாக இருக்கிறது என்பதால் இதனைக் கூறுகிறேன். தங்களின் ஆக்கங்களை தொடரலாம் parvathisri.
எழுத்து குறித்து எழுதப்படும் பொழுது தகவலுழவன் கூறியது போன்று அசைப்படங்களும் இருப்பது நலம் என எண்ணுகிறேன்.--Pitchaimuthu2050 08:43, 3 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
ஒவ்வொரு எழுத்துக்களின் பக்கத்திலும் இவ்வாறான எழுத்து விளக்கம் வார்ப்புரு இடப்படுவதன் மூலம் சிறந்த நூலாக அதை தொடுக்கலாம். அ என்ற எழுத்திற்கு கொடுத்து உள்ளேன் வலு இருப்பின் சரி செய்யவும். எழுத்து விளக்கம்|

எழுத்து=ஆலமரத்தடி| பற்றி=இது தமிழ் நெடுங்கணக்கில் முதல் எழுத்து ஆகும்.| படிமம்=Writing Tamil 2.gif| உச்சரிப்பு=ah| சொற்கள்=

  • அம்மா
  • அப்பா|

தமிழ் எழுத்துகள் -> எழுத்துகள்

பாடம்:மொழிகள் தொகுப்பின் கீழ் தமிழ் எழுத்துகள், என்றொரு பக்கம் உள்ளது. இதனை முன்னமே நம்மிடம் இருக்கும் "எழுத்துக்கள்" என்னும் புத்தகத்துடன் இணைக்கலாம் என எண்ணுகிறேன். தமிழ் எழுத்துகள் இந்தப் பக்கம் நீக்கப்படால் நலம் என எண்ணுகிறேன். தங்களின் பரிந்துரையை இங்கு இடவும் அன்புடன், --Pitchaimuthu2050 14:55, 4 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

தமிழ் எழுத்துக்களுடன் இணைப்பதே நல்லது, இனைத்து மொழிகளிலும் எழுத்துக்களுண்டு ஆகவே தமிழ் எழுத்துக்களுடன் இணைப்பதே சாலச்சிறந்தது.--சமீர் 01:33, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
அவ்வாறே செய்து விடலாம் சமீர். அன்புடன் --Pitchaimuthu2050 09:19, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

வணக்கம்.

  1. எழுத்துகள் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கு ஒரு எழுத்து அதனை எழுதும் முறை , அது அடங்கியுள்ள சொற்கள் ஆகியவறைத் தந்தால் மிகவும் அருமையாக இருக்கும். கடைசி பக்கத்தில் அட்டவணை இருந்தால் நன்றாக இருக்கும். மழலையர் பதிப்பு ஆதலால் த.உழவன் அவர்களுடைய 'எழுத்து' (gif ) படங்களை இங்கு பயன்படுத்தலாமே.
இதனை முன்னமே அவ்வாறே கொடுத்து உள்ளேன். தாங்கள் உயிர் எழுத்துக்களைக் http://ta.wikibooks.org/wiki/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85 காணலாமே. --Pitchaimuthu2050 09:19, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  1. மழலையர் பதிப்பிற்கான படங்களுக்கு கூகுள், ஃப்லிக்கர் போன்றவற்றில் வெளி வந்துள்ள (creative commons ) உரிமையுள்ள படங்களைப் பயன்படுத்தலாமா? அதற்கு எதேனும் எண்ணிக்கை அளவுகள் உள்ளனவா? ஏனெனில் படங்களுடன் கூடிய விளக்கங்களே மழலையர் நூலுக்கு ஏற்றவை. --parvathisri 17:20, 4 அக்டோபர் 2011 (UTC)
பகிர்வுரிமம் கொண்ட படிமங்களைப்பயன்படுத்தலாம், சிறுவர் பதிப்புக்கள் அவர்களைக் கவரக்கூடியவாறு அமைக்கப்படல் வேண்டும்.--சமீர் 01:44, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
அதில் இல்லாத படங்களை நாமே கூட தயாரிக்கலாம். மேலும் பெயர்மாற்றம் தேவை என எண்ணுகிறேன். ஏனெனில் எந்த படம் எதற்கு என்பது புரியாமலே இருக்கிறது. உதாரணமாக அ என்ற எழுத்திற்கு Writing Tamil 2.gif என உள்ளது இது எந்த எழுத்து என்பதை பெயரைக் கண்ட உடனேயே சொல்ல முடியவில்லை. இதற்க்கு மாற்று ஏதும் உள்ளதா என்பதை தகவல் உழவன்தான் சொல்ல வேண்டும். பெயர் மாற்றம் செய்யப்படலாமா? --Pitchaimuthu2050 09:19, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
பிச்சைமுத்து, விக்கிநூல்களுக்குள்ளே இருக்கின்ற இணைப்புக்களை [[எழுத்துக்கள்/அ]] என்றே காட்டலாமே, அது (எழுத்துக்கள்/அ) என்ற இலகுவான இணைப்புடன் இருக்கும்.--சமீர் 09:27, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
சமீர், அவ்வாறே செய்துள்ளேன். (எழுத்துக்கள்/அ) பக்கத்தை சரிபார்க்கவும்.--Pitchaimuthu2050 08:44, 6 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

விக்கி நூல்கள்-மழலையர் பகுதி

அன்புடையீர்! மழலையர் பகுதியில் "கேள்வி-பதில்" என்ற தலைப்பில் பல்வேறு தலைப்புகளில் கேள்விகளையும் சில பதில்களையும் சேர்த்திருந்தேன்.இப்பகுதி நீக்கப்பட்டு விட்டதா என அறிய விழைகிறேன்.இதில் மேலும் பங்களிப்பது எப்படி?--MUTTUVANCHERI NATARAJAN 15:27, 4 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

நான் விக்கிக்கு வந்ததில் இருந்து இந்தப் பக்கம் நீக்கம் செய்யப்படவில்லை. எவரேனும் மேலாண்மை அணுக்கம் உடைய உபயோகதாரகள் இந்தப்பக்கம் உள்ளதா எனக் கூறவும். அன்புடன் --Pitchaimuthu2050 09:05, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
இங்கே உள்ளது விலங்குகள்_-_மழலையர்_பதிப்பு/கேள்விகள்.--சமீர் 09:21, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
விக்கியிலும் குழந்தைகளை கேள்வி கேட்க மிகச் சிறந்த பக்கம். ஆனால் குழந்தைகள்தான் பாவம் எனத் தோன்றுகிறது. அவர்களின் எண்ணங்கள் சிறப்பிக்கும்மாறு கேள்விகள் அமைந்தால் நலம் என எண்ணுகிறேன். அதாவது குழந்தைகளை கேட்க்கும் பொழுது அவர்களின் மூளை வேலை செய்ய வேண்டும்(அப்படி என்றால் அவர்களை யோசிக்கும் திறமையை வளர்க்கும் கேள்விகளுக்கு முன்னுருமை தர வேண்டுமே தவிர அவர்களை தனக்குத் தெரியவில்லையே என எண்ண வைக்கக்கூடாது என்பது எனது அன்பான ம

ற்றும் பணிவான வேண்டுகோள்.), அதை விடுத்து பொது அறிவு, பாடநூல் என நாமும் அவர்களை வதைக்க வேண்டாம் என எண்ணுகிறேன். இதனைப் பற்றி விக்கி சமுதாயம் என்ன எண்ணுகிறது என்பதை பகிரவும். அவர்களால் எதனை சொல்ல முடியுமோ அல்லது கூற முடியுமோ அவற்றையே கேள்விகளாக அமைதல் வேண்டும். அவர்களின் உலகையே இங்கு நாம் கேட்பதாக அமைய வேண்டுமே தவிர நமது (யோசிக்கும் திறனற்ற மூளையற்ற மனனம் செய்யும்) உலகை அவர்களுக்குத் திணிக்கக் கூடாது என்பது எனது வன்மையான வேண்டுகோள். அவர்களின் உலகை கேள்விகலாக்க வேண்டுமே தவிர நாம் அறிந்தவற்றை திணிக்க வேண்டாமே. இங்கு குழந்தைகள் எனச் சொல்வது அனைத்து தரப்பட்ட குழந்தைகள் என்பதை கவனத்தில் கொள்ளவும். --Pitchaimuthu2050 10:14, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

மலர்கள் படிமங்கள்

வணக்கம்

'மலர்கள்' புத்தகத்திற்கான் படிமங்களைப் பதிவேற்றியுள்ளேன். இவை public domain, free copy right படிமங்கள் மற்றும் பொது உரிமப் படிமங்கள் ஆகும். இவற்றில் தமிழ்ப்பூக்களின் பெயர்களைச்(குறிஞ்சிப்பாட்டு) சேர்த்துள்ளேன் ஒரு முறை யாரேனும் சரி பார்த்தல் நலம்.
விக்கிநூல்களுக்கான கோப்பை பதிவேற்று படிவத்தில் அணுமதிக்கான் தெரிவுகள் இன்னும் சேர்க்கப்படவில்லை என நினைக்கிறேன். அல்லது நூல்களுக்கு அவை தேவை இல்லையா?சற்று கவனிக்கவும்--parvathisri 17:12, 7 அக்டோபர் 2011 (UTC)
மலர்கள் புத்தகத்துடன் இணைத்து உள்ளேன். சரிபார்க்கவும், அன்புடன் --Pitchaimuthu2050 10:54, 8 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

பாமினி விசைப்பலகை உதவி=

நமது தட்டச்சுக் கருவியில் பாமினி விசைப்பலகை முறையினை சேர்க்க பாமினி தட்டச்சு முறை அறிந்தவர்களின் உதவி தேவைப்படுகிறது - காண்க - விக்கிப்பீடியா ஆலமரத்தடி--Sodabottle 13:33, 14 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]


தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள்/தீபத்திருநாள் வாழ்த்துக்கள்‎‎

Wikibooks to விக்கிநூல்கள்

சில வாரங்கள் முன்னர் சமீர் wikibooks என்று வருவதை “விக்கிநூல்கள்” என மாற்றுவது எப்படி என விக்கிப்பீடியாவில் வினவியிருந்தார். விக்கிப்பீடியாவில் இதற்காக முன் பதிந்த வழுவை ஸ்ரீகாந்த் கண்டு பிடித்துள்ளார். இது போல ஒரு வழு பதிந்தால் இங்கும் மாற்றிவிடலாம். இம்மாற்றத்தை விக்கிநூல்கள் சமூகம் விரும்புகிறது என்பதை மீடியாவிக்கி நுட்ப குழுமத்துக்கு உணர்த்த ஒரு வாக்கெடுப்பு தேவைப்படுகிறது. இம்மாற்றத்தை ஆதரிப்போர் கீழே தங்கள் கையொப்பத்தை இட வேண்டுகிறேன். (ஒரு வாரம் கழித்து வழு பதியப்படும்)

namespace change from "wikibooks" to ”விக்கிநூல்கள்”
  1. Support --Sodabottle 10:11, 25 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  2. Support Logicwiki 10:21, 25 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  3. Support --Surya Prakash.S.A. 10:25, 25 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  4. Support --சமீர் 06:09, 26 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  5. Support --Pitchaimuthu2050 20:01, 28 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  6. Support --Rsmn 01:40, 29 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  7. ஆதரவு -- --parvathisri 17:48, 30 அக்டோபர் 2011 (UTC)
வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. இது தொடர்பாப் பதியப்பட்ட வழு--Sodabottle 13:52, 10 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

வேளாண்மை, சிறு தொழில்கள், சுற்றுச்சூழல் நூல்கள் தொகுப்பு பற்றி

தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம் தங்களின் உதவியை நாடுகிறது

விக்கி நூல்கள் புதிய நூல்களை ஆரம்பித்து உள்ளோம். அவற்றிற்கு உரிய தலைப்புகளை தாங்கள் நல்குமாறு வேண்டுதல் வைத்து இவ்விண்ணப்பம். வேளாண்மை, சிறு தொழில்கள், சுற்றுச்சூழல் நூல்கள் தொகுக்கப்பட உள்ளன. இவற்றைப் பற்றி அறிந்த தெரிந்த வல்லுனர்களை விக்கி நூல்கள் அழைக்கிறது.

ஒரு வேளை தாங்கள் விவசாய துறை சார்ந்த வல்லுனராகவோ அல்லது விவசாயத் துறையில் வேலை செய்பவராகவோ இருக்கலாம், அல்லது ஒரு விவசாய நுட்பங்கள் சார்ந்த நூலை தொகுப்பதில் ஆர்வம உள்ளவராகவோ இருக்கலாம்; அல்லது பல புதிய உத்திகளை செயல் முறை படுத்தும் நவீன கால விவசாயியாகவோ இருக்கலாம்.உங்களுக்காக வேளாண்மை என்னும் நூலை தொகுக்க அழைக்கிறோம். இணையத்தில் பல துறைகள் சார்ந்த நூல்கள் சிறிதளவேனும் தமிழில் உருவாக்கம் செய்யப் பட்டு உள்ளது ஆனால் விவசாயம் சார்ந்த நூல்களுக்கு குறிப்பிட்ட அங்கிகாரத்தைக் கொடுக்கவில்லை எனவே இந்த நூலை தொகுக்கவும் விவசாயம் சார்ந்த நுட்பங்களை பதிவிடவும் விக்கிபீடியா சமுதாயத்தினரை அழைக்கிறோம்.

முதலாளிகளின் சிக்கில் பிடிபடாத சாதிக்கும் உள்ளங்களுக்காக சிறு தொழில்கள் என்னும் நூலை உருவாக்க விக்கி நூல்கள் சமுதாயம் திட்டம் கொண்டு உள்ளது. எனவே சிறுதொழில் முனைவோர்களையும், சிறி தொழில் செய்து வெற்றியடைந்தவர்களையும் சிறு தொழில்கள் என்னும் நூலைத் தொகுக்க அழைக்கிறோம்.

சுற்றுச்சூழல் சார்ந்த சிந்தனைகள், பசுமை உலகம் படைக்கும் கனவைக் கொண்டு இருக்கும் பசுமை உள்ளங்களுக்காக சுற்றுச்சூழல் என்னும் நூலைத் தொடங்க உள்ளோம். மேல் காணும் மூன்று நூல்களில் எந்த நூலில் தங்களுக்கு விருப்பம் உள்ளதோ அவற்றை தொகுப்பதன் மூலம் ஒரு விவசயிக்கோ, ஒரு சிறு தொழில் முனைவோருக்கோ, ஒரு சுற்றுச் சூழல் விரும்பிக்கோ நீங்கள் உதவ முடியும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டு உள்ளோம்.

எனவே வேளாண்மை, சிறு தொழில்கள், சுற்றுச்சூழல் நூல்களைத் தொகுக்க அனைவரையும் வரவேற்கிறோம்.


தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=விக்கிநூல்கள்:ஆலமரத்தடி&oldid=9333" இலிருந்து மீள்விக்கப்பட்டது