செடிகள் கொடிகள் மரங்கள்/செடிகள்/கரும்பு
Appearance
கரும்பு ஆறு அடி உயரம் வரை வளரும்.இதில் இருந்து சர்க்கரை,வெல்லம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
அதிக அளவில் கரும்பு பயிர் செய்யும் கியூபா நாடு, உலகின் "சர்க்கரைக் கிண்ணம்" என்று அழைக்கப்படுகிறது.
கரும்பில் , செங்கரும்பு , வெண்கரும்பு என இரண்டு வகை உண்டு.வெண்கரும்பு பெருமளவில் பயிரிடப்பட்டு சர்க்கரை உற்பத்திக்கு பயனபடுத்தப்படுகிறது.அப்படியே தின்பதற்கு செங்கரும்பு ஏற்றது.பொங்கல் திருநாளில் , கரும்பு வாங்கி கதிரவனுக்குப் படைப்பார்கள்.சிறுவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கரும்பு தின்பது வழக்கம்.
கரும்பில் இருந்து சர்க்கரை எடுத்தபின் மிஞ்சும் சக்கையில் இருந்து காகிதம் உற்பத்தி செய்யப்படுகிறது.