பயனர் பேச்சு:Srihari
தலைப்பைச் சேர்srihari, அனைத்து விக்கிமீடியா தமிழ் திட்டங்களிலும் நீங்கள் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது. விக்கிபீடியாவில் சில கட்டுரைகள் வெறும் திருக்குறள்களையும் அவற்றுக்கான பொருளையும் கொண்டுள்ளது. அவற்றை நீங்கள் இங்கு வெட்டி ஒட்டுவது உங்கள் வேலையை எளிதாக்கக்கூடும். விக்கிபீடியா பயனர் magnus austrum இந்தப் பணியை அங்கு செய்தார். அவருடைய பங்களிப்புகளை இந்தப் பக்கத்தின் மூலம் பார்க்கலாம். அதன் மூலம் விக்கிபீடியா திருக்குறள் அதிகாரக்கட்டுரைகளை இனங்கண்டு இங்கு வெட்டி ஒட்டலாம்.--Ravidreams 13:50, 10 நவம்பர் 2005 (UTC)
பாராட்டு
[தொகு]மிகக் குறுகிய காலத்தில் திருக்குறள் நூலை முழுமைப்படுத்தியதற்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள். அவ்வப்பொழுது இத்தளத்தில் சில அடையாளம் காட்டாத பயனர்கள் விஷமத்தனம் செய்து வருகிறார்கள். இதை ஒழுங்குபடுத்தும் பொருட்டு இங்கு யாரேனும் நிர்வாகியாகி தளத்தை பராமரிப்பது அவசியமாகிறது. உங்களுக்கு விருப்பம் இருக்கம் பட்சத்தில் நீங்களே நிர்வாகியாகவோ அதிகாரியாகவோ ஆகலாம். இல்லையெனில், அப்பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன். ஏற்கெனவே இப்பணிகளை பிற தமிழ் விக்கிமீடியா தளங்களில் கவனித்து வருகிறேன். உங்கள் கருத்தை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கவும். நன்றி--Ravidreams 10:29, 14 டிசம்பர் 2005 (UTC)
மின்னஞ்சல் படி
[தொகு]விக்கிபீடியா மற்றும் விக்சனரியில் பல ஆர்வமுடைய விக்கி பண்பாடு அறிந்த பயனர்கள் இருக்கிறார்கள். அதனால், இத்தளங்களை வியாபார நோக்கங்களில் இருந்து காப்பதுடன் ஓர் கட்டமைப்பையும் திட்டமிட்டு வளர்க்க முடிந்திருக்கிறது. விக்கிநூல்கள் தளத்திலும் தங்களை போல் ஆர்வமும் நன்னோக்கும் உடையவர்கள் நிர்வாகிகள் ஆவது அவசியம். முதற்கண் நீங்கள் வெறும் பயனர் தரத்தில் இருந்து நிர்வாகி / அதிகாரி உரிமை பெற வேண்டும். இதற்கு எளிய முறையில் தேர்தல் அறிவித்து உங்களையோ ஆதரவுடைய வேறு எந்த ஒரு பயனரையுமோ தேர்ந்தெடுக்கலாம்.யாரேனும் ஒருவருக்கு இந்த உரிமை கிடைத்தால் தான் விக்கிநூல்கள் இடைமுகத்தை இங்குள்ளது போல முழுவதும் தமிழ்ப்படுத்த முடியும்.
நிர்வாகி அல்லது அதிகாரியின் பணிகள்
- வணிக நோக்கில் உள்ள பக்கங்களையும் பயனற்ற பக்கங்களையும் நீக்குதல்
- புதுப்பயனர்களை வரவேற்று வழிப்படுத்தல்
- இடைமுக இற்றைப்படுத்தல் மற்றும் தமிழாக்கம்.
இது அனைத்து பணிகளையும் நீங்களே இழுத்துப் போட்டு செய்ய வேண்டிய அவசியமில்லை. அது இயலவும் இயலாது. நீங்கள் விக்கிநூல்கள் தளத்திற்கு அடிக்கடி வரும் முறையில், யார் யார் நன்முறையில் பங்களிக்கிறார்களோ அவர்களையும் நிர்வாகியாக்கப் பரிந்துரைத்து பணிச்சுமையை பகிர்ந்து கொள்ள முடியும்.
நீங்களும் உங்கள் துணைவியும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே மதுரைத் திட்டம் மற்றும் இன்ன பிற திட்டங்களில் பல பழந்தமிழ் நூல்கள் வலையேற்றப்பட்டுள்ளன. அவற்றை வெட்டி ஒட்டி உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம். வெறும் பாடல் வரிகளாக அல்லாமல் பாடல் உரையையும் சேர்ப்பீர்களேயானால், மிக்கப் பயனுள்ளதாக இருக்கும். விக்சனரியிலும் உங்கள் இருவர் பங்களிப்பு கண்டு மகிழ்ந்தேன்.
விக்கிநூல்கள் நிர்வாகி தேர்தலுக்கான பணிகளை விரைவில் செய்ய முயல்கிறேன். நன்றி
TWBooks vs TWSource
[தொகு]அண்மையில் தமிழ் விக்கி ஆர்வலர் கோபி அவர்கள் பழந்தமிழ் நூலகளை தமிழ் விக்கிமூலங்களில் இடுவதுதான் நன்று என்று பரிந்துரைத்து இருந்தார். மேலும் விளக்கங்களுக்கு த.வி.பீ. ஆலமரத்தடியை பார்க்கவும். நீங்கள் விக்கிநூல்கள் திட்டத்தில் அக்கறையுடன் செயல்படுவதால், உங்கள் கருத்துக்களை இவ்விடயம் நோக்கி அறிய ஆவல். --Natkeeran 22:25, 13 பெப்ரவரி 2006 (UTC)
update to poll
[தொகு]hi srihari, pls see updates at the page Wikibooks:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள். I have voted for you and also have a made a request at meta wiki to grant beureacrat staus to u.--Ravidreams 08:46, 28 ஏப்ரில் 2006 (UTC)
குறிப்பு
[தொகு]தமிழ் விக்கி நூல்கள் தளத்தில் பலரும் தொடர்ந்து பண்டைத் தமிழ் நூல்களை சேர்த்து வருவது கண்டு மகிழ்ச்சி. எனினும், தமிழ் விக்கி நூல்கள் தளத்தில் அனைவரும் தொகுத்து திருத்தி எழுத வல்ல பாட நூல்கள், உரை நூல்கள் ஆகியவற்றை உருவாக்குவதையே முதன்மையான நோக்கமாக கொண்டிருக்கிறோம். எனவே பண்டை தமிழ் இலக்கியங்களை இந்த தளத்தில் சேர்ப்பது பொருத்தமாக இராது. இது போன்ற தமிழ் இலக்கியச் சேகரிப்புகளை செய்ய தமிழ் விக்கி மூலம் தொடங்கப்பட இருக்கிறது. அத்தளம் தொடங்கப்பட்டவுடன், இங்கு நீங்கள் செய்து வரும் தொகுப்புகளை அங்கு தொடரலாம். அது வரை இங்கு தமிழ் இலக்கிய நூல்களை சேர்ப்பதை நிலுவையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லது, அவற்றை தட்டச்சு செய்து உங்கள் கணினியில் சேர்த்து வைத்திருப்பீர்களானால், பிறகு தமிழ் விக்கி மூலம் தொடங்கப்பட்டவுடன், அங்கு விரைந்து சேர்க்கலாம். ஏற்கனவே, இங்கு பதியப்பட்டிருக்கும் தமிழ் இலக்கியச் சேகரிப்புகள், தமிழ் விக்கிமூலம் தளம் தொடங்கப்பட்டவுடன் அங்கு நகர்த்தப்படும் என்பதையும் கவனத்தில் கொள்க.
விக்கிமீடியா திட்டங்களான wikisource மற்றும் wikinews ஆகியவற்றை தமிழில் தொடங்குவதற்கான வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆர்வமுடைய பயனர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் வழியாக சென்று வாக்களிப்பது, இப்பணிகளை விரைந்து செயல்படுத்துவதற்கு மிகவும் அவசியமாகும். கணிசமான பயனர்களின் வாக்குகள் கிட்டும் வரை இத்தமிழ்ப் பதிப்புகளைத் தொடங்க இயலாது என்பதால், ஒவ்வொரு வாக்கும் பொன்னானதாகும் !
- தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது.
- தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடைபெறுகிறது.
மேற்கண்ட தளங்களில் பயனர் கணக்குகள் உருவாக்கும் போது, உங்கள் தமிழ் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளைத் தாருங்கள்.
நன்றி--Ravidreams 09:13, 4 ஆகஸ்ட் 2006 (UTC)
Your bureaucrat status
[தொகு]Hello. I'm a steward. A new policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus recently. According to this policy, the stewards are reviewing administrators' activity on wikis with no inactivity policy.
You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on tawikibooks, where you are a bureaucrat. Since that wiki does not have its own administrators' rights review process, the global one applies.
If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights, and demonstrate a continued requirement to maintain these rights.
We stewards will evaluate the responses. If there is no response at all after approximately one month, we will proceed to remove your administrative rights. In cases of doubt, we will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact us on m:Stewards' noticeboard.