பாலியல் நலம்

விக்கிநூல்கள் இலிருந்து

பருவம் அடையும் வயது - இது மனத்தில் பட்டாம் பூச்சிகள் பறக்கும் வயது. இவ்வயதில் ஆண்களும் பெண்களும் ஹார்மோன்களின் மாறுதல்களால் உடலளவிலும் மனத்தளவிலும் பெரும் மாற்றத்தைச் சந்திக்கிறார்கள். இந்த மாறுதல்கள் அவர்கள் மனதில் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன. இந்த வயதில் தான் எதிர் பாலினர் மீது ஒரு வித ஈர்ப்பும் ஏற்படுகிறது. அவர்களின் சந்தேகங்களைப் போக்கி நல்வழி காட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோர்களின் கடமையாகும். அவர்களின் கேள்விகளுக்குச் சரியான விடை கிடைக்காத போதுதான், தங்களுக்கான வினாவின் பதிலை தாங்களே தேடிச் சென்று, தவறான பழக்கங்களில் சிக்கித் தவிக்கும் நிலை உருவாகிறது. அவர்களுக்கான சிறந்த வழிகாட்டியாக இந்தப் புத்தகம் விளங்கும்.

பாலியல் உறுப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகள், பாலின இனப்பெருக்கம் குறித்த சந்தேகங்கள், கருத்தடை முறைகள், தவறான பாலியல் உறவு மற்றும் பழக்கங்களால் வரும் பால்வினை நோய்கள், அதனைத் தடுக்கும் முறைகள், பாலியல் உரிமைகள் மற்றும் உரிமை மீறல்கள் ஆகியவற்றைத் தெளிவு படுத்துவதன் நோக்கமே இந்தப் புத்தகமாகும்.

SEX EDUCATION
SEX EDUCATION
"https://ta.wikibooks.org/w/index.php?title=பாலியல்_நலம்&oldid=15460" இலிருந்து மீள்விக்கப்பட்டது