ஃபெய்ன்மன் விரிவுரைகள்/அறிவியலின் நிச்சயமின்மை
இதனை ஆங்கிலத்தில் The Uncertainity of Science - அறிவியலின் நிச்சயமின்மை - என அழைக்கிறோம்.
அறிவியலின் தாக்கமும், தொழில் புரட்சியும்
[தொகு]அறிவியலின் தாக்கம் மற்ற துறைகளில் மனிதனின் சிந்தனையை எவ்வாறு பாதிக்கிறது என்பதுபற்றி நேரடியாக பேச விரும்புகிறேன். இது திரு . ஜான் டேன்ஸ் பிரத்யேகமாக விவாதிக்க விரும்பியது. இந்த விரிவுரையின் முதலாவது பகுதியில் அறிவியலின் இயல்பு- குறிப்பாக அறிவியலில் என்றும் உள்ள " சந்தேகம் " மற்றும் "நிலையற்ற தன்மை "- பற்றி பிரத்யேகமாக விவாதிக்க உள்ளேன். அடுத்ததாக அரசியல் சார்ந்த , குறிப்பாக தேச விரோதிகள் சம்மந்தப்பட்ட கேள்விகளின் மேலும் மற்றும் மதம் சார்ந்த கேள்விகளின் மேலும் விஞ்ஞானபூர்வமான பார்வையின் தாக்கம் பற்றி விவாதிக்க உள்ளேன். மூன்றாவது விரிவுரையில் எனது பார்வையில் சமூகம் எப்படி தெரிகிறது ? -அறிவியல் பார்வை கொண்ட மனிதனுக்கு என்று என்னால் சொல்ல முடியும் ஆனால் "எனக்கு" என்றளவில் மட்டுமே -மற்றும் எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் என்னென்ன சமூக பிரச்சனைகளை உருவாக்கும் என்பதைப்பற்றியும் விவாதிக்க விரும்புகிறேன்.
சரி, மதங்களை பற்றியும் அரசியல் பற்றியும் எனக்கு என்ன தெறியும்?. அண்மையில் இங்கிருக்கும் எனது சில இயற்பியல் துறை நன்பர்களும் இதே போன்று ஒரு கருத்தை கேலியாக தெறிவித்தார்கள் " அட ! உங்களுக்கு இந்த விசயங்களில் எல்லாம் கூட ஆர்வம் இருக்கிறது என்று எங்களுக்கு இப்போது தான் தெறியும், கண்டிப்பாக உங்கள் விரிவுறையில் என்ன சொல்லப்போகிறீர்கள் என்று கேட்க வருவோம்." என்றார்கள். அவர்கள் உண்மையில் சொல்ல வருவது, "இவ்விசயங்களில் எல்லாம் ஆர்வம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள், விரிவுறை என்றெல்லாம் ஆரம்பித்தீர்கள் என்றால் அது நகைச்சுவயில் தான் போய் முடியும்," என்பதே.
எனக்கு மதம் மற்றும் அரசியல் பற்றி என்ன தெரியும்? இயற்பியல் துறைகளில் இருக்கும் பல நண்பர்கள் இங்கே மற்றும் பிற இடங்களில் உள்ளோர் சிரித்தனர், "அவர்கள் என்னிடம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்க விரும்புகிறேன் எனவும் சொல்லிக் கொண்டனர் ஆனால் நான் சொல்ல விளையும் விசயங்கள் பற்றி அறிய ஆர்வமாக இருந்தனரா என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது." நிச்சயமாக, நான் என்ன கூற வருகிறேனோ அதை பகிர்ந்து கொள்ளவே ஆர்வமாக இருக்கிறேன், ஆனால் நான் அவர்களைப் பற்றி பேச எனக்கு தைரியம் இல்லை என்று கூறினேன்.
தனது துறையைப் பற்றி பேசாமல், தனக்கு பரிச்சயம் இல்லாத துறையை பற்றி பேச வருவோர்கள் எல்லாரும் தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்கின்றனர். சில சிறப்பான மனிதர்கள் மட்டுமே அவ்வாறன ஒரு திறமையைப் பெற்று இருக்கின்றனர், இப்படிப் பட்டவர்கள் அவர்களை முட்டாளாகிக் கொள்ளவில்லை என்றும் இங்கு நான் கூற விரும்புகிறேன்.
நான் விவரிக்க விரும்பும் கருத்துக்கள் அனைத்துமே பழைய கருத்துக்களில் உள்ளன. இன்று இரவு நான் என்ன கூறப்போகிறோனோ அவற்றை பதினேழாம் நூற்றாண்டைச் சார்ந்தத தத்துவ ஞானிகள் கூறி விட்டனர் என்பதையும் புதிதாக நான் ஒன்றும் கூறப போவதில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். ஏன் மறுபடியும் அவற்றையெல்லாம் பார்க்கப் போகிறோம்? என்றால், ஏனெனில் புதிய தலைமுறைகள் நிதமும் பிறந்து கொண்டேதான் இருக்கின்றன. ஏனெனில் இவர்கள் அந்த வரலாற்று முக்கியத்துவும் மிக்க கருத்துக்களை அறியாமல் தற்காலத் தலைமுறைகள். இந்த கருத்துக்கள் அனைத்துமே மறைத்து விடக்கூடியவை அல்ல. ஒருவேளை அந்த கருத்துக்களை அளிக்கப் பட வேண்டிய நோக்கம் இல்லாமல் தானாகவே அழிந்து விடக் கூடியவைகள் அல்ல.
பல பழைய எண்ணங்களைப் பற்றி பேச அல்லது மீண்டும் அவற்றை விளக்க வேண்டிய அவசியம் இல்லை, என்ற பொதுவான எண்ணங்கள் தற்போது மாறிவிட்டன எனலாம். ஆனால் அறிவியல் வளர்ச்சியுடன் தொடர்புடைய பிரச்சனைக்குறிய கருத்துக்கள் இன்று வரை என்னைச் சுற்றி காண முடிகிறது. இந்த மாதிரியான குழப்பங்கள் பற்றி யோசிப்பதை பற்றி எவரும் பாராட்டுவதில்லை அல்லது ஊக்குவிப்பதில்லை எனலாம். ஆனால் இப்படி யோசனை செய்தவர்களைப் பற்றி எந்த ஒரு பல்கலைக்கழகமும் பெரும்பாலான மக்களும் வரவேற்கவே செய்கின்றனர். இப்படிப்பட்ட பார்வையாளர்களுக்கு நான் கூறப்போகின்றவைகள் அனைத்தும் தவறாகவே இருக்கலாம்.
ஒரு துறையில் உள்ள கருத்துகளின் தாக்கம் மற்றொரு துறையில் இருப்பதை பற்றி விளக்கும் கடினமான இந்த பேருரை என்னும் கடினமான தொழிலில், இறுதிக் கட்டத்தில் இருக்கின்றன என்பதைப் பற்றி எனக்குத் தெரிகிறது. எனக்கு அறிவியல் பற்றி தெரிந்தவற்றை கூறப போகிறேன். எனக்கு அறிவியல் பற்றிய சிந்தனைகள் மற்றும் அதன் முறைகள், அறிவியலின் அறிவு நோக்கிய மனப்பாங்கு, அறிவியலின் முன்னேற்றம் அவற்றுக்கான ஆதாரங்கள், பற்றியும் இங்கு பேசப் போகிறேன். மற்றும் அடுத்த இரண்டு விரிவுரைகள் என் அறிக்கைகள் மிகவும் மோசமாகப் போகலாம் என்றும் அவற்றில் எனது பெருரைகளின் பார்வையாளர்கள் எண்ணிக்கை மேலும் குறையும் என எண்ணிக்கொண்டு பேருரை ஆற்றப் போகிறேன்.
அறிவியல் என்றால் என்ன?
[தொகு]இந்த வார்த்தை பொதுவாக பின்வரும் மூன்று விசயங்களில் எதேனும் ஒன்றையே கூறுகிறது அல்லது இவைகள் அனைத்தையுமே ஒன்றாக கூறுகிறது எனலாம். எனது இந்த விளக்கம் துள்ளியமாக இருக்கப்பொவதில்லை- நமது வரயறைகள் துல்லியமாக இருக்கவேன்டும் என்றோ நாம் மிகக் துல்லியமாக ஒரு விசயத்தைக் கூற வேண்டுமென்றோ ஒரு போதும் நான் எண்ணுவதில்லை. அறிவியல் என்பது, சில நேரங்களில், புதிய விசயங்கலை கண்டுபிடிப்பதில் உள்ள ஒரு சிறப்பு உத்தியை குறிக்கிறது. சில நேரங்களில் அது நமக்கு முன்பே தெரிந்த விசயங்களில் இருந்து புதியதாக எழும் அறிவைக் குறிக்கிறது. மேலும் சில நேரங்களில் நாம் உருவாக்கிய புதிய சிந்தனைகளால் நமக்கு கிட்டப்பொகும் திறன்களையும் திறமைகளையும் குறிக்கிறது. இதையே தொழில் நுட்பம் என்கிறோம் -" டைம் "பத்திரிக்கையின் அறிவியல் பகுதியைக் காண நேரிட்டால் அதன் 50 விழுக்காட்டிற்கு மேலாக புதிதாக கன்டுபிடிக்கப்பட்டிருக்கும் விசயங்களை பற்றியும் மீதி 50 விழுக்காடு புதிதாய் கிடைத்துள்ள திறன்களால் நிகல்காலத்தில் என்ன விசயங்களைச் செய்து வருகிறோம் மற்றும் வருங்காலத்தில் நாம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைப் பற்றியும் விவாதிப்பதை அறிய முடியும். ஆகையால் பரவலான வரையறையில் அறிவியலும் தொழில் நுட்பமும் ஒன்றாகவே பார்க்கப்படுகின்றன எனலாம்.
இந்த அறிவியலின் மூன்று அம்சங்களையும் நான் தலைகீழ் வரிசையில் விவாதிக்க விரும்புகிறேன். நான் நீங்கள் செய்யகூடிய புதிய கண்டு பிடிப்புகளின் மூலம் எனது பேருருரையை தொடங்குகிறேன் - அதாவது தொழில்நுட்பம் சார் அறிவியல். அறிவியலின் மிகத் தெளிவான சிறப்பியல்பு என்பது அதன் பயன்பாட்டுச் சாதனங்கள ஆகும், உண்மையில் அறிவியலின் தொடர் விளைவு என்னவென்றால் பொருள்களை உருவாக்கும் திறன் எனலாம். எனவே இதான் விளைவுகளையும் கூறியாக வேண்டும். முழு தொழில்புரட்சிகள் அனைத்துமே அறிவியல் வளர்ச்சி மூலமே நடைபெறுகிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவினை அளிப்பதும், நோயிலிருந்து மக்களை காப்பருவது அறியல மூலமே சாத்தியம்- உண்மை என்னவென்றால் அடிமை தொழில் முறையையும் அறிவியல் ஒழித்துக் கட்டி உள்ளது, எனவே அறிவியல் என்றால் உருவாக்கும் திறனை அதிகரிப்பது என்றும் கூடக் கூறலாம்.
அறிவியலின் சக்தி கொண்டு உருவாக்க வல்ல திறமையை நன்மைக்கு பயன்படுத்துவதா அல்லது தீமைக்கு பயன் படுத்துவதா என்ற கேள்விக்கு விடை எது இல்லாமல் அறிவியலின் சக்தி பயணித்துக் கொண்டு இருக்கிறது.அறிவியலின் உருப்பெருகத்தை எவ்வாறு நாம் பயன் படுத்துகிறோமோ அதைப் பொறுத்தே நன்மையா தீமையா என்பதை கூற இயலும். உற்பத்தித் திறனை அதிகரிப்பதில் அக்கறை கொண்டு இருக்கும் அதே சமயத்தில் தானியங்கி முறைமையை வெறுக்கிறோம். மருத்துவத் துறையில் முழுமை பெறுவதை மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம், மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக பல உயிர்களை இறப்பிலிருந்து காப்பாற்ற முடியும், மேலும் எவ்வித நோய்களின் மூலம் இறப்பதையும் தடுக்க முடியும். அல்லது அதே அறிவைக் கொண்டு மறைத்து வைக்கப்பட்டு உள்ள சோதனைக்கூடங்களில் பாக்டீரியாக்களை உருவாக்குகின்றனர் இந்த பாக்டீரியாக்களுக்கு இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்துகள் அனைத்தையுமே எதிர்த்து வளரும் தன்மை படைத்தவையாகவும் இருக்கின்றன இத்தகைய கண்டுபிடிப்புகளை எதிர்க்கிறோம். விமான போக்குவரத்துச் சேவையை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் அதே சமயத்தில் போர்களுக்கான விமானங்களை எதிர்க்கிறோம். இரு நாடுகளுக்கான பேச்சு வார்த்தையை வரவேற்கும் அதே சமயத்தில் மூன்றாம் தர நாடுகள் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன் என அத்து மீறி நுழைவதை தடுக்கிறோம். மேலும் விண்வெளியில் மனித அறிவைக் கொண்டு பயணிப்பதை பாராட்டும் அதே பட்சத்தில் அங்கு இருக்கும் சிரமத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் மேற்கண்டவைகள் மற்றும் அணுத் துறையில் ஏற்படும் சமநிலையற்ற வளர்ச்சியிலும் குறிப்பிடத் தகுந்த பிரச்சனைகள் இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அறிவியலில் ஏதேனும் மதிப்பு இருக்கிறதா?
[தொகு]ஏதேனும் ஒன்றை செய்யவல்ல திறமையே ஒன்றின் மதிப்பு என நான் எண்ணுகிறேன். இறுதி வெளியீட்டை நன்மையாகவோ தீமையாகவோ பயன்படுத்தும் விதத்தைக் காட்டிலும், அதனை உருவாக்கும் திறமையையே நான் ஒன்றின் சக்தி அல்லது திறமை என்கிறேன்.
ஒருநாள் ஹவாயில் உள்ள புத்த கோயிலுக்குச் சென்று இருந்தேன். அந்தக் கோயிலில் ஒரு நபர என்னிடம் கூறிய வர்த்த்தைகளை இன்னும் நான் நினைவில் வைத்து உள்ளேன் அது என்னவென்றால் ஒவ்வொரு மனிதனும் தனக்குரிய சொர்க்கத்தின் கதவைத் திறக்கும் சாவியை பெற்று இருக்கிறான். ஆனால் வினோதம் என்னவென்றால் அதே சாவியை வைத்து நரகத்தின் கதவையும் திறக்க முடியும்.
அதைப் போலவே அறிவியலும். சொர்கத்தின் கதவைத் திறக்கும் அதே வழியில், இருக்கும் நரகத்தையும் அறிவியலால் திறக்க முடியும். மேலும் நமக்கு எந்தக் கதவு சொர்கத்தினுடையது அல்லது நரகத்தினுடயது என்பதை நமக்கு அறிவிக்கப்பட்டு இருக்காது. ஒருவேளை அந்தச் சாவியை தூக்கி எரிந்து விட்டால் நாம் சொர்கத்தினுள் நுழைய முடியாது. அல்லது நாம் எவ்வாறு சிறந்த வழிகளில் அந்த சாவியை உபயோகிப்பது என்பதை கண்டறிவதில் பிரச்சனைகள் ஏற்படலாம். உண்மையில் இது ஒரு குறிப்பிடத்தக்க கேள்வி ஆகும், ஆனால் நம்மால் சொர்கத்தின் கதவைத் திறக்கக் கூடிய சாவியின் மதிப்பை முற்றிலும் மறுக்க முடியாது.