எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்/எண்ணிமம் என்றால் என்ன?

விக்கிநூல்கள் இலிருந்து

எண்ணிமம் என்பது 1 மற்றும் 0 என்ற இருமக் குறிமுறையைப் பயன்படுத்தி கணினியில் தகவலை குறிக்க, சேமிக்க, செயற்படுத்த, அனுப்பப் பயன்படும் மின்னணுவியல் தொழில்நுட்பத்தைக் குறிக்கின்றது. கணினியின் அனைத்து செயற்பாடுகளும் எண்ணிம முறையில் அமைகின்றது. அதன் இயங்குதளம் முதற்கொண்டு, வலைத்தளம் வரை அனைத்தும் 1 அல்லது 0 ஆகிய எண்களால் அமைந்தவை. 0 மற்றும் 1 ஐ அடிப்படையாகக் கொண்ட இரும இயற்கணிதம் (boolean algebra) கணினியியலுக்கு அடிப்படையாக அமைகிறது.

கணினியில் நீங்கள் பார்க்கும் கோப்பு, ஒளிப்படம், நிகழ்படம், வலைத்தளம், நிகழ்படவிளையாட்டு என அனைத்தும் எண்ணிம வடிவில் அமைந்தவை ஆகும். அவற்றை நீங்கள் சேமிக்க முடியும், மாற்ற முடியும், அழிக்க முடியும், பிணையம் ஊடாக வேறு கணினிக்கு அனுப்ப முடியும். இந்தத் தகவல்களை ஒப்பீட்டளவில் மிகச் சொற்பமான செலவுக்குப் படி எடுக்கலாம், பகிரலாம். இவ்வாறு நாம் தகவல்களை கையாழ உதவுவதாலேயே கணினி வாழ்வின் இன்றையமையாத கருவியாகத் திகழ்கின்றது.