உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசாப் நீதிக் கதைகள்/மீனவர்கள்

விக்கிநூல்கள் இலிருந்து

சில மீனவர்கள் ஒரு பெரிய வலையைக் கட்டி இழுத்துக் கொண்டிருந்தனர். அது மிகவும் கனமாக இருந்ததால் அவர்கள் ஆர்ப்பரித்து நடனமாடினர். தாங்கள் பிடித்தது மிகப் பெரும் அளவாக இருக்கும் என்று எண்ணினர். ஆனால் அவர்களது வலையைக் கரைக்கு இழுத்துக் கொண்டு வந்த போது அதில் மிகச் சில மீன்களே இருந்தன. அதில் பெரும்பாலும் கற்களும், குப்பைகளும் நிரம்பி இருந்தன.


மீனவர்கள் அடுத்து மிகுந்த மன வருத்தம் அடைந்தனர். அவர்கள் என்ன நடந்தது என்பதற்காக மன வருத்தம் அடையாமல், தங்களது எதிர்பார்ப்பு ஏமாற்றமானது என்பதற்காக மன வருத்தமடைந்தனர்.


ஆனால் அவர்களில் ஒருவரான ஒரு முதியவர் மற்றவர்களிடம் கூறினார்:


"நண்பர்களே மன வருத்தம் அடையாதீர்கள். மகிழ்ச்சியும், வருத்தமும் மாறி மாறி வரும். ஒன்று நிறைவேறும் முன்னரே நாம் ஆர்ப்பரித்தால், அதற்கு எதிர்மாறான ஒன்று நடக்கும் என்பதையும் நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும்."


நீதி: வாழ்க்கை என்பது ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டது.