ஈசாப் நீதிக் கதைகள்/சேவல்களும், கௌதாரியும்
ஒரு மனிதன் தன் வீட்டில் சில சேவல்களை வளர்த்து வந்தான். ஒருவர் விற்ற ஒரு கௌதாரியை தன் வீட்டிற்கு வாங்கிக் கொண்டு வந்தான். கௌதாரிக்கு சேவல்களுடன் சேர்த்து உணவிடலாம் என்று எண்ணினான். ஆனால் சேவல்கள் கௌதாரியை கொத்தி துரத்தின. தான் ஒரு வேற்றின உயிரினமாக இருப்பதால் தான் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என ஒரு கனத்த இதயத்துடன் கௌதாரி எண்ணிக் கொண்டது.
ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு சேவல்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிடுவதை கௌதாரி கண்டது. தமக்கு இரத்தம் வரும் வரை அவை சண்டையிடுவதை நிறுத்தவில்லை. இதை கண்ட கௌதாரி தனக்குத் தானே "இந்த சேவல்களால் நான் தாக்கப்படுவதை இனி மேலும் ஒரு புகாராக கூற மாட்டேன். ஏனெனில் இந்த சேவல்களுக்கு ஒன்றின் மீது ஒன்று கூட இரக்கம் இல்லை" என்று கூறிக் கொண்டது.
நீதி: அண்டை வீட்டார் தமது சொந்த பெற்றோரைக் கூட இடர்பாடுக்கு உள்ளாக்குவதில் இருந்து விடுவதில்லை என்பதை அறியும் புத்திசாலி மனிதர்கள் தங்களது அண்டை வீட்டாரின் கோபத்தை எளிதாக சகித்துக் கொள்வார்கள்.