எண்ணிமப் பாதுகாப்பும் அணுக்கப்படுத்தலும்/அணுக்கம்
எண்ணிமப் பாதுகாப்பின் முதன்மை நோக்கம் தகவல் வளங்களை தற்போதும், நெடுங்காலத்துக்கும் பயன்படும் வண்ணம் பாதுகாப்பது ஆகும். பாதுகாக்கப்படும் வளங்கள் இலகுவாகக் கண்டுபிடிக்க, தேட, படிக்க, பகிர்வதற்கான வசதி அணுக்கம் (access) எனப்படுகின்றது. இணையம் ஊடாக, இலவசமாக, கடவுச்சொல் இல்லாமல் அணுக்கம் வழங்குவது மிகவும் பரந்துபட்ட பயனர் சமூகத்தை சென்றடைவதற்கான முக்கிய வழிமுறை ஆகும்.[5]
எண்ணிமப்படுத்தல், பாதுகாப்புச் செயற்பாடுகள் ஊடாக ஆவணகத் தகவல் பொதி உருவாக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றது. இந்த ஆவணக தகவல் பொதியில் இருந்து விநியோகத்துக்காக பொதி உருவாக்கப்பட்டு எண்ணிம நூலகம் (digital library) ஒன்று ஊடாக வெளியிடப்படுகின்றது. பயனர்களின் இடைமுகமாக இந்த எண்ணிம நூலகம் அமைகின்றது.
அணுக்கம் தராமல் பாதுகாப்புச் செய்வது கோயில் அறையில் திருமறைகளைப் பூட்டி கறையான்களுக்கு இரையாக்குவதற்கு ஒப்பானது.