குடி செயல்வகை
Appearance
திருக்குறள் > குடியியல்
- 1021. கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
- பெருமையின் பீடுடையது இல்.
- 1022. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
- நீள்வினையால் நீளும் குடி.
- 1023. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
- மடிதற்றுத் தான்முந் துறும்.
- 1024. சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
- தாழாது உஞற்று பவர்க்கு.
- 1025. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
- சுற்றமாச் சுற்றும் உலகு.
- 1026. நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
- இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
- 1027. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
- ஆற்றுவார் மேற்றே பொறை.
- 1028. குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
- மானங் கருதக் கெடும்.
- 1029. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
- குற்ற மறைப்பான் உடம்பு.
- 1030. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
- நல்லாள் இலாத குடி.