கனடாவிற்கு குடிவரவு/நடுவன் திறமிகு பணியாளர் திட்டம்
இடைநிறுத்தம்
[தொகு]நடுவன் திறமிகு பணியாளர் திட்டம் (Federal Skilled Worker Program) சூலை 1, 2012 இல் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கனவே கனடாவில் வேலை உள்ளவர்களுக்கோ அல்லது முனைவர் (Phd) ஊற்றில் இருப்பவர்களுக்கோ இது பொருந்தாது. 2013 தொடக்கத்தில் புதிய திட்ட அளவைகளுடன் இத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும். [1]
அறிமுகம்
[தொகு]கனடாவிற்கு திறமிகு பணியாளர்களை குடிவரச் செய்வது கனடிய அரசின் குடிவரவு இலக்குகளில் ஒன்றாகும். இதற்காக நடுவன் திறமிகு பணியாளர் குடிவரவுத் திட்டம் ஒன்றை வைத்துள்ளது. உங்கள் வயது, கல்வியறிவு, மொழியறிவு (ஆங்கிலம் உடன்/அல்லது பிரெஞ்சு), தொழில் அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்தும், நீங்கள் குடிவரத் திட்டமிடும் காலத்தில் கனடாவிற்குத் தேவைப்படுவதாகக் கருதப்படும் பணித் தேவைகளைப் பொறுத்தும் உங்கள் வாய்ப்புக்கள் அமையும். உங்கள் குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரச் சூழ்நிலைகளும் வாய்ப்பைப் பாதிக்கும்.
வேண்டப்படுவன
[தொகு]மேற்குறிப்பிட்டது போல வயது, கல்வியறிவு, மொழியறிவு (ஆங்கிலம் உடன்/அல்லது பிரெஞ்சு), தொழில் அனுபவம் ஆகியவை வேண்டப்படுகின்றன. இளையவர்களுக்கு, தொழில் வல்லுனர்களுக்கு இது சிறந்த வழி. உங்களுக்கு கனடாவில் வேலை உள்ளது என்று காட்ட வேண்டியதில்லை. வேலை பெறலாம், உங்கள் திறங்கள் கனடாவில் பயன்படும் என்பதையே காட்ட வேண்டும்.