வடிவமைப்புத் தோரணங்கள்/தொழிற்சாலை

விக்கிநூல்கள் இலிருந்து

தொழிற்சாலைச் செயலி வடிவமைப்புத் தோரணம் (Factory Method Design Pattern) என்பது ஒர் உருவாக்க வகைத் தோரணம் ஆகும். இயங்குநேரத்தில் பொருத்தமான ஒரு வகுப்பைப் உருவாக்க தொழிற்சாலைத் தோரணம் பயன்படுகிறது. பல வகை வகுப்புப் பொருட்களை ஒரு பொது இடைமுகத்தின் ஊடாக உருவாக்க இது உதவுகின்றது.

பயன்பாடுகள்[தொகு]

  • குறிப்பாக எந்த வகுப்புத் தேவைப்படும் என்று முதலில் தெரியாமல் இருக்கும் போது.
  • தேவைப்படும் எல்லா வகுப்புக்களும் ஒரே வகை உப வகுப்புக்களாக அமையும் போது.
  • எந்த வகுப்பை உருவாக்குவது என்பதை ஒரு மையம் ஊடாகச் செய்வதற்கு.
  • உப வகுப்புக்களைப் பற்றி பயனருக்கு தெரியாமல் இருக்க.
  • பொருள் உருவாக்கத்தை உறைபொதியாக்கம் செய்ய.

நோக்கம்[தொகு]

ஒரு பொருளை உருவாக்கப் பயன்படும் இடைமுகம் ஒன்றை வரையறை செய். குறிப்பாக எந்த வகுப்பை உருவாக்க வேண்டும் என்பதற்கான பொறுப்பை உப வகுப்புகளிடம் விடு. அதாவது தொழிற்சாலை வகுப்பு பொருத்தமான உப வகுப்பு ஒன்றை உருவாக்கித் தரும். தொழிற்சாலை ஒரு வகை மெய்நிகர் வகுப்புக் கட்டுநர் ஆகும்.

சிக்கல்[தொகு]

கட்டமைப்பு[தொகு]

  • இடைமுகம்
  • இடைமுகத்தை நிறைவேற்றும் உப வகுப்புக்கள்
  • தொழிற்சாலை வகுப்பு
  • வாடிக்கையாளர்

எடுத்துக்காட்டு[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]