ஈசாப் நீதிக் கதைகள்/மருத்துவர் பூனையும், கோழிகளும்
Appearance
ஒரு சிறிய பண்ணையில் சில நோயாளிக் கோழிகள் இருப்பதை அறிந்த ஒரு பூனை மருத்துவர் போல் வேடமணிந்து மருத்துவருக்குண்டான உபகரணங்களைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு பண்ணைக்குச் சென்றது. அங்கு கோழிகளிடம் அவற்றின் உடல் நலம் எவ்வாறு இருக்கிறது என்று விசாரித்தது. தங்களது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், பூனை அவற்றை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றால் தொடர்ந்து நன்றாக இருக்கும் என்றும் கூறின.
நீதி: உன்னுடைய எதிரிகளை அறிந்து கொள்.