ஜில் ஜில் ஜிகர்தண்டா
Appearance
ஜில் ஜில் ஜிகர்தண்டா என்பது ஒரு குளிர்பானமாகும். பரவலாக தமிழகத்தில் கிடைத்தாலும் மதுரைப்பகுதியே இந்த குளிர்பானத்திற்கு புகழ்பெற்றதாகும்.
தேவையானப் பொருட்கள்
[தொகு]- கடற்பாசி - 5 கிராம்
- பால் - 5 கிண்ணம்
- சர்க்கரை - 1 கிண்ணம்
- நன்னாரி சர்பத் - 1 கரண்டி
- பனிக்கூழ்(icecream) - 1 கிண்ணம்
- சவ்வரிசி - 1 சிறு கிண்ணம்
செய்முறை
[தொகு]- பாலை நன்கு காய்ச்சி, வேண்டியளவு சர்க்கரை சேர்த்து ஆறவிட்டு, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ச்சியாக்கவும்.
- ஜவ்வரிசியை பாலில் வேகவைத்து பிறகு ஆறவிடவும்.
- நீரில் ஊறவிட்டு பலமடங்கு பெருக்கிக் கொள்ளவும். கடற்பாசியை கழுவி சுத்தம் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கூழ்ம நிலைக்குக் கொண்டுவரவும்.
- ஒரு கண்ணாடிக் குவலையில் மேற்கூறியபடி தயாரித்த சவ்வரிசி, பால் இட்டு அதன் மீது நன்னாரி சர்பத் விட்டு நன்கு கலக்கி பனிக்கூழை இட்டால் ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்.
குறிப்பு: கடற்பாசிக்கு பதிலாக பாதாம் பிசினை பயன்படுத்தலாம்; நன்னாரி சர்பத்திற்கு பதிலாக ரோஸ் சிரப்பும் பயன்படுத்தலாம்; இதனுடன் சிறிது பால்கோவாவையும் சேர்த்து சுவையைக்கூட்டலாம்.