வேளாண்மை நூல்/அறிமுகம்

விக்கிநூல்கள் இலிருந்து

மேம்படுத்தப்பட்ட பசுந்தீவனப்பயிர்கள் சாகுபடி : விவசாயி தானிய மற்றும் பயிறு வகை விதைகளை விதைக்கும் போது தெளிப்பு விதைப்பு முறையைக் கைவிட்டு விதைகளை வரிசை விதைப்பு முறையில் விதைக்க வேண்டும். ஒரு எக்டருக்கு தேவைப்படும் விதைகளைக் கொண்டு கூடுதல் பரப்பளவில் வரிசை முறையில் பயிரிட முடியும். மாவுச்சத்து அதிகம் கொண்ட தீவனப்பயிர்களான கோ.3, கோ.4, தீவன மக்காச்சோளம், தீவனச்சோளம் வகைகளை 3 வரிசைகளிலும், அடுத்து புரதச்சத்து அதிகம் கொண்ட பயிறு வகை தீவனப் பயிர்களான முயல் மசால், வேலிமசால், தட்டைப்பயறு ஆகியவற்றை 1 வரிசையிலும் பயிரிட வேண்டும். மீண்டும் அடுத்த 3 வரிசைகள் கோ.3, கோ.4 தீவன மக்காச்சோளம், தீவனச்சோள வகைகள், அடுத்த 1 வரிசையில் முயல் மசால், வேலி மசால், தட்டைப்பயறு என மீண்டும் மாற்று முறையில் பயிரிட வேண்டும். இவ்வகையில் நிலத்தினை அறுவடை செய்யும் போது மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து பசுந்தீவனம் ஒன்றாகக் கிடைப்பதால் அப்படியே கால்நடைகளுக்கு வழங்கலாம். புரதச்சத்து அளிப்பதால் கால்நடைகளில் சினைப்பிடிப்பு சதவீதம் அதிகரிக்கிறது. கால்நடைகளுக்கு தீவனப்பயிர் சாகுபடி மாதிரி பரப்பளவு 10 சென்ட் . 1) கம்பு நேப்பியர் புல் - கோ.4 - 4 சென்ட் 2) தீவனச்சோளம் கோ.எப்.எஸ்.29 - 1 சென்ட் 3) வேலிமசால் - 3 சென்ட்

கோபாலகிருஷ்ணன் - புதுக்கோட்டை

"https://ta.wikibooks.org/w/index.php?title=வேளாண்மை_நூல்/அறிமுகம்&oldid=14206" இலிருந்து மீள்விக்கப்பட்டது