இறகுப்பந்தாட்டம்/ஆய்த்த நிலை

விக்கிநூல்கள் இலிருந்து

இறகுப்பந்தாட்டத்தில் ஆய்த்த நிலை என்பது எதிர் ஆட்டக்காரர் பரிமாறும் போது அல்லது நீங்கள் இறகை அடுத்த பின்பு எடுத்துக்கொள்ளும் நிலை ஆகும். ஆய்த்த நிலையில் இருந்தால் வேகமாக நகர்ந்து திருப்பி அடிக்க முடியும். இது பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு நிலையே. விளையாட்டின் போது சூழ்நிலைகளைப் பொறுத்தும், ஒற்றையர் ஆட்டமா இரட்டையர் ஆட்டமா என்பதைப் பொறுத்தும் நிலைகள் வேறுபடும்.

ஒற்றை ஆட்டத்தில் களத்தின் நடுவில் எல்லா மூலைகளில் இருந்தும் சம தூரத்தில் நிற்கவும். உங்கள் முளங்கால்கலைச் சற்று மடித்து உங்கள் எடையை உங்கள் கால் விரல் பந்துகளுக்கு நகர்த்துங்கள் (“on the balls of your toes”). வேகமாக நகர இது முக்கியம். நீங்கள் வலது கை என்றால் உங்கள் வலது கால் சற்று முன்னிற்கு நிற்கலாம்.

உங்கள் கைகளை இடைக்கு சற்று உயர்வாக முன்னுக்கு வைத்திருங்கள். உங்கள் மட்டையை உயர்த்தி முன்னுக்கு வைத்திருங்கள். உங்கள் இடது கையை உயர்த்தி உடல் நிலையை சமன்படுத்தி வைத்திருங்கள்.

வெளி இணைப்புக்கள்[தொகு]