நிரலாக்கம் அறிமுகம்/நிரலாக்கம் என்றால் என்ன?
நிரல்களை அல்லது கணினிக்கான கட்டளைகளை எழுதுவது நிரலாக்கம் ஆகும். வலைத்தளத்தில் இருந்து வானோடம் வரை பல்வேறு தேவைகளுக்கு நிரல்கள் அல்லது மென்பொருட்கள் பயன்படுகின்றன. பெரும்பாலான சூழ்நிலைகளில் தேவைக்குத் தகுந்த மேல் நிலை நிரல் மொழிகளைப் பயன்படுத்தியே நிரலாக்கம் செய்கிறேம்.
நிரல்மொழிகள் தரும் மொழிக் கூற்றுகளைப் அல்லது கட்டகங்களைப்(programming language constructs) பயன்படுத்தி,ஒவ்வொரு வரியாக நிரல்களை எழுதி, நிரலகங்களை (libraries) பயன்படுத்தி பெரும் மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இன்று நிரலாக்கம் ஒரு பெரும் தொழிற்துறை ஆகும். தன்னார்வ அனுபவக் கல்வியாலும், பல்கலைக்கழக அல்லது தொழிற்கல்வியாலும், தொடர் பயற்சியாலும் நிரலாக்கத்தைக் கற்றுக் கொள்ளலாம்.
நீங்கள் செயற்படும் அல்லது செயற்பட விரும்பும் பணிக்களம் சார்ந்து நிரல்மொழிகள் வேறுபடலாம். நிரல் மொழிகளின் வகைகள், இன்று பரந்த பயன்பாட்டில் இருக்கும் நிரல் மொழிகள் பற்றி அடுத்து பாக்கலாம்.