அறிவியல் சொற்கள் உருவாக்கச் செயல்முறை

விக்கிநூல்கள் இலிருந்து

விதி ௧: சொல்லில் இயற்த்தன்மை மிகும்[தொகு]

சொற்களை மொழிபெயர்க்க அதிக சிரத்தைக் கொடுக்காமல் சொற்களை மொழிமாற்றம் செய்யவே முயல வேண்டும்.

உ.தா: three-phase current என்னும் சொல்லை மொழி பெயர்த்தால் மும்முனை மின்சாரம் என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் phase என்னும் சொல்லை முனை என்று மொழிபெயர்த்து உபயோகம் செய்யப்படுகிறது. அதற்குப் பதிலாக three-phase current இயற்குணத்தை மொழிபெயர்க்கும் சொல்லை அறிவியல் சொல்லில் புகுத்த வேண்டும். three-phase என்றால் மூன்று நிலைகளில் உள்ள அலைப் பண்பை குறிக்க வேண்டும், அதாவது ஒரு கம்பியில் 0'டிகிரியில் மின்சார அலை ஆரம்பித்தால், இரண்டாவதில் 120'டிகிரியாகவும், மூன்றாவது கம்பியில் 240'டிகிரியாகவும் இருக்கும்; இந்த இயற்பியல் தன்மையைக் கொண்டு ஒரு சொல்ல உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். முந்நிலைமின்னோட்டம் என்னும் சொல்லே சிறந்தது.

விதி ௨: பிரிப்பை விட சொற் சேர்த்தல் நன்று[தொகு]

சொற்களை பிரித்து பிரித்து அறிவியல் சொல் உருவாக்குவதை விட சேர்ப்பே சிறந்தது. உதாரணமாக webservice என்னும் சொல்ல இணைய சேவை என்று சொல் உருவாக்குவதை விட இணையச்சேவை என்று எழுதுவது நலம்.

விதி ௩: முழுப் பொருளுடை சொற்க்குறைப்பு அவசியம்[தொகு]

சொற்களை எந்த அளவிற்கு சுருங்கிய வடிவில் முழுப் பொருளையும் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்குக் கொடுக்க வேண்டும்.

உ.தா: protocol என்பதை நெறிமுறை என்று சொல்படுத்துவதை விட நெறி என்றாலே நாம் எதிர்பார்க்கும் சொல்லாக்கத்தை அடைய முடியும்.. இதைப் போன்றே File Transfer Protocol என்பதை கோப்பு பரிமாற்ற நெறிமுறை என்பதை விட கோப்புப்பரிமாற்றனெறி என்றே கூறலாம்.

விதி ௪: சந்தி வரின் இடைவெளி நீங்கும்[தொகு]

அறிவியல் சொல்லில் இரண்டு வேறுபட்டச் சொற்களுக்கு இடையே சந்தி கொண்டு வந்தால் சொற்களைச் சேர்த்து விட்டு, இடைவெளியை நீக்கி விட வேண்டும்.

உதா. இணையச் சேவை என்று கூறுவதை விட இணையச்சேவை எனச் சேர்க்கப் பட வேண்டும்.