நிரலாக்கம் அறிமுகம்/மாறிகளும் தரவு இனங்களும்
கூற்றுக்கள், கோவைகள், மாறிகள் ஆகியவை மூன்று அடிப்படை நிரல் கூறுகள். மாறி என்பது தரவுகளை சேமிப்பதற்காக கணினியின் நினைவகத்தில் ஒதுக்கப்படும் இடம். இது இதன் குறியீட்டுப் பெயரிருடன் தொடர்புடையது. பின்வரும் சி நிரல் கூற்றைப் பார்க்க:
int பெறுமதி = 100;
மேலே பெறுமதி என்பது மாறியின் குறியீட்டுப் பெயர். int என்பது மாறியின் தரவு இனம். 100 என்பது மாறிக்கு தரப்பட்டு இருக்கும் பெறுமானம்.
தரவு இனம் என்பது தரவுகளை வகைப்படுத்தும் அல்லது ஒழுங்குபடுத்தும் ஒரு முறை ஆகும். முழு எண், தசம எண், இரும எண், எழுத்து, சரம், அணி ஆகியவை சில அடிப்படைத் தரவு இனங்கள் ஆகும். ஒவ்வொரு நிரல் மொழியும் சில அடிப்படைத் தரவு இனங்களைக் கொண்டிருக்கும். தரவு இனத்தைப் பொறுத்து அவை எடுக்கக் கூடிய பெறுமானங்களும், அவற்றுக்குத் தேவையான சேமிப்பகங்களும் அமையும். எ.கா சி மொழியில் int எனப்படும் முழு எண் 4பைட் அளவானது. அதனைப் பயன்படுத்தி 0 இருந்து 4294967295 வரையான ஒரு நேர்ம எண்ணை, அல்லது -2147483648 இருந்து 2147483647 வரையான ஒரு எதிர்ம/நேர்ம எண்ணை சேமிக்கலாம்.
நிலையான வகைப்பாடும் (static typing) இயங்குநிலை வகைப்பாடும் (dynamic typing)
[தொகு]சி, சி++, யாவா, ஒப்செக்டிவ் சி போன்ற மொழிகளில் மாறிகளைப் பயன்படுத்த முன்பு அவை முதலே அறிவிப்புச் (declare) செய்யப்பட வேண்டும். இம் மாதிரி மொழிகளை நிலையான வகைப்பாடு (static typing) மொழிகள் என்பர். பைத்தோன், பி.எச்.பி, ரூபி, போன்ற மொழிகளில் அவ்வாறு செய்யத் தேவை இல்லை. இவை மாறிகளின் பெறுமானங்களைக் கொண்டு தமது வகையைப் பெறும். இவற்றை இயங்குநிலை வகைப்படு (dynamic typing) மொழிகள் என்பர்.
பிழையாக புதிய மாறிகள் அறிமுகப்படுத்தாமல் இருப்பதற்கு நிலையான வகைப்பாடு உதவுகிறது. வேகமாக நிரலாக்கம் செய்ய இயங்குநிலை வகைப்பாடு உதவுகிறது. பெர்ள் போன்ற சில மொழிகளில் இரண்டு மாதிரியும் செய்து கொள்ள முடியும்.
உறுதியான வகைப்பாடும் (strong typed) இளகுவான வகைப்பாடும் (weekly typed)
[தொகு]ஒரு மாறி ஒரு வகையாக வரையறை செய்யப்பட்ட பின்பு பிற வகையோடு, அல்லது வகையாகப் பயன்படுத்த அனுமதிக்காததை உறுதியான வகைப்பாடு என்பர். பைத்தோன், யாவா, சி++ போன்ற மொழிகள் இந்த வகையைச் சார்ந்தவை. இவ்வாறு பிற வகையோடு செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதிப்பதை இளகுவான வகைப்பாடு என்பர். பி.எச்.பி, யாவாசிகிரிப்ட், பெர்ள் போன்ற மொழிகள் இந்த வகையைச் சார்ந்தவை. சில மொழிகளில் இந்தக் கட்டுப்பாடுகளை கடப்பதற்கான வழிமுறைகள் உண்டு. எ.கா சி++ மொழியில் cast செய்வதன் மூலம் ஒரு வகையில் இருந்து இன்னுமொரு வகைக்கு மாற்ற முடியும்.
மொழிகள் வாரியாக
[தொகு]சி++
[தொகு]பி.எச்.பி
[தொகு]பி.எச்.பி இளகுவான, இயங்குநிலை வகைப்பாட்டைக் கொண்டது. எனவே ஒரு மாறிலியை பின்வருமாறு நேரடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாறிகளைக் குறிக்க $ என்ற முன்னுட்டைஇணைத்துக் கொள்ள வேண்டும்.
$எகா = 100;