உள்ளடக்கத்துக்குச் செல்

இறகுப்பந்தாட்டம்/மட்டையைப் பிடித்தல்

விக்கிநூல்கள் இலிருந்து

இறகுப்பந்தாட்டத்தில் சூழ்நிலையைப் பொறுத்து வெவ்வேறு வழிகளில் மட்டையைப் பிடிக்க வேண்டும். தவறாக மட்டையைப் பிடித்தால் அடியின் வலுவையும் துல்லியத்தையும் அது குறைக்கும்.

அடிப்படைப் பிடி/முன்கைப் பிடி

[தொகு]

அடிப்படைப் பிடி(basic grip) அல்லது முன்கைப் பிடி(forehand grip) உங்கள் முன்னுக்குவரும், அல்லது தலைக்குமேல் வரும் இறகுகளை அடிக்கப் பயன்படுகின்றது.

மட்டையை விளையாடாத கையால் மட்டையின் முகம் நிலத்தோடு செங்குத்தாகப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் கையை கை குலுக்குவது போல மட்டையின் கைபிடியில் வையுங்கள். இவ்வாறு செய்யும் போது உங்கள் பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கு இடையே V வடிவு அமையும். மட்டையின் கைபிடி உங்கள் விரல்களால் தளர்வாகப் பிடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

பின்கைப் பிடி

[தொகு]

பின்கைப் பிடி (Backhand Grip) பின்கை அடிகளைப் பெரிதும் பயன்படுகிறது.

முன்கைப் பிடி போன்றே, ஆனால் பெருவிரல் மட்டையின் மூன்றாவது தரங்கு (3rd bavel) மேல் நேராக அமர்ந்திருக்கும்.


வெளி இணைப்புக்கள்

[தொகு]