உள்ளடக்கத்துக்குச் செல்

முகாமைத்துவம்/தொடர்பாடல்

விக்கிநூல்கள் இலிருந்து

தொடர்பாடல் (communication) என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தகவலைக் கடத்துதலாகும். இது பொதுவாக மொழியூடாகவே நடைபெறுகின்றது

மனிதனும் தொடர்பாடலும்

மனிதன் ஒரு தொடர்பாடும் விலங்கு எனக் கூறலாம். மனிதன் எப்போதும் குழுக்களாக வாழவே விரும்புகின்றான். தனியாக வாழ எவரும் விரும்புவதில்லை. குழுவாக வாழும்போது அங்கத்தவரிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமை தேவைப்பட்டதன் காரணமாகவே தொடர்பாடல் முறைகள் உதயமானது. பண்டைய தொடர்பாடல் முறைகள்.

தொடர்பாடல் முறைகளானது மனித வர்க்கத்தின் அளவுக்கு பழைமை வாய்ந்தது என்று கூறலாம். ஆதிகாலத்தில் மனிதன் பின்வரும் முறைகள் மூலம் தொடர்பாடலை மேற்கொண்டான். மேளங்கள் நெருப்பு அங்க அசைவுகள் மொழிகளின் உருவாக்கம்

பின்னைய காலங்களில் மெல்ல மெல்ல மொழிகள் விரிவாகத் தொடங்கின. முதலில் பேச்சு வடிவம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தபோதும் பின்னர் மெல்ல மெல்ல எழுத்து வடிவமும் காலத்தின் தேவையுடன் உருவாக்கப்பட்டது. இன்றைய தொடர்பாடல்

இன்று நாம் என்றுமே இல்லாத அளவுக்கு தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றோம். இதன் உச்சகட்டமாக இணையத்தைப் பயன்படுத்துவதைக் கூறலாம். இன்று இணையம் தொடர்பாடலில் இருத்த பல தடைக்கற்களை தகர்த்தெறிந்து விட்டது எனலாம். தொடர்பாடலில் உள்ள தடைகள்

பின் வரும் காரணிகள் மனித தொடர்பாடலில் பாதிப்பை ஏற்படுத்தவல்லன. மொழி தெரியாமை உள்ளடக்கத்தை தெளிவாகப் புரியாமை வேண்டும் என்று தவறான தகவலைப் பரப்பல் கவனத்தை திசை திருப்பும் காரணிகள் நேரம் போதாமை பெளதீகவியல் காரணிகள் மருத்துவ ரீதியான காரணிகள் நம்பிக்கைகள் உணர்வுகள் தொடர்பாடலின் நோக்கம்

பொதுவாக பின்வரும் காரணங்களே தொடர்பாடல் நடைபெறுவதை ஊக்குவிக்கின்றன: எண்ணங்கள், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள திறமைகளை (Skills) மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள, புதியவற்றை அறிந்து கொள்ள மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த பொழுதுபோக்கு மற்றும் நேரம் செலவிடலுக்காக தொடர்பாடல் நடைபெறும் வழிகள்

பிரதானமாக இரண்டு வழிகளில் தொடர்பாடல் மனிதனால் மேற்கொள்ளப்படுகின்றது. ஒலி -–பேச்சு, ஒலிகளைப் பயன்படுத்தல் காட்சி - படங்கள், குறியீடுகள், நிறங்கள் தொடர்பாடலின் கூறுகள்


தொடர்பாடல் அனுப்புனர் ஊடகம் பெறுனர் ஆகிய மூன்றும் தொடர்பாடலுக்குத் தேவையான முக்கிய கூறுகளாய் உள்ளன. உதாரணத்திற்கு ஒரு கடிதத்தை எடுத்து கொள்ளலாம். இங்கு கடிதம் எழுதுபவர் அனுப்புனர். தபால் சேவையின் மூலம் அனுப்பப் பெறும் கடிதம் ஊடகம். கடிதத்தை பெறுபவர் பெறுனர். இங்கு அனுப்புனரின் கடமை தான் அனுப்பும் செய்தி பெறுனருக்கு புரியும் வகையில் எழுதுவது. பெறுனர் அனுப்புனரின் செய்தியைப் புரிந்து கொள்ளாவிடின் முழுத் தொடர்பாடலும் பயனற்றதாகி விடுகின்றது. திறம்பட்ட தொடர்பாளர்[தொகு]

பல மொழிகளைத் தெரிந்தவர் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவராக இருப்பார் எனக்கூற முடியாது. தமிழை இரண்டாம் மொழியாகப் பயின்ற ஒருவர் தமிழரை விடவும் அழகாக தமிழிலே தொடர்பாடல் செய்யலாம். உறுதிபடப் பேசும் திறமுடையோர் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவர்களாக இருப்பர் என்று கூறலாம்