தமிழியல்

விக்கிநூல்கள் இலிருந்து
விக்கிப்பீடியாவில்
இத்தலைப்பில் கட்டுரை உள்ளது:

தமிழ் மொழியின் இயல்பைக் காட்டுவது தமிழியல். இது தமிழ் இலக்கண இலக்கிய மரபினை ஒட்டி, இக்கால மொழியியலைத் தழுவி அமைந்துள்ள தமிழ்ப்பாங்கு.

மொழி என்பது கருத்தை வெளிப்படுத்த உதவும் ஒரு வாயொலிக்கருவி. கருத்து வாக்கியமாக வெளிப்படுத்தப்படும். வாக்கியத்தில் சொல் இருக்கும். ஒலிக்கப்படும் சொல்லில் பொருள் இருக்கும். சொல் உருவம் பெறும்போது எழுத்து இருக்கும். மொழி ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மரபு உண்டு. எல்லா மொழிகளுக்குமான பொதுமரபும் உண்டு.

தமிழில் இருக்கும் தனி மரபுகளையும், பொதுமைப் பாங்குகளையும் தொகுத்துக் காண்பது மொழியியலுக்குப் பயன்படக்கூடிய ஒரு வரலாறு ஆகும். இது சில தலைப்புகளில் தொகுத்துக் காட்டப்படுகின்றன.

எழுத்து மரபு[தொகு]

மொழியின் மிகச் சிறிய அலகு எழுத்து. ஒலி எழுத்தை phoneme என்பர். எழுதப்படும் உரு எழுத்தை letter என்பர். தமிழ் எழுத்துக்கள் முதலெழுத்து என்றும்,சார்பெழுத்து என்றும் பகுக்கப்பட்டுள்ளன. எழுத்து என்பது முதலெழுத்தையே குறிக்கும். முதலெழுத்து 30. இதில் உயிரெழுத்து 12 மெய்யெழுத்து 18 ஆகியவை உள்ளன. எழுத்து ஒலிக்கும் அளவை மாத்திரை என்பர். மாத்திரை என்பது இயல்பாக கண் இமைக்கும் கால அஅளவு. உயிரெழுத்தில் குறில், நெடில் என்னும் பாகுபாடுகள் உள்ளன. குறில் எழுத்து ஒரு மாத்திரை காலமும், நெடில் எழுத்து இரண்டு மாத்திரை காலமும் ஒலிக்கும். மெய்யெழுத்து அரை மாத்திரை கால அளவு ஒலிக்கும். சார்பெழுத்துக்களைத் கி.மு. நாலாம் நூற்றாண்டுத் தொல்காப்பியம் 3 வகை எனக் காட்டுகிறது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டு நன்னூல் 10 வகையாக்கிக் காட்டுகிறது.

மெய்யெழுத்து வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒலி அழுத்தத்தோடு பிறக்கும் எழுத்துக்களை வல்லினம் என்பர். க ச ட த ப ற ஆகிய ஆறும் வல்லினம். மூக்கொலியோடு பிறக்கும் எழுத்துக்களை மெல்லினம் என்பர். ங ஞ ண ந ம ன ஆகிய ஆறும் மெல்லினம். இந்த இரு வகைக்கும் இடைப்பட்ட ஒலி உடையவை இடையினம். ய ர ல்ல வ ழ ள என்னும் ஆறும் இடையினம்.

இவை தொன்று தொட்டு வரும் மரபு.

எழுத்து மயக்கம்[தொகு]

ஆணும் பெண்ணும் ஒருவரைப் பார்த்து மற்றொருவர் மயங்கி இணைவது போலவும், நண்பர் இருவர் மயங்கி இணைவது போலவும் எழுத்துகள் இணைவது எழுத்து மயக்கம் எனப்படும்.

எழுத்தோடு எழுத்து மயங்குதல்[தொகு]

  1. உயிரெழுத்தை அடுத்து மெய்யெழுத்து வந்து மயங்கும். (ஆண், கண்)
  2. தன் மெய்யோடு தன் மெய் மயங்கும் (பக்கம், அங்ஙனம், உச்சி, மஞ்ஞை, பட்டம், அண்ணம், முத்து, முந்நீர், அப்பா, அம்மா, அய்யா, முல்லை, தெவ்வர், வெள்ளம், வெற்றி, கன்னம் - என்பன. ர ஒற்றும், ழ ஒற்றும் தன் மெய்யோடு தான் மயங்குவது இல்லை. இவை தம்முள் ஒத்து இணைந்தும் மயங்குவது இல்லை)
  3. மெல்லின மெய் தன் ஒலி கொண்ட வல்லின மெய்யோடு (நெடுங்கணக்கு வரிசையில் தனக்கு மேலே உள்ள மெய்யோடு) மயங்கும். (கங்குல், மஞ்சள், நண்டு, பந்து, பம்பரம், நன்று)
  4. டகர மெய்யோடு - கட்க (திருடுக), கட்சிறார் (திருட்டுச் சிறார்), கட்ப (திருட என்னும் வினையெச்சம்)
  5. றகர மெய்யோடு - கற்க, கற்சிறார், கற்ப
  6. லகர மெய்யோடு - செல்க, செல்சிறார், செல்ப, கொல்யானை
  7. ளகர மெய்யோடு - கொள்க, கொள்சிறார், கொள்ப, வெள்யானை
  8. ணகர மெய்யோடு - வெண்கலம், வெண்சாந்து, வெண்ஞாண், வெண்பலி, வெண்மாலை, மண்யாது, மண்வலிது
  9. னகர மெய்யோடு - புன்கண், புன்செய், பொன்ஞாண், பொன்பெரிது, பொன்மாலை, பொன்யாது, பொன்வலிது
  10. ஞகர மெய்யோடு - உரிஞ்யாது {உரிய்ம் தோலாகிய உரிஞ் யாது}
  11. நகர மெய்யோடு - பொருந்யாது (பொருநர் முழக்கும் பொருந் யாது}
  12. மகர மெய்யோடு - திரும்யாது (திரும்பும் திருகாணி யாது), நிலம்வலிது
  13. வகர மெய்யோடு - தெவ்யாது (பகை யாது)
  14. யகர மெய்யோடு - வேய்கடிது, வேய்சிறிது, வேய்தீது, வேய்ஞான்றது, வேய்நீண்டது, வேய்மாண்டது, வேய்யாது, வேய்வலிது
  15. ரகர மெய்யோடு - வேர்கடிது, வேர்சிறிது, வேர்தீது, வேர்ஞான்றது, வேர்நீண்டது, வேர்மாண்டது, வேர்யாது, வேர்வலிது
  16. ழகர மெய்யோடு - வீழ்கடிது, வீழ்சிறிது, வீழ்தீது, வீழ்ஞான்றது, வீழ்நீண்டது, வீழ்மாண்டது, வீழ்யாது, வீழ்வலிது

இக்காலத்தில் பெயர்களையும், பிறமொழிச் சொற்களையும் எழுத்து மயக்கம் இல்லாமல் எழுதிவருகின்றனர். (சென்ட்ரல், சென்ரல், ரத்னம்)

மொழிமுதல்[தொகு]

மொழிமுதல் எழுத்துகள்

மொழியிறுதி[தொகு]

காண்க: மொழியிறுதி எழுத்துகள்

ன் < > ம் ஒலித்திரிபு[தொகு]

ன் எழுத்தில் முடியும் ஒன்பது சொற்கள் மட்டும் ம் எழுத்தாக ஒலித்திரிபு அடைவதில்லை. காண்க

சொல் இணைவு[தொகு]

புணர்ச்சி[தொகு]

முன்னொட்டு[தொகு]

நல்வரவு முதலான உரிச்சொல் ஒட்டு

பின்னொட்டு[தொகு]

வேற்றுமை உருபு போன்றவை

இடையொட்டு[தொகு]

காலம் காட்டும் இடைநிலைகள், எதிர்மறை இடைநிலை, புணர்ச்சிச் சாரியை போன்றவை

தனிநிலை ஒட்டு[தொகு]

மற்றும், ஆகையால், இன்னும், மேலும் - முதலாவை

வாக்கிய அமைதி[தொகு]

பேச்சு என்னும் உரைநடை[தொகு]

செய்யுள் என்னும் யாப்பு[தொகு]

அணிமொழி[தொகு]

பொருள் அமைதி[தொகு]

அகம்[தொகு]

புறம்[தொகு]

நூல் அமைதி[தொகு]

சங்க இலக்கியம்[தொகு]

காப்பியம்[தொகு]

சிற்றிலக்கியங்கள் மொத்தம் 96 வகைகளாகும்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=தமிழியல்&oldid=16106" இலிருந்து மீள்விக்கப்பட்டது