6-வது திருமொழி - காசுங்கரையுடை

விக்கிநூல்கள் இலிருந்து
--வெ.ராமன் 09:54, 25 ஏப்ரில் 2006 (UTC)

  நாரண நாமம் நந்தனர்க்கு இட்டழைக்கும்படி உபதேசித்தல்

               கலித்துறை

காசும் கறையுடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
ஆசையினால்*அங்க வத்தப் பேரிடும் ஆதர்காள்!*
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ*
நாயகன் நாரணன் தம்அன்னை நரகம்புகாள்.               1

அங்கொரு கூறை அரைக்குடுப் பதனாசையால்*
மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள்!*
செங்கணெடுமால்! சிரீதரா! என்று அழைத்தக்கால்*
நங்கைகாள்! நாரணன் தம்அன்னை நரகம்புகாள்.           2

உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து*
எச்சம் பொலிந்தீர்காள்! எஞ்செய்வான் பிறர்பேரிட்டீர்?*
பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே
நச்சுமின்* நாரணன் தம்அன்னை நரகம்புகாள்.              3

மானிட சாதியில் தோன்றிற்று ஓர்மானிட சாதியை*
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக் கில்லை*
வானுடை மாதவா! கோவிந்தா! என்று அழைத்தக்கால்*
நானுடை நாரணன் தம்அன்னை நரகம்புகாள்.               4

மலமுடை யூத்தையில் தோன்றிற்று  ஓர்மலவூத்தையை*
மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக் கில்லை*
குலமுடைக் கோவிந்தா! கோவிந்தா! என்று வழைத்தக்கால்*
நலமுடை நாரணன் தம்அன்னை நரகம்புகாள்.               5

நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு*
கூடிய ழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்கதே*
சாடிறப் பாய்ந்த தலைவா! தாமோதரா!என்று
நாடுமின்* நாரணன் தம்அன்னை நரகம்புகாள்.               6

மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு*அங்கு
எண்ண மொன்றின்றி யிருக்கும் ஏழை மனிசர்காள்!*
கண்ணுக் கினிய கருமுகில் வண்ணன் நாமமே
நண்ணுமின்*நாரணன்தம் அன்னை நரகம்புகாள்.             7

நம்பிநம்பி யென்று நாட்டு மானிடப் பேரிட்டால்*
நம்பும்பிம்பு மெல்லாம் நாலுநாளில் அழுங்கிப்போம்*
செம்பெருந் தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால்*
நம்பிகாள்! நாரணன் தம்அன்னை நரகம்புகாள்.              8

ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வதுபோல்*உங்கள்
மூத்திரப் பிள்ளையை என்முகில்வண்ணன் பேரிட்டு*
கோத்துக் குழைத்துக் குணாலமாடித் திரிமினோ*
நாத்தகு நாரணன் தம்அன்னை நரகம்புகாள்.                 9

சீரணிமால் திருநாமமேயிடத் தேற்றிய*
வீரணி தொல்புகழ் விட்டுசித்தன் விரித்த*
ஓரணியொண் தமிழ் ஒன்பதோடொன்றும் வல்லவர்*
பேரணி வைகுந்தத்து என்றும் பேணியிருப்பரே.             10

     பெரியாழ்வார் திருவடிகளே சரணம்